இனிப்பு கொழுக்கட்டை - Sweet Kozhukattai - Festival Special Recipes


இனிப்பு கொழுக்கட்டையினை பண்டிகை பொழுது அனைவரும் செய்வாங்க… இதனை பொதுவாக கார்த்திகை தீபம், மாட்டுபொங்கல், கூழ் ஊற்றும் பொழுது போன்ற சமயங்களில் இந்த பொழுக்கட்டையினை செய்வாங்க…

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….


அரிசி ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
மாவு அரைக்க அரிசியினை காய வைக்க : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பச்சரிசி - 1 கப்
·        வெல்லம் – 1/2 கப்
·        தேங்காய் துண்டு – 2 பெரியது
·        ஏலக்காய் – 2
·        நெய் – 2 மேஜை கரண்டி

செய்முறை :
·        பச்சரிசியினை தண்ணீரில் குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசியினை தண்ணீர் வடித்து ஒரு துணியில் சுமார் 20 – 30 நிமிடங்கள் காயவிடவும். (கவனிக்க : வெயிலில் காயவிட வேண்டாம். நிழலில் காயவிடவும். அரிசி நன்றாக காயகூடாது.)

·        இப்பொழுது அரிசியினை எடுத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·        தேங்காய் துண்டுகள் + ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.


·        1 கப் தண்ணீருடன் வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அதனை Stainerயினை வைத்து வடித்து கொள்ளவும்.·        அரைத்த மாவினை கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். (குறிப்பு : வறுத்த மாவில் இருந்து சிறிது மாவினை தனியாக வைத்து கொண்டால், வெல்லம் தண்ணீர் சேர்த்த பிறகு மாவினை சேர்க்கவோ அல்லது அந்த மாவே போதுமாக இருக்குமா என்று பார்த்து கொள்ளவும்.)


·        வறுத்த மாவு + வடித்த வெல்லம் தண்ணீர் + தேங்காய் துறுவல் + நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


·        அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல உருட்டி கொள்ளவும்.·        இட்லி வேகவைப்பது போல ஆவியில் சுமார் 12 – 15 நிமிடங்கள் வேகவிடவும்.·        எளிதில் செய்ய கூடிய கொழுக்கட்டை ரெடி.


கவனிக்க :
தேங்காய் துறுவலிற்கு பதிலாக பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கொள்ளலாம்.


கொழுக்கட்டை உருட்டும் பொழுது அவரவர் விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளவும்.


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! எவ்வளவு அழகாக செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

Saraswathi Tharagaram said...

ah ah.. unexpected recipe for this season..but looks awesome with divine pictures..

அம்பாளடியாள் வலைத்தளம் said...

படங்களும் பகிர்வும் அருமை ! இனிப்புக் கொழுக்கட்டையை செய்யும்
முறை பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுக்களும் நன்றி கலந்த
வாழ்த்துக்களும் தோழி .

Snow White said...

அருமையாக செய்து இருக்கீங்க .. எனக்கு கொழுக்கட்டை செய்யவே பயமாக இருக்கும் .. இந்த முறை சுலபமாக இருக்கு .. நன்றி ..

Anonymous said...

romba nandri geetha

Gita Jaishankar said...

Lovely pictures and delicious-looking kozukattais :)

Asiya Omar said...

படங்களும் பகிர்வும் அழகு.

Related Posts Plugin for WordPress, Blogger...