ஒலையாப்பம் - கருப்பு இட்லி - Olaiappam - Sweet Idly - Karuppu Idly - Idly Varieties


இந்த இட்லி பாண்டிசேரி ஸ்பெஷல் ரெஸிபி. இதனை கருப்பு இட்லி என்றும் சொல்லுவாங்க…

இந்த இட்லியினை செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,
·        மாவினை அரைக்கும் பொழுது கண்டிப்பாக மிகவும் கெட்டியாக அரைக்க வேண்டும்.
·   மாவினை அரைக்கும் பொழுது தேங்காய் துறுவல் சேர்த்தால் இட்லி சுவையாக இருக்கும்.
·        மாவினை குறைந்தது 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
·      இட்லியினை உடனே செய்ய வேண்டும் என்று விரும்பினால் Yeast சேர்த்து கொள்ளலாம்.
·  வெல்லத்தினை மிகவும் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ளவும்.
·  வெல்லம் சேர்ப்பதால் தான் இட்லி மாவினை கெட்டியாக அரைக்க வேண்டும். அப்பொழுது தான் இட்லி மாவு பதம் சரியாக இருக்கும்.
·  நெய் சிறிது சேர்த்து கொண்டால் மிகவும் சுவையாக மணமாகவும் இருக்கும்.
·        இந்த இட்லியினை 2 – 3 நாட்கள் கூட வைத்து இருந்து சாப்பிடலாம்.
·        இதே மாதிரி வெல்லத்திற்கு பதில் சக்கரை சேர்த்து செய்யலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா…..


அரிசி ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
மாவு புளிக்க : குறைந்தது 8 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் பொருட்கள் :
·        புழுங்கல் அரிசி – 1 கப்
·        இட்லி அரிசி – 1 கப்
·        சாதம் – 1/4 கப்
·        தேங்காய் துறுவல் – 1/4 கப்
·        உப்பு – 3/4 தே.கரண்டி

கரைத்து கொள்ள :
·        வெல்லம் – 1/2 கப்
·        தண்ணீர் – 2 – 3 மேஜை கரண்டி
·        ஏலக்காய் – 2

இட்லி வேகவைக்க முன் மேல் சேர்க்க :
·        பாசிப்பருப்பு – 3 மேஜை கரண்டி
·        தேங்காய் துறுவல் – 3 மேஜை கரண்டி


செய்முறை :
·        அரிசியினை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு அரிசியினை கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். அரிசி + சாதம் + தேங்காய் துறுவல் + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக மைய அரைத்து கொள்ளவும்.

·        மாவினை உப்பு சேர்த்து கரைத்து குறைந்தது 8 மணி நேரம் புளிக்கவிடவேண்டும். (கவனிக்க : மாவு கெட்டியாக இருப்பதால், புளித்த பிறகும் மாவு ரொம்பவும் பொங்கியது மாதிரி தெரியாது. ஆனால் கலக்கி பார்த்தால் பொங்கியது மாதிரி இருக்கும். )


·        பாசிப்பருப்பினை சிறிது நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        வெல்லத்தினை தண்ணீர் + ஏலக்காய் சேர்த்து வாசம் போகு வரை சுமார் 3  - 4 நிமிடங்கள் காய்ச்சி கொள்ளவும்.


·        இதனை வடிகட்டி மாவில் ஊற்றவும். மாவினை நன்றாக கலக்கவும்.


·        இட்லி தட்டில், சிறிது நெய் தடவி மாவினை ஊற்றவும். மாவினை ஊற்றிய பிறகு அதன் மீது தேங்காய் துறுவல் + வறுத்து பாசிப்பருப்பினை தூவவும்.


·        இட்லியினை சுமார் 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான ஸ்வீட் இட்லி ரெடி.
       print this page Print


வடை மோர் குழம்பு - Vadai Mor Kuzhambu - Vadai Thayir Kuzhambu - without Coconut - Easy Kuzhambu Recipes

எளிதில் செய்ய கூடிய மோர் குழம்பு ரெடி. இது என்னுடைய அம்மா செய்யும் Recipe… இதில் தேங்காய் சேர்க்க தேவையில்லை.

வெங்காயம் + தக்காளி + பூண்டு + இஞ்சியினை கொரகொரப்பாக அரைத்து வதக்கி செய்யும் குழம்பு இது.

எங்கள் வீட்டில் செய்யும் மோர் குழம்பு எப்பொழுது வடை சேர்த்து தான் செய்வாங்க…

நீங்களும் இந்த குழம்பினை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        தயிர் – 2 கப்
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

கொரகொரப்பாக அரைக்க :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1 Medium Size
·        பூண்டு – 5 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு

ஊறவைத்து மைய அரைத்து கொள்ள :
·        அரிசி – 1 மேஜை கரண்டி
·        துவரம் பருப்பு – 1 மேஜை கரண்டி
·        பச்சைமிளகாய் – 3
·        சீரகம் – 1 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு – 1/4 தே.கரண்டி , காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·        அரிசி + துவரம் பருப்பினை 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பூண்டு + இஞ்சியினை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.·        ஊறவைத்த பொருட்கள் + சீரகம் + பச்சைமிளகாய் சேர்த்து மைய அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.·        தயிர் + மஞ்சள் தூள் + பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.


·        இத்துடன் 3 கப் தண்ணீர் + பெருங்காயம் + அரைத்த அரிசி விழுது + உப்பு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் கொரகொரப்பாக அரைத்து பொருட்கள் சேர்த்து நன்றாக சிறிய தீயில் வதக்கி கொள்ளவும்.


·        வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, கரைத்து வைத்துள்ள கலவையினை சேர்த்து ஒரு கொதி வரும் வேகவிடவும்.·        வடைகள் சூட்டு சூடான குழம்பில் போட்டு ஊறவிடவும்.
·        கடைசியில் கருவேப்பில்லை + கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

கோவை ஹோட்டல் அங்கணன் பிரியாணி - Kovai Hotel Anaganan Style Biryani - Hotel Style cooking

இந்த பிரியாணியின் ஸ்பெஷலே,

·     இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை.
· பூண்டினை முழு பல்லாகவும், இஞ்சியினை மட்டும் அரைத்து சேர்க்க வேண்டும். 
·     காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்க வேண்டும். (மிளகாய் தூள் எல்லாம் சேர்க்க தேவையில்லை.அதனால் பச்சைமிளகாயினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும். காரம் குறைந்தால் பிரியாணி வேறு சுவை தரும்.) 
·  கொத்தமல்லியினை அரைத்து சேர்க்க வேண்டும். புதினா இலையினை வதக்கும் பொழுது சேர்க்க வேண்டும். 
·     தயிர் அதிகம் சேர்க்க தேவையில்லை. எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்க வேண்டும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        பூண்டு – 10 – 12 பல் தோல் நீக்கியது
·        புதினா இலை – 1 கைபிடி, எலுமிச்சை சாறு – பாதி பழம்
·        நெய், எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 2
·        பச்சைமிளகாய் – 4 கீறி கொள்ளவும்

அரைத்து கொள்ள :
·        முந்திரி – 5 – 6
·        கொத்தமல்லி – 1 கைபிடி
·        வெங்காயம் – 1/2
·        இஞ்சி – 1 இன்ச் துண்டு
·        பச்சைமிளகாய் – 4
·        பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2
கவனிக்க : 1. Original Recipeயில் முந்திரிக்கு பதிலாக கசகசா சேர்த்து இருப்பாங்க…விரும்பினால் அதனையும் சேர்த்து கொள்ளவும். கசகசா – 2 தே.கரண்டி
2. பட்டை, கிராம்பு, ஏலக்காயினை அரைக்காமல் கரம்மசாலாவினை 1/2 தே.கரண்டி சேர்த்து கொள்ளலாம்.

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் , நெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை, கிராம்பு, பிரியாணி இலை

செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எடுத்து கொண்டு மைய அரைத்து கொள்ளவும்.·        வெங்காயத்தினை நீளமாக நறுக்கி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். புதினா இலையினை கழுவி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு, அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        புதினா இலைகள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.


·        இப்பொழுது சிக்கன் + தூள் வகைகள் + தயிர் சேர்த்து வேகவிடவும்.
·        சிக்கன் பாதி வெந்த பிறகு அத்துடன் பச்சை மிளகாய் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.·        அரிசியினை கழுவி கொள்ளவும். பிரஸர் குக்கரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை தண்ணீர் இல்லாமல் போட்டு வதக்கி கொள்ளவும்.

·        இப்பொழுது கொதிக்கும் கலவையினை பிரஸர் குக்கரில் ஊற்றி, உப்பினை அளவினை சரி பார்த்து கொள்ளவும்.


·        சாதம் பாதி வெந்த பிறகு, பிரஸர் குக்கரில் வெயிட் போட்டு மூடி மிகவும் குறைந்த தீயில் சுமார் 20 – 22 நிமிடங்கள் வைக்கவும். ( கவனிக்க : கண்டிப்பாக மிகவும் சிறுதீயில் இருக்க வேண்டும். அதே மாதிரி பிரஸர் குக்கரில் Whistle வர தேவையில்லை. இந்த மாதிரி செய்தால் சாதம் நன்றாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தம் போட்ட மாதிரி இருக்கும். )

·        பிரஸர் குக்கரினை திறந்து எலுமிச்சை சாறு + 1 தே.கரண்டி நெய் ஊற்றி கிளறிவிட்டு மேலும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.·        சுவையான பிரியாணி ரெடி. இதனை ரய்தா, வேகவைத்த முட்டை, சிக்கன் மசாலா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  Print Recipe
Related Posts Plugin for WordPress, Blogger...