டூட்டி ப்ரூட்டி - Homemade Tutti Frutti Recipe - Candied Fruits / Dry Fruit Mix for Bakingprint this page PRINT

வீட்டிலேயே எளிதில் செய்ய கூடிய Tutti Frutti இது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற size & Colorயில் இதனை செய்யலாம்.

இந்த Tutti Fruttiயினை சேகரி செய்யும் பொழுது சேர்த்தால் நன்றாக இருக்கும். அதே மாதிரி Dil Pasand, Coconut Buns, Fruit Cake, Christmas Cake போன்றவையினை செய்யும் பொழுது சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதனை பப்பாளி காயில் இருந்து செய்து இருக்கின்றேன். (பப்பாளி காய். பப்பாளி பழம் அல்ல). விரும்பினால் இதில் Vanilla Essence 1 - 2 துளி சேர்த்து கொள்ளலாம். 

இதற்கு கண்டிப்பாக நல்ல Brand Color பவுடரினை சேர்க்கவும் அப்பொழுது தான் கலர் காயந்த பிறகு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மஞ்சளா...

செய்ய தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
காய தேவைப்படும் நேரம் : 1 - 2 நாள்
தேவையான பொருட்கள் :
  .  பப்பாளி காய் - 1 (பொடியாக நறுக்கியது சுமார் 3 கப்)
  .  சக்கரை - 1 கப்
  .  Food Colors - Orange, Green, Yellow, Pink


செய்முறை :
 பப்பாளி காயின் தோல் + விதைகளை நீக்கி கொள்ளவும்.

 அதன்பிறகு அதனை மிகவும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் தண்ணீரில் வெட்டி வைத்துள்ள சிறிய துண்டுகளை போட்டு 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

 அடுப்பில் இருந்து பாத்திரத்தினை எடுத்து தனியாக வைக்கவும்.  தண்ணீரில் அப்படியே பப்பாளி துண்டுகள் மேலும் 3 - 4 நிமிடங்கள் இருக்கட்டும்.


 பிறகு அதில் இருக்கும் தண்ணீர் எல்லாவற்றினையும் வடிகட்டி கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் 1 கப் சக்கரை + 1 கப் தண்ணீர் ஊற்றி சக்கரை கரையும் வரை வேகவிடவும்.

 அதன் பிறகு அதில் வடிக்கட்டி வைத்து இருக்கும் பப்பாளியினை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை வேகவிடவும். (அதாவது சக்கரை ஒரு கம்பி பதம் வரும் வரை வேகவிடவும். விரும்பினால் இந்த சமயம் Vanilla Essence கலந்து கொள்ளலாம்.)


 பிறகு 4 கப்பில் தனி தனியாக வைத்து விரும்பிய கலர் சேர்த்து கலந்து கொள்ளவும். (கவனிக்க : அவரவர் விருப்பத்திற்கு கலர் சேர்த்து கொள்ளலாம்.)

 அதனை அப்படியெ சுமார் 12 - 24 மணி நேரம் ஊறவிடவும். (இப்படி ஊறவைப்பதால் கலர் பப்பாளியுடன் நன்றாக கலந்து இருக்கும்.)


 பிறகு ஊறிய துண்டுகளை தனி தனி தட்டில் உலறவிடவும் / காயவிடவும். (குறிப்பு : Fanயிற்கு அடியில் /  Wire Rackயில் வைத்தால் சீக்கிரமாக காய்ந்துவிடும்.சுமார் 1 நாள் ஆகும் இது நன்றாக காய)

 நன்றாக காய்ந்த பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். விரும்பினால் சிறிது Honeyயினை காயந்த துண்டுகளுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

 எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய Tutti Frutti ரெடி. 
5 comments:

Selvi Srinivasan said...

super

Priya Suresh said...

Supera pannitinga, homemades are always the best.

Asiya Omar said...

super.

Savitha Rajasekar said...

how long will it stay good???

GEETHA ACHAL said...

Its stays good for more than 3 - 4 months in fridge. You need to dry the tutti frutti completely.
Even little moisture destroys the shelf time. so care to be taken to dry well.

Related Posts Plugin for WordPress, Blogger...