முள்ளங்கி சாம்பார் - Radish Sambar - Mullangi Sambar - Sambar Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முள்ளாங்கி – 1/4 கிலோ
·        துவரம் பருப்பு – 1 கப்
·        சின்ன வெங்காயம் – 10 – 15
·        தக்காளி – 1
·        கருவேப்பில்லை - சிறிதளவு
·        கொத்தமல்லி – கடைசியில் சேர்க்க
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2  தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

கரைத்து கொள்ள :
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·        தண்ணீர் – 1 கப்
(புளி பேஸ்ட் என்றால் 1/2 தே.கரண்டி சேர்த்து கொள்ளவும்.)

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க


செய்முறை :
·        பிரஸர் குக்கரில் கழுவிய துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

·        பருப்பு வேகும் சமயம், சின்ன வெங்காயத்தில் தோல் நீக்கி கொள்ளவும். தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முள்ளங்கியின மேல் தோலினை நீக்கி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் சேர்த்து தாளித்து அத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் கருவெப்பிலை + தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·        பிரஸர் குக்கரில், வதக்கிய பொருட்கள் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + புளி கரைசல் + வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்து  வேகவிடவும்.·        இப்பொழுது முள்ளங்கியினை கடாயில் போட்டு 3 – 4 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        பெருங்காயம் + வதக்கிய முள்ளாங்கியினை சாம்பாரில் சேர்த்து வேகவிடவும்.


·        கடைசியில் கொத்தமல்லி தூவும். சுவையான முள்ளங்கி சம்பார் ரெடி. இதனை வறுவல், பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :

சின்ன சிவப்பு முள்ளங்கி என்றால் அதனை தோலுடனே சமைக்காலாம்.


5 comments:

சாருஸ்ரீராஜ் said...

tempting geetha pasikuthu

Veena Theagarajan said...

nice flavourful sambar.. love that whole plate

திண்டுக்கல் தனபாலன் said...

செய்முறைக்கு நன்றி சகோதரி...

படங்கள் அனைத்தும் அசத்தல்...

Sangeetha Nambi said...

Parcel it to me pls !

Magees kitchen said...

Tempting platter....

Related Posts Plugin for WordPress, Blogger...