ஹார்ட் கேக் - Surprise Heart Cake - Valentine Special Recipes - Cake Recipes


எளிதில் செய்ய கூடிய Simple Cake இது. இதனுடைய Specialயே இதன் உள்ளே இருக்கும் Surprise தான். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
White Cake Mix – 1 Packet
Whipped Cream


செய்முறை :
·        கேக் Mixயில் 1 பகுதியினை எடுத்து கொள்ளவும். கேக் செய்ய கொடுத்துள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்து Red Food Colorயினை சேர்த்து கலந்து கொள்ளவும். (என்னிடன் Orange Red Color தான் இருந்தது.அதன் தான் சேர்த்து இருக்கின்றேன். Red Color என்றால் மிகவும் கலர்புல்லாக இருக்கும்.)


·        அவனினை 350Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். கலந்த வைத்துள்ள கலவையினை ஒரு ட்ரேயில் ஊற்றி கொள்ளவும். இதனை, அவனில் வைத்து 12 – 15 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்.


·        Bake செய்த கேக்கினை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும். இதனை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


·        Heart Shape Cutterயினை வைத்து ஒவ்வொரு துண்டுகளில் இருந்தும் வெட்டி கொள்ளவும். இப்படியே அனைத்து துண்டுகளையும் வெட்டவும். (குறிப்பு : மீதம் இருக்கும் துண்டுகளை வைத்து Cake pops செய்யலாம். )


·        ஒரு பாத்திரத்தில், மீதம் இருக்கும் Cake Mixயினை வைத்து கலந்து கொள்ளவும். (கவனிக்க : இது Plain White ஆக தான் இருக்க வேண்டும். கலர் எதுவும் சேர்க்க வேண்டாம்.)


·        கலந்த வைத்துள்ள கலவையினை ஒரு ட்ரேயில் பாதி மட்டும் ஊற்றி கொள்ளவும். அதன் மீது வெட்டி வைத்துள்ள Cake Heartsயினை அடுக்கவும்.

·        பிறகு அதன் மீது மீதம் இருக்கும் கலவையினை ஊற்றவும். (கவனிக்க : இதனை ஊற்றிய பிறகு ட்ரேயினை தட்டி கொள்ளவும். அப்பொழுது தான் அனைத்து இடத்திலும் Cake Batter சமமாக பரவியிருக்கும்.)


·        அவனினை 350Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். ட்ரேயினை, அவனில் வைத்து 12 – 15 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும். (கவனிக்க :அவரவர் அவனின் திறனினை பெருத்து பேக் செய்து கொள்ளவும்.)

·        கேக் சிறிது ஆறியதும் அதன் மீது Icing தடவி கொள்ளவும். விரும்பினால் சிறிது Sprinkles தூவி கொள்ளலாம். Cakeயினை Cut செய்யும் பொழுது அழகாக Hearts தெரியும். மிகவும் சிம்பிளான கேக் ரெடி.


கவனிக்க :
இதில் தான் Readymade White Cake Mix தான் பயன்படுத்தி இருக்கின்றேன்.  விரும்பினால் நீங்களே கேக் மிக்ஸ் செய்து அதில் கலரினை கலந்து கேக் செய்யலாம்.

முதலில் செய்யும்  Color Cake நன்றாக வேகவேண்டும் என்று அவசியம் இல்லை. சுமார் 90% - 95% வெந்தால் போதும். ஏன் என்றால் அதனை திரும்பவும் Bake செய்ய போகிறோம்.


இதே மாதிரி Chocolate கேக்யிலும் செய்யலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல கலர் சேர்த்து கொள்ளலாம்.


4 comments:

Shama Nagarajan said...

super cake

Kalpana Sareesh said...

sooper o sooper..

Savitha Ganesan said...

ROmba interesting cake Geetha. Happy valentine's day in advance.

Asiya Omar said...

Super,ithellaam seyra porumai enakku illaipaa.

Related Posts Plugin for WordPress, Blogger...