அகத்தி கீரை சாம்பார் - Agathi Keerai Sambar - Sambar Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        அகத்திக்கீரை – 1 கட்டு
·        துவரம் பருப்பு – 1 கப்
·        சின்ன வெங்காயம் – 20
·        தக்காளி – 1
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க
·        கருவேப்பில்லை – 10 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·        அகத்திக்கீரையினை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி கொள்ளவும். தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

·        துவரம் பருப்பினை கழுவி அத்துடன் 2 கப் தண்ணீர் வைத்து பிரஸர் குக்கரில் போட்டு 4 – 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். புளியினை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + தக்காளி சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிறகு, சுத்தம் செய்து வைத்துள்ள அகத்திக்கீரையினை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிரஸர் குக்கரினை திறந்து பருப்பினை நன்றாக மசித்து கொள்ளவும். இத்துடன் வதக்கிய பொருட்கள் + தூள் வகைகள் சேர்த்து 10 – 12 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.·        கடைசியில் பெருங்காயம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். சுவையான சத்தான் அகத்திக்கீரை சாம்பார் ரெடி.


குறிப்பு :

அகத்திக்கீரை வேக கொஞ்சம் நேரம் ஆகும். அதனால் காய்கள் போட்டு வேகவைப்பது மாதிரி இந்த கீரையினையும் வேகவிட வேண்டும்.


6 comments:

Veena Theagarajan said...

healthy sambar.. tasty too

Veena Theagarajan said...

healthy sambar.. tasty too

திண்டுக்கல் தனபாலன் said...

உடலுக்கு மிகவும் பயனுள்ள நல்லதொரு குறிப்பு சகோதரி... ஆனால் இது போல் செய்ததில்லை... நன்றி...

Gita Jaishankar said...

Delicious and healthy sambar, the whole plate looks so yum :)

Magees kitchen said...

Delicious Sambar...Love Agathikeerai...

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள பதிவு.

தில்லியில் அகத்திக் கீரை கிடைப்பதில்லை....

Related Posts Plugin for WordPress, Blogger...