ஸ்வீட் கடை பால்கோவா - வெள்ளை பால்கோவா - Sweet Kadai Palkova - White Palkova - Happy 5th Blog Birthday...


என்னுடைய ப்ளாக் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றது...Its Party time....அத்துடன் அக்‌ஷதாவின் பிறந்தநாளும்...அதனால் எல்லோரும் அக்‌ஷதாவிற்கு பிடித்த இந்த ஸ்வீடினை எடுத்து கொள்ளுங்க...

இது எங்கள் வீட்டில் அம்மா எப்பொழுதும் செய்யும் பால்கோவா. எனக்கு இது ரொம்ப பிடிக்கும். இப்பொழுது இந்தியா சென்ற பொழுது அம்மா செய்து கொடுத்தாங்க...குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

இதில் பால் நன்றாக கொதிக்கும் பொழுது தயிர் சேர்த்தால் திரிந்த மாதிரி இருக்கும். அதில் இருந்து வரும் தண்ணீரினை (Whey water)யினை தனியாக வைத்து கொண்டு திரிந்த பால் இப்பொழுது பன்னீர் மாதிரி இருக்கும். அதில் சக்கரை + நெய் சேர்த்து நன்றாக கிளறினால் பால்கோவா ரெடி.

இதில் தயிர் சேர்த்தால் புளிப்பாக இருக்காது. விரும்பினால் தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஆனால் அப்படி சேர்த்தால் திரிந்த பாலினை தண்ணீரில் 2 - 3 முறை கழிவி கொள்ளவும். இல்லை என்றால் பால்கோவா சிறிது புளிப்பாக இருக்கும்.

கண்டிப்பாக தயிர் சேர்த்து பன்னீர் மாதிரி வந்த பிறகு, மத்து அல்லது Masherயினை வைத்து அதனை பாத்திரத்திலேயே மசித்து கொள்ளவும். அப்பொழுது தான் பால்கோவா சேர்ந்த மாதிரி வரும்.

பால்கோவேவில் சக்கரையினை சேர்த்த பிறகு சிறிது தண்ணீயாக இருக்கும் பொழுதே எடுத்தால் ஆறிய பிறகு மிகவும் கெட்டியாக இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் :
தேவையான பொருட்கள் :
   பால் - 2 லிட்டர்
   தயிர் -  1/2  கப்
   . சக்கரை - 1/2 கப்
   ஏலக்காய் - 1 பொடித்தது (விரும்பினால்)
   நெய் - 1 தே.கரண்டி

செய்முறை :
பாத்திரத்தில் பாலினை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.


பால் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் தயிரினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

இந்த சமயம் பால் திரிந்து அதில் இருந்து பன்னீர் + தண்ணீர் தனியாக வரும். அப்பொழுது மத்து அல்லது Masherயினை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். 

விரும்பினால், இந்த தண்ணீரினை கரண்டி வைத்து எடுத்து விடவும். (குறிப்பு :இந்த தண்ணீரில்நிறைய சத்துகள் இருக்கின்றது. அதனால் அதனை சப்பாத்தி செய்யும் பொழுது அல்லது தயிருடன் கலந்து மோராக குடிக்கலாம்.)

தண்ணீர் எல்லாம் நன்றாக சுண்டிய பிறகு அதில் சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து கிளறவும்.

சக்கரை நன்றாக உறுகி அதில் நன்றாக சேர்த்து பிறகு, சுமார் 5 - 6 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து பாத்திரத்தினை எடுத்து விடவும்.

இது சிறிது தளர்வாக (தண்ணீயாக) இருப்பது மாதிரி தான் தெரியும். ஆனால் கொஞ்சம் நேரம் ஆறிய பிறகு கெட்டியாகவிடவும். இப்பொழுது வெள்ளை கலர் பால்கோவா ரெடி.


கவனிக்க :
தயிரின் புளிப்பினை பொருத்து பால் திரிய நேரம் எடுக்கும். சில சமயம் உடனே திரிந்து விடும், அல்லது கூடுதலாக நேரம் எடுக்கலாம்.

12 comments:

Jaypon , Canada said...

பாப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும், பால்கோவாவிற்கு நன்றியும் நீங்க எங்களிடமிருந்து வாங்கிக்கோங்க. பால்கோவா Cup & birthday setup (Y)

Cherub Crafts said...

பால்கோவா ரெசிப்பிக்கு நன்றி கீதா
அக்க்ஷதா குட்டி நல்லா வளர்ந்திட்டா ...Happy Birthday to you and may God bless you dear AKSHATHA .


Angelin

Veena Theagarajan said...

happy birthday to Akshatha.. perfect treat to celebrate the occasion

Sangeetha Nambi said...

Love to taste it right now

Savitha Ganesan said...

Happy blog anniversary and birthday to Akshatha kutty. Pal gova looks so good.

Savitha Ganesan said...

Happy blog anniversary and birthday to Akshatha kutty. Pal gova looks so good.

ADHI VENKAT said...

அக்‌ஷதாவுக்கும் உங்கள் வலைப்பூவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். பால்கோவா சூப்பரா இருக்கு. எடுத்துகிட்டோம்..

Priya Suresh said...

Birthday wishes to Akshatha and happy birthday to ur blog baby, different way of making paalkova Geetha..

Niloufer Riyaz said...

mouthwatering dessert!!

Kalpana Sareesh said...

Birthday wishes n happy bloggiversary.. congrats n tis s perefct simple sweet for the celebration..

GEETHA ACHAL said...

அனைவருக்கும் நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

உங்கள் வீட்டு செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
உங்களது பால்கோவா பகிர்தலுக்கு நன்றிகள் கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...