இஞ்சி முறப்பா - Inji Murappa / Inji Mittai


இஞ்சி தினமும் சிறிதளவு சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. இதனை செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்து கொண்டு இருந்தேன். கடைசியில் ப்ரேமாவின் குறிப்பினை பார்த்து செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நன்றி ப்ரேமா…

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        இஞ்சி (Dry Ginger Powder) – 100gm
·        சக்கரை – 1 + 1/2 கப்
·        தண்ணீர் – 1/4 கப்
·        நெய் – 1 தே.கரண்டி


செய்முறை:
·        அடி கணமான கடாயில் சக்கரை + தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.


·        அத்துடன் இஞ்சி பவுடரினை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிவிடவும்.·        3 – 4 நிமிடங்கள் கழித்து இத்துடன் நெய் சேர்த்து கிளறவும்.·        அகலமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் இதனை கொட்டி சமப்படுத்தவும்.


·        5 நிமிடங்கள் ஆறவிட்டு , அதனை சிறிய துண்டுகளை விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
·        சுவையான இஞ்சி முறப்பா ரெடி.


குறிப்பு :
இந்த முறப்பா ஒரு மாதம் வரை கொடாமல் இருக்கும்.


Dry Ginger Powderயிற்கு பதிலாக இஞ்சியினை தோல் சிவி பொடியாக நறுக்கி அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். தண்ணீரினை மட்டும் வடித்து கொண்டு அந்த தண்ணீரினை சக்கரை பாகில் சேர்த்து கிளறவும்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை... செய்து பார்ப்போம்... நன்றி...

ஹுஸைனம்மா said...

வாவ், மை ஃபேவரைட்!! ஆமா, சீனிதானே போட்டுருக்கீங்க, ஆனாலும் பிரவுன் கலரா வருதே?

இஞ்சி அரைச்சு செய்றதையும் (என்ன மாதிரி சோம்பேறிகளுக்காக) செய்முறை போட்டிருக்கலாமே? :-)

இன்ஷா அல்லாஹ், இப்ப கைவசம் இருக்கிற இஞ்சி முரப்பா (ஊர்லருந்து வாங்கி வந்தது) ஸ்டாக் தீர்ந்ததும் செஞ்சுப் பார்க்கிறேன்ப்பா.

Savitha Ganesan said...

Romba nalla irukku Geetha. Namma ooru nyabagangalai kondu varudhu indha post. super.

Abarna said...

மிகவும் அருமை. கண்டிப்பாக செய்து பார்கிறேன் .
சீனி பாகு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

ஆமாம், சக்கரை தான் சேர்த்து இருக்கின்றேன். Dry ginger powderயினால் அந்த கலர் வந்து இருக்கின்றது.

அடுத்த முறை இஞ்சி அரைத்து கண்டிப்பாக போஸ்ட் உங்களுக்காக போடுகிறேன். நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி சவி...

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா...பாகு வர மிதமான்தீயில் சுமார் 4 நிமிடங்கள் இருக்கும்...

Snow White said...

arumaiya seithu irukinga .. nanum try pandren

Manickam sattanathan said...

எளிமைதான்,நீங்கள் சீனியில் செய்துள்ளீர்கள்.வெல்லத்தில் செய்யலாமா?சிறிது ஏலம் கூட சேர்க்கலாமா மேனகா ?

Magees kitchen said...

Wow, super recipe...will try it soon...

Related Posts Plugin for WordPress, Blogger...