திண்டுக்கல் சிக்கன் பிரியாணி - Dindigul Chicken Biryani - Dindugul Biryani - Chicken Recipes


print this page PRINT

இந்த பிரியாணியின் ஸ்பெஷலே,

இதில் வெங்காயம் மட்டும் தான் சேர்க்க வேண்டும். தக்காளி சேர்க்க கூடாது.

இதன் சுவையே நாம் அரைக்கும் பிரியாணி மசாலாவில் தான் இருக்கின்றது.

அத்துடன் தேங்காய் பால் சேர்த்து பிரியாணி செய்கிறோம்.

நன்றி விமிதா...நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 - 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
 பாஸ்மதி அரிசி - 2 கப்
 தேங்காய் பால் - 1 கப்
 எண்ணெய், நெய் - சிறிதளவு

சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ள :
 சிக்கன் - 1/2 கிலோ
 தயிர் - 1/2 கப்
 மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
 மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
 உப்பு - சிறிதளவு

பிரியாணி மசாலா தூள் செய்ய :
 சோம்பு - 1 மேஜை கரண்டி
 பட்டை - 1” துண்டு
 ஏலக்காய் - 2
 கிராம்பு - 2

நறுக்கி கொள்ள :
 வெங்காயம் - 1 பெரியது
 பச்சைமிளகாய் - 3
 இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
 புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
 சின்ன வெங்காயம் - 5 (ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்)

குறிப்பு - விரும்பினால் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும். 

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
 மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
 மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
 உப்பு - தேவையான அளவு

செய்முறை :
 பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.


 வெங்காயத்தினை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து கொள்ளவும்.

 சிக்கனை சுத்தம செய்து அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


 கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் + 1 தே.கரண்டி அளவு நெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன் அதில் ஒன்றும் பாதியுமாக அரைத்த சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


 2 நிமிடங்கள் கழித்து வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.

 இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.


 சிக்கனுடன் தேங்காய் பால் + தேவையான அளவு தண்ணீர் ( சுமார் 3 கப் அளவு ) தேவையான அளவு உப்பு (கவனிக்க : உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும். )சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

 அரிசியினை கழுவி கொண்டு அரிசியினை தண்ணீர் வடித்து கொள்ளவும். குக்கரில் 1 தே.கரண்டி எண்ணெய் + நெய் ஊற்றி அரிசியினை போட்டு 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். அதில் புதினா கொத்தமல்லியினை சேர்க்கவும்.


 இத்துடன் சிக்கன் கலவை சேர்த்து கிளறிவிடவும். 

 பிரஸர் குக்கரினை மூடி Medium Flameயின் 1 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஸர் அடங்கியதும் மூடியினை திறந்து கிளறிவிடவும்.


 சுவையான திண்டுகல் பிரியாணி ரெடி. இதனை வேகவைத்த முட்டை, தயிர் பச்சடி, குருமா போன்றவையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

10 comments:

Savitha Ramesh said...

Romba nalla irukku Geetha. Try panren.

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் எப்போது எங்கள் ஊருக்கு வந்தீர்கள்...!?

nandoos Kitchen said...

super biryani!

Premalatha Aravindhan said...

Too tempting geetha, cant resist here☺

Priya Suresh said...

Intha briyani pathaale pasikuthu..So tempting.

Farin Ahmed said...

மிக அருமையான பிரியாணி அக்கா

Nirmlaa said...

உங்களின் செய்முறை புரியும்படி உள்ளது...மிகவும் நன்றி

Nirmala

Nirmlaa said...

உங்களின் செய்முறை புரியும்படி உள்ளது...மிகவும் நன்றி

Nirmlaa said...

உங்களின் செய்முறை புரியும்படி உள்ளது...மிகவும் நன்றி

nirmala said...

உங்களின் செய்முறை புரியும்படி உள்ளது...மிகவும் நன்றி

Nirmala

Related Posts Plugin for WordPress, Blogger...