மிளகாய் துவையல் - Milagai Thuvayal - Red Chilly Chutney - Side Dish fro Idly/ Dosai - Chutney Recipes


இந்த சட்னியின் ஸ்பெஷலே இதனுடைய ரெட் கலர் தான் . இதனை 2 – 3 நாட்கள் வரை வைத்து கொள்ளலாம். நிறைய எண்ணெய் சேர்த்து கொண்டால் சுமார் 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.

இதில் முதலில் மிளகாயினை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு தான் பூண்டினை சேர்த்து அரைக்க வேண்டும்.

என்னுடைய பெரியம்மா Canada வந்த பொழுது எனக்காக செய்து கொடுத்தாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        காய்ந்த மிளகாய் – 15
·        பூண்டு – 15 பல் (தோல் நீக்கியது)
·        புளி – நெல்லிக்காய் அளவு
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு – தாளிக்க

செய்முறை :
·        காய்ந்த மிளகாயினை கடாயில் போட்டு 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


·        மிக்ஸியில் காய்ந்த மிளகாயினை போட்டு பொடித்து கொள்ளவும்.·        இத்துடன் பூண்டு + புளி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். (நான் புளி போஸ்ட் பயன்படுத்தி இருக்கின்றேன்)·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

·        சுவையான காரசாரமான சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையான இருக்கும்.


11 comments:

Veena Theagarajan said...

look at the color.. I love it.. but normally I fry the garlic..

Uma Ramanujam said...

Love to have it immediately Geetha. Looks very Spicy. Bookmarkuing it to try.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் அருமை... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

Premalatha Aravindhan said...

We too make this chutney. ..yummy combo with dosa...

Priya Anandakumar said...

Love it Geetha, my dad's fav...

Kalpana Sareesh said...

naa urruum chutney..

Vimitha Anand said...

Super kaaram...

Jaleela Kamal said...

kaaraamaaka irukumaa?

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Savitha Ganesan said...

Naanum indha chutney a "Nadhaswaram" serial la paarthen, udane try panniten. super a irukku.

ஹேமா (HVL) said...

Thanks

Related Posts Plugin for WordPress, Blogger...