25 விதமான Non-veg பிரியாணி வகைகள் - 25 Types of Chicken Biryani - Collection of Non-veg Biryani

விதவிதமான சிக்கன் பிரியாணி வகைகள்... நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


வேலூரில் மிகவும் பிரபலமான  ஹோட்டல் பிரியாணி இது. இதில் இஞ்சி விழுது,பூண்டு விழுது என்று தனிதனியாக சேர்க்க வேண்டும். அதே போல சிக்கன் வதங்கிய பிறகு வெங்காயம், தக்காளி சேர்க்க வேண்டும். தயிர் அதிகம் சேர்க்க கூடாது.


மிகவும் பிரபலமான Traditional Arab Rice . மிகவும் கரமாக இல்லாமல் Chicken Flavorயுடன் இந்த சாதம் இருக்கும். இதில் Dry Lemon பயன்படுத்துவதால் வித்தியசமாக சுவையாக இருக்கின்றது.


இந்த பிரியாணியில் சின்ன வெங்காயத்தினை கசகசாவுடன் சேர்த்து அரைத்து சேர்ப்பதால் சூப்பரான சுவையுடன் இருக்கும். அதே மாதிரி இதில் பச்சைமிளகாயினையும் சிறிது அரைத்து சேர்த்து கொள்வோம்.


இந்த பிரியாணியில் பழுத்த தக்காளியினை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதில் தயிர் சேர்க்க தேவையில்லை. சிக்கனுடன் அரிசி சேர்த்த பிறகு தான் புதினா,கொத்தமல்லியினை சேர்க்க வேண்டும்.


இதில் தேங்காய் எண்ணெயினை தாளிக்க பயன்படுத்த வேண்டும். தேங்காய் + கசகசாவுடன் முந்திரி, பாதாம் போன்றவையினை சேர்த்து அரைத்து சமைப்போம். 


ஐம்பெரும் காப்பியங்களில் இந்த உணவினை குறிப்பிட்டு இருக்கின்றாங்க...இதில் சின்ன வெங்காயத்துடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாயினை அரைத்து செய்ய வேண்டும்.

இதில் சிக்கனுடன் சேர்த்து எல்லா பொருட்களையும் ஊறவைத்து கொள்ள வேண்டும். எதையும் வதக்க தேவையில்லை. அதே மாதிரி தக்காளி சேர்க்க தேவையில்லை.

இந்த பிரியாணியில் அனைத்து பொருட்களையும் அரைத்து சேர்க்க வேண்டும். அத்துடன் தேங்காய் பால் சேர்த்து சமைப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


இதில் வெள்ளை மிளகு தூளினை பயன்படுத்த வேண்டும். பூண்டினின் அளவினை விட இஞ்சியின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.


இதில் முள் இல்லாத மீன் துண்டுகளை பயன்படுத்து செய்து இருக்கின்றேன். இதில் முதலில் மீனை சிறிது பெரித்து கொண்டு , அதே எண்ணெயில் பிரியாணி தாளித்து தம் முறையில் செய்ய வேண்டும்.


11. பயேயா - Paella 
இது Spain நாட்டின் National Dish. இது One Pan Meal வகையினை சேர்த்தது... இதில் காய்கள் , சிக்கன் மற்றும் கடல் உணவுகள் சேர்த்து சமைப்பாங்க...இதில் குங்குமபூ (saffron ) சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


இந்த பிரியாணியில் தக்காளி சேர்க்க தேவையில்லை. இதில் வெங்காயத்தினை நறுக்கி சேர்க்காமல், அரைத்து சேர்க்க வேண்டும்.


இதில் சிக்கன் துண்டுகளிற்கு பதிலாக சிக்கன் கீமாவினை பயன்படுத்து செய்து இருக்கின்றோம்.

இதில் தயிரினை கடைசியில் தான் சேர்க்க வேண்டும். சிக்கனை Marinate செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. நாமே அரைத்து செய்யும் பிரியாணி மசாலாவின் மற்றும் தேங்காய் பாலில் சுவை தான் இதில் இருக்கின்றது.

                         
16. ப்ரான் பிரியாணி - Prawn Biryani
இராலினை முதலில் தனியாக வறுத்து கொண்டு பிறகு பிரியாணி மசாலா செய்து அதில் சேர்த்து சாதத்துடன் சேர்த்து கிளறி தம் போட்டு வேகவிடவேண்டும்.17. அலிகார் பிரியாணி - Aligarh Biryani
இதில் புதினா, கொத்தமல்லி அல்லது எந்த வித தூள் வகைகளும் சேர்க்க தேவையில்லை. இதில் நாமே செய்யும் Chicken Stock  சேர்த்து கொண்டு சமைக்க வேண்டும். இந்த பிரியாணி வெள்ளை நிறத்தில் இருக்கும்.18. கோவை ஹோட்டல் அங்கணன் பிரியாணி - Hotel Anganan Biryani

இந்த பிரியாணியில் பூண்டினை முழு பல்லாக தான் சேர்க்க வேண்டும். காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். தக்காளி சேர்க்க தேவையில்லை.19. முட்டை பிரியாணி - Egg Biryani
இதில் முட்டையினை வேகவைத்து , பிறகு அதனை பிரியாணி மசாலாவுடன் சேர்த்து சாதத்தினை வேகவைத்து செய்யும் முறை...


20. நீலகிரி சிக்கன் பிரியாணி - Nilgiri Chicken Biryani
இதில் வெங்காயத்தினை சிறிது தண்ணீரில் வேகவைத்து அத்துடன் புதினா,கொத்தமல்லி, பச்சைமிளகாயினை சேர்த்து அரைத்து மசாலாவில் சேர்க்க வேண்டும். இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை.21. சிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Biryani
சிக்கன் பிரியாணி செய்யும் பொழுது வெரும் தண்ணீர் மட்டும் சேர்த்து செய்வதற்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.22. தலப்பாகட்டி பிரியாணி - Thalapakatti Biryani
இந்த பிரியாணியில் வெங்காயம், தக்காளி, புதினா+ கொத்தமல்லி என்று அனைத்துமே தனி தனியாக அரைத்து கொள்ள வேண்டும். அதே போல ஒரு பொருள் வதங்கிய பிறகு தான் அடுத்ததினை சேர்த்து வதக்க வேண்டும். மிகவும் சுவையான பிரியாணி..23. ஸ்பெஷல் மீன் பிரியாணி - Special Fish Biryani
இதில் மீன் துண்டுகளை இரண்டு முறை கடாயில் போட்டு Shallow Fry முறையில் வறுத்து கொண்டு, பிரியாணி மசாலாவுடன் சாதத்தினை சேர்த்து கிளறி மீன் துண்டுகளை சேர்த்து தம் போட்டு செய்ய வேண்டும். மிகவும் Richஆன சுவையுடன் இருக்கும்.24. சிக்கன் தம் பிரியாணி -  Chicken Dum Biryani
இது மிகவும் சிம்பிளாக ஈஸியான சிக்கன் தம் பிரியாணி முறை. அனைவரும் எளிதில் செய்ய கூடிய முறை.25. பகாறா கானா - Hyderabad Bagara Khana
இதனை சிக்கன் க்ரேவி அல்லது எதாவது குழம்புடன் சேர்த்து சாப்பட மிகவும் சுவையாக இருக்கும். இது சிம்பிள் ஸ்பெஷல் நெய் சோறு மாதிரி இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...1 comments:

Asiya Omar said...

சூப்பர்.ருசியான தொகுப்பு.படங்கள் அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...