க்ராப் கேக்ஸ் - Heart Shaped Crab Cakes - Healthy Appetizer - Valentine Special Recipes


எளிதில் செய்ய கூடிய Simpleஆன Appetizer. நீங்கள் செய்து பார்த்து விட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…
          
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        நண்டு சதை பகுதி – 1/4 கிலோ
·        வெங்காயம் – 1 சிறியது
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        செலரி – 1 மேஜை கரண்டி (பொடியாக நறுக்கியது)
·        மயோனேஸ் – 1 மேஜை கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·        மிளகு தூள் – 1 தே.கரண்டி (கொரகொரப்பாக அரைத்தது)
·        ப்ரெட் துண்டுகள் – 2 + 1
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – சிறிதளவு


செய்முறை :
·        வெங்காயம் + பூண்டு + இஞ்சியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        2 ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து தனியாக வைத்து கொள்ளவும். பிறகு மீதம் உள்ள 1 ப்ரெட் துண்டினை போட்டு பொடித்து வைக்கவும்.

·        நண்டுன் சதை பகுதியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் மிக்ஸியில் போட்டு Pulse Modeயில் 1 முறை அடித்து கொள்ளலாம். இல்லை என்றால், துறுவி கொள்ளலாம்)


·        பொடியாக நறுக்கிய நண்டு துண்டுகள் + 2 ப்ரெட் தூள் + வதக்கிய பொருட்கள் + மயோனேஸ் + மிளகுதூள் + உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.·        அவரவர் விரும்பிய வடிவத்தில் அதனை தட்டி கொள்ளவும்.


·        பிறகு, மீதம் உள்ள ப்ரெட்தூளில், தட்டி வைத்துள்ள துண்டுகளை பிரட்டி கொள்ளவும்.

·        இதனை Fridgeயில் 15 – 20 நிமிடங்கள் வைத்து கொள்ளவும். கடாயினை சூடுபடுத்தி, அதில் 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லெடுகளை போட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும்.


·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் வேகவிடவும்.


·        சுவையான சத்தான Crab Cakes ரெடி.


குறிப்பு :
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல Seasoning / Lemon Zest சேர்த்து கொள்ளலாம்.

White Breadயிற்கு பதிலாக whole Multigrain Bread பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


கண்டிப்பாக Celery / Celery salt பயன்படுத்தினால் சூப்பராக இருக்கும். 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Superb...!

Unknown said...

puthumaiyana muraiyil seithu irukunga ... vazhththukkal

Niloufer Riyaz said...

super tasty crab cakes!!

Related Posts Plugin for WordPress, Blogger...