சிக்கன் கீமா பெப்பர் பால்ஸ் - Chicken Keema Pepper Balls - Quick chicken Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        Skinless Boneless சிக்கன் – 1/4 கிலோ
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி

சிக்கனுடன் சேர்த்து கொள்ள :
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 மேஜை கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2  தே.கரண்டி + மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
·        கரம்மசாலா – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

கடைசியில் சேர்க்க :
·        சோம்பு பொடித்தது – 1 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1 மேஜை கரண்டி
·        எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி அளவு
·        கொத்தமல்லி , கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :
·        சிக்கனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·        சிக்கனுடன் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மிகவும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை சேர்த்து வேகவிடவும்.


·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.

·        அனைத்து பக்கமும் நன்றாக வெந்த பிறகு சோம்பு தூள் + மிளகுதூள் + கருவேப்பில்லை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடவும்.


·        கடைசியில் கொத்தமல்லி + எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிடவும்.

·        சுவையான எளிதில் செய்ய கூடிய Pepper chicken balls ரெடி. இதனை ரசம், சாம்பார், கலந்த சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அதே மாதிரி இதனை Saladஉடன் அல்லது Snack மாதிரி கூட சாப்பிடலாம்.


குறிப்பு :
சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைக்காமல், Minced chickenயினை கூட பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் நாமே அரைத்து கொள்வது நல்லது.

அரைத்த சிக்கனையினை மிகவும் சிறிய உருண்டைகளைகாக அதாவது ஊறவைத்த கொண்டைக்கடலையினை அளவில் உருட்டினால் நன்றாக இருக்கும். பார்ப்பத்தற்கு Baby Potatoesயினை வறுவல் செய்தது மாதிரி இருக்கும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் மாதிரி காரத்தினை சேர்த்து கொள்ளவும்.


இந்த சிக்கன் வேக மிகவும் குறைந்த நேரம் தான் ஆகும்.


9 comments:

Shanthi said...

Very interesting recipe..looking very cute and elegant...

Vimitha Anand said...

Will surely try this... looks so spicy and yum

Sangeetha Nambi said...

Super tempting !

ஸாதிகா said...

வாவ்..வித்தியாசமாக உள்ளது.

Saratha said...

விளக்க படங்களுடன் செய்முறையும் அருமை!!

Gita Jaishankar said...

Good snacks for kids, looks so good too, going to try this for my kiddos, thanks dear :)

Nirmlaa said...

good 1

Nirmlaa said...

good 1

Savitha Ganesan said...

So interesting. Kids will enjoy.

Related Posts Plugin for WordPress, Blogger...