செட்டிநாடு கோழி ரசம் - Chettinadu Kozhi Rasam - Rasam Recipes - Chettinad Special

       print this page Print


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/4 கிலோ (எலும்புடன்)
·        சின்ன வெங்காயம் – 10 -15
·        தக்காளி – 1 பெரியது
·        பூண்டு – 10 பல் தோல் நீக்கியது

கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
·        மிளகு – 1 தே. கரண்டி
·        சீரகம் – 2 தே.கரண்டி
·        பூண்டு – 4 பல் தோலுடன்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        சோம்பு தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை -1, சோம்பு – 1/4 தே.கரண்டி
·        கருவேப்பிலை – 10 இலை

கடைசியில் சேர்க்க : (விரும்பினால் சேர்க்கவும்)
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தக்காளியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.


·        பிரஸர் குக்கரில் சிக்கன் + சின்ன வெங்காயம் + அரைத்த  தக்காளி + பூண்டு + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் +  6 - 7 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        விசில் அடங்கியதும், குக்கரினை திறந்து கொரகொரப்பாக அரைத்த பொருட்கள் + தாளித்த பொருட்கள் சேர்த்து கொதிவரும் வரை வேகவிடவும்.·        கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான காரசாரமான கோழி ரசம் ரெடி.


குறிப்பு :
இதில் எலும்புடன் இருக்கும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சிக்கனை பெரிய பெரிய துண்டுகளாக போடாமல் சிறிய துண்டுகளாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் மிளகினை சேர்த்து கொள்ளவும்.

அதே போல தண்ணீரின் அளவினையும் அதிகம் / குறைத்து கொள்ளலாம்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து விடுவோம்... நன்றி சகோதரி...

Shanthi said...

wonderful..looking yummy..i would like to have some right now...

Sangeetha Nambi said...

Looks yummy !

Vimitha Anand said...

super rasam akka

Related Posts Plugin for WordPress, Blogger...