பெர்ஸியன் க்ரில்டு சஃப்ரான் சிக்கன் - Persian Grilled Saffron Chicken - Healthy Chicken Recipes


print this page PRINT

இந்த சிக்கனின் சுவையே அதில் சேர்க்கும் குங்குமபூவும் மற்றும் துறுவிய வெங்காயமும் தான்..அதனால் கண்டிப்பாக அதனை சேர்த்து செய்து பாருங்க...

சிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 12 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
சிக்கன் (Boneless, Skinless Chicken Breast) - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது (துறுவி கொள்ளவும்)
தயிர் - 1/2 கப்
குங்குமபூ - 4 - 5 (1 சிட்டிகை அளவு)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகு தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை சுத்தம செய்து Medium size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். குங்குமபூவினை 2 மேஜை கரண்டி சூடான தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

சிக்கனுடன்,  1 தே.கரண்டி எண்ணெய் + துறுவிய வெங்காயம் + தயிர் + ஊறவைத்த குங்குமபூ தண்ணீருடன் + மஞ்சள் தூள் + மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

(கவனிக்க : சிக்கனை அதிகம் நேரம் ஊறவைத்தால் மிகவும் சுவையாகவும், Juicy யாகவும் இருக்கும்)

Grill Panயினை நன்றாக சூடுபடுத்தி அதில் சிறிது எண்ணெய் தடவிய பிறகு, இந்த சிக்கன் துண்டுகளை போட்டு வேகவிடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் வேகவிடவும்.
சுவையான க்ரில்டு சிக்கன் ரெடி. இதனை சாலடாக அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


This recipe is for International Food challenge started by Saras & Shobana and hosted by Savitha for this month..Thanks.

ஸ்வீட் கடை பால்கோவா - வெள்ளை பால்கோவா - Sweet Kadai Palkova - White Palkova - Happy 5th Blog Birthday...


என்னுடைய ப்ளாக் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றது...Its Party time....அத்துடன் அக்‌ஷதாவின் பிறந்தநாளும்...அதனால் எல்லோரும் அக்‌ஷதாவிற்கு பிடித்த இந்த ஸ்வீடினை எடுத்து கொள்ளுங்க...

இது எங்கள் வீட்டில் அம்மா எப்பொழுதும் செய்யும் பால்கோவா. எனக்கு இது ரொம்ப பிடிக்கும். இப்பொழுது இந்தியா சென்ற பொழுது அம்மா செய்து கொடுத்தாங்க...குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

இதில் பால் நன்றாக கொதிக்கும் பொழுது தயிர் சேர்த்தால் திரிந்த மாதிரி இருக்கும். அதில் இருந்து வரும் தண்ணீரினை (Whey water)யினை தனியாக வைத்து கொண்டு திரிந்த பால் இப்பொழுது பன்னீர் மாதிரி இருக்கும். அதில் சக்கரை + நெய் சேர்த்து நன்றாக கிளறினால் பால்கோவா ரெடி.

இதில் தயிர் சேர்த்தால் புளிப்பாக இருக்காது. விரும்பினால் தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஆனால் அப்படி சேர்த்தால் திரிந்த பாலினை தண்ணீரில் 2 - 3 முறை கழிவி கொள்ளவும். இல்லை என்றால் பால்கோவா சிறிது புளிப்பாக இருக்கும்.

கண்டிப்பாக தயிர் சேர்த்து பன்னீர் மாதிரி வந்த பிறகு, மத்து அல்லது Masherயினை வைத்து அதனை பாத்திரத்திலேயே மசித்து கொள்ளவும். அப்பொழுது தான் பால்கோவா சேர்ந்த மாதிரி வரும்.

பால்கோவேவில் சக்கரையினை சேர்த்த பிறகு சிறிது தண்ணீயாக இருக்கும் பொழுதே எடுத்தால் ஆறிய பிறகு மிகவும் கெட்டியாக இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் :
தேவையான பொருட்கள் :
   பால் - 2 லிட்டர்
   தயிர் -  1/2  கப்
   . சக்கரை - 1/2 கப்
   ஏலக்காய் - 1 பொடித்தது (விரும்பினால்)
   நெய் - 1 தே.கரண்டி

செய்முறை :
பாத்திரத்தில் பாலினை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.


பால் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் தயிரினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

இந்த சமயம் பால் திரிந்து அதில் இருந்து பன்னீர் + தண்ணீர் தனியாக வரும். அப்பொழுது மத்து அல்லது Masherயினை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். 

விரும்பினால், இந்த தண்ணீரினை கரண்டி வைத்து எடுத்து விடவும். (குறிப்பு :இந்த தண்ணீரில்நிறைய சத்துகள் இருக்கின்றது. அதனால் அதனை சப்பாத்தி செய்யும் பொழுது அல்லது தயிருடன் கலந்து மோராக குடிக்கலாம்.)

தண்ணீர் எல்லாம் நன்றாக சுண்டிய பிறகு அதில் சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து கிளறவும்.

சக்கரை நன்றாக உறுகி அதில் நன்றாக சேர்த்து பிறகு, சுமார் 5 - 6 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து பாத்திரத்தினை எடுத்து விடவும்.

இது சிறிது தளர்வாக (தண்ணீயாக) இருப்பது மாதிரி தான் தெரியும். ஆனால் கொஞ்சம் நேரம் ஆறிய பிறகு கெட்டியாகவிடவும். இப்பொழுது வெள்ளை கலர் பால்கோவா ரெடி.


கவனிக்க :
தயிரின் புளிப்பினை பொருத்து பால் திரிய நேரம் எடுக்கும். சில சமயம் உடனே திரிந்து விடும், அல்லது கூடுதலாக நேரம் எடுக்கலாம்.

முட்டை பிரியாணி - Egg Biryani - Biryani Varieties - Egg Recipes


print this page PRINT

இந்த பிரியாணியில், முட்டையினை வேகவைத்து சேர்த்து இருக்கின்றேன்.

பிரியாணி செய்து கடைசியில் 2 முட்டையினை சிறிது மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து , முட்டை பொடிமாஸ் (Scrambled Eggs ) மாதிரி செய்து பிரியாணியில் கிளறினால் சூப்பர்ப் சுவையுடன் இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 6
·        பாஸ்மதி அரிசி – 2 கப்
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        தயிர் – 1/2 கப்
·        தேங்காய் பால் – 1 கப்
·        Chicken Stock / Vegetable Stock – 1 கப் / Optional / விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 2
·        பச்சைமிளகாய் - 4
·        புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் + நெய் – 2 மேஜை கரண்டி
·        பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்

செய்முறை :
·        முட்டையினை தண்ணீரில் போட்டு 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து அதில் இருந்து தோலினை நீக்கி தனியாக வைத்து கொள்ளவும். முட்டையினை 2 – 3 இடத்தில் கீறி கொள்ளவும்.


·        அரிசியினை தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

·        முட்டை வேகும் சமயம், வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

·        வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


·        பிறகு, இதில் பச்சைமிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·        இதில் தயிர் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

·        பின்னர் தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.
  

·        இதில் முட்டையினை சேர்த்து மேலும் 2 – 3 வேகவிடவும். இதில் தேவையான அளவு தண்ணீர் + Vegetable/Chicken Stock சேர்த்து கொதிக்கவிடவும்.


·        பிரஸர் குகக்ரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும். 

·        அதில் இந்த முட்டை கலவையினை ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.·        சுவையான முட்டை பிரியாணி ரெடி. இத்துடன் பச்சடி , சிப்ஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


25 விதமான சத்தான ஒட்ஸ் உணவு வகைகள் - 25 Types of Oats Indian Cooking / Different Varieties of oats Cooking / Healthy Samayal

ஒட்ஸினை Main Ingredientஆக வைத்து செய்த உணவு வகைகள்...நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

ஒட்ஸுடன் கோதுமை ரவாயினை சேர்த்து எளிதில் செய்ய கூடிய காலை நேர சிற்றூண்டி இது. இத்துடன் நமக்கு விரும்பிய காய்கள் சேர்த்து கலர்புல்லான உணவாக செய்யலாம். இட்லி என்பதால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். இதற்கு சட்னி என்று தனியாக எதுவும்  செய்ய தேவையில்லை.ஒட்ஸுடன் ரவை + அரிசி மாவு சேர்த்து கலந்து செய்த உடனடி தோசை. இதனை காரமான சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.  இந்த தோசை மாவு சிறிது தண்ணீயாக இருந்தால் தோசை நன்றாக வரும்.


எப்பொழுது பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி, தக்காளி  சட்னி, வெங்காய சட்னி என்று செய்யாமல் வித்தியசமாக இந்த சட்னியினை ட்ரை செய்து பாருங்க…மிகவும் சூப்பராக இருக்கும். சூடான இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பர்ப்…


எங்க வீட்டில் அம்மா, முருங்கைகீரை பொரியல் செய்யும் பொழுது பொரி அரிசியினை ( வறுத்த அரிசி) மிக்ஸியில் போட்டு அத்துடன் பூண்டு + காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சேர்ப்பாங்க…மிகவும் அருமையாக இருக்கும். அதே போல பொரி அரிசிக்கு பதிலாக ஒட்ஸ் சேர்த்து செய்து இருக்கின்றேன்.


கார்னில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. அத்துடன் ஒட்ஸ் சேர்த்து செய்த சத்தான ஹெல்தியான பிஸ்கட் இது. சூடான coffeeயுடன் Evening Snack நேரத்திற்கு ஏற்றது.

எப்பொழுதும் செய்யும் அரிசி மாவில் செய்யாமல் , ஒட்ஸ், பார்லி போன்று சத்தான மாவில் செய்து பாருங்க…ரொம்ப நன்றாக இருக்கும்..வித்தியசமும் பெரியதாக இருக்காது…Dietயில் இருக்கின்றங்க மட்டும் இல்லாமல் அனைவரும் சாப்பிட கூடிய லட்டு இது. இதே மாதிரி கோதுமை மாவு, பார்லி போன்றவையிலும் செய்து பாருங்க…


ஒட்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்து பாருங்க…ரொம்ப Softஆன சப்பாத்தி வரும்…அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் மாதிரி Oats : Wheat Flourயினை 1:2 அல்லது 1:3 ratioவில் கலந்து கொள்ளவும்.


தோக்ளா என்பது இட்லி மாதிரி தான் இருக்கும். நான் ஒட்ஸ் + ரவையினை வைத்து செய்த சத்தான தோக்ளா..இத்துடன் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


எப்பொழுதும் வடையிற்கு மாவு அரைக்கும் பொழுது மாவு சிறிது தண்ணீராகி விட்டால் அத்துடன் அரிசி மாவினை சேர்த்து வடை செய்வோம்…இதில் அரிசி மாவிற்கு பதிலாக ஒட்ஸ் மாவினை சேர்த்து வடை செய்தேன்…மிகவும் நன்றாக இருந்தது…ஒட்ஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால், எளிதில் 5 நிமிடங்களில் செய்ய கூடிய சத்தான பாயசம்…திடீர் விருந்தினர் வந்த சமயத்தில் செய்து அசத்தலாம்.


ஒட்ஸுடன் டோஃபு சேர்த்து செய்த சத்தான vegetarian omelet. எளிதில் செய்ய கூடிய காலை நேர ஆம்லெட்…


கொண்டைக்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல், வேர்க்கடலை சுண்டல் என்று பல வகையான சுண்டல் சாப்பிட்டு இருப்பிங்க…இந்த ஒட்ஸ் சுண்டலினையும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…மிகவும் சத்தான சுண்டல் . அதே மாதிரி செய்த ஒட்ஸ் மசாலா சுண்டல்


சத்தான காலை / மாலை நேர டிபனிற்கு செய்து சாப்பிட கூடிய அடை..இதற்கு சட்னி / சாம்பார் தேவையில்லை..அப்படியே சாப்பிடலாம்.


ஒட்ஸுடன் வாழைப்பழம் சேர்த்து செய்த இனிப்பு பணியாரம்..குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பழம் சேர்க்காமலும் இதனை செய்யலாம்…அப்படி விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும்..


1 கப் ஒட்ஸினை 2 – 3 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொண்டு தோசை ஊற்றினால் தோசை ரெடி. தோசை மாவு தண்ணியாக இருப்பது மிகவும் முக்கியம். அடிக்கடி 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கிய பிறகு தோசை சூடவும்.


தேங்காய் துறுவலிற்கு பதிலாக கடைசியில் பொடித்த ஒட்ஸினை சேர்த்து செய்தால் சுவையான சத்தான பொரியல் ரெடி.


எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ஸ்வீட் இது. இதனை அவரவர் விருப்பதிற்கு ஏற்ற வடிவில் செய்து பறிமாறலாம்.ஒட்ஸுடன் டோஃபு சேர்த்து செய்த சத்தான மாலை நேர ஸ்நாக்..


துறுவிய காளிப்ளவர் / பொடியாக நறுக்கிய காளிப்ளவரினை சிறிது வதக்கி அத்துடன் ஒட்ஸினை Binderயிற்காக கலந்து செய்த கட்லட் இது…நீங்களு செய்து பாருங்க..நன்றாக இருக்கும்.


நன்கு காய்ந்த கார்னை, ரவை போல உடைத்தால் கிடைப்பது தான் Grits. அதில் செய்ய இட்லி இது. இத்துடன் சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


ஒட்ஸுடன் தண்ணீருக்கு பதிலாக சுரைக்காயினை சேர்த்து மிக்ஸியில் அரைத்து செய்த தோசை…


இனிப்பான ஒட்ஸ் பேடா …பண்டிகை காலத்தில் வித்தியசமாக செய்து சாப்பிடலாம்.


பழுத்த வாழைக்காயினை கொழுக்கட்டையின் நடுவில் பூரணம் மாதிரி செய்த இனிப்பு கொழுக்கட்டை. அதனை அரிசி மாவில் செய்யாமல் ஒட்ஸ் சேர்த்து செய்தது…


கத்திரிக்காயினை ஒட்ஸ் மாவில் பிரட்டி செய்த ப்ரை இது…


இதனையும் செய்து பாருங்க...

பாகற்காய் கார குழம்பு - Bittergourd Kara Kuzhambu - Pavakkai kuzhambu - Bitter Gourd Recipes


print this page PRINT

பாகற்காயினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள், 
சக்கரை நோயளிகளுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை காட்டுபடுத்துகின்றது.
•  பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தினை சுத்தம் செய்கின்றது.(Blood Purifier)
புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவதால் நல்ல பயன் கண்டிப்பாக கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.

பாகற்காயில் அதிக அளவு Iron, விட்டமின்ஸ் , பி, சி (Vitamins A, B6, C) , நார்சத்து(Dietary Fibre)இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொலஸ்டிரால் இருக்கின்றது. 100 கிராம் பாகற்காயில், சமைத்தபின்னர் சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாகற்காய் – 1/4 கிலோ
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1
·        பூண்டு – 10 பல் தோல் நீக்கியது

முதலில் தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 2 மேஜைகரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க
·        துவரம் பருப்பு – 1/4 தே.கரண்டி
·        சோம்பு – 1/4 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் -  1 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயினை மிகவும் சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும். (கவனிக்க : பாகற்காயில் பெரிய விதைகள் இருந்தால் அதனை நீக்கிவிடவும். பிஞ்சு விதைகள் இருந்தால் அப்படியே சேர்த்து கொள்ளலாம்.)

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

·        பிறகு பாகற்காயினை சேர்த்து நன்றாக 4 – 5 நிமிடங்கள் வதக்கவும். 

·        தக்காளியினை இதில் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி கொள்ளவும்.


·        தக்காளி வதங்கிய பிறகு, அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

·        இத்துடன் கரைத்த புளி சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும். (உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும்.)


·        கடைசியில் கொத்தமல்லி, கருவேப்பில்லை தூவி குழம்பினை கிளறிவிடவும். சூடான சாதம், தயிர் சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :
கண்டிப்பாக பாகற்காயினை நன்றாக வதக்கவும்.

விரும்பினால் சிறிது வெல்லம் கடைசியில் சேர்த்து கிளறி 1 நிமிடம் வேகவிட்டால் சுவையாக இருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...