க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ் ப்ரை - TGI Friday's Crispy Green Beans Fry Recipe - Restaurant Style Recipe


print this page PRINT

TGI Friday's மிகவும் பிரபலமான Crispy Breans Fry மாதிரி வீட்டிலேயே செய்தது...குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...

பொதுவாக இதனை French Fries மாதிரி எண்ணெயில் தான் பொரிப்பாங்க...நான் எண்ணெயில் பொரிக்காமல் அவனில் பேக் செய்தேன்...மிகவும அருமையாக இருந்தது.

இதில், நான் Bread Crumbsயிற்காக, 3 துண்டுகள் Whole grain breadயினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்டேன். அத்துடன் Parmesan cheeseயினையும் சேர்த்தேன். (விரும்பினால் Italian Seasoning / அல்லது விருப்பமான Seasoningயினை சேர்த்து கொள்ளலாம்.)

பீன்ஸியினை சூடான தண்ணீரில் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிட்ட பிறகு Ice waterயில் போடுவதினை Blanching Process என்று குறிப்பிடுவாங்க...இதனால் பீன்ஸின் நிறம் மாறாமல் இருக்கும். அதே போல் பீன்ஸ் மேலும் வேகாமல் (Cooking Processயினை) நிறுத்துவிடும்.

பீன்ஸினை Breadcrumbயில் பிரட்டிய பிறகு Freezerயில் வைப்பதால் பீன்ஸினை எண்ணெயில் பொரிக்கும் பொழுது பிரட்க்ரம்ஸ் கீழே விழாது.

இது மாதிரி செய்து வைத்து கொண்டால் தேவைபப்டும் நேரம் எடுத்து பொரித்து கொள்ளலாம்.

நான் இதனை எண்ணெயில் பொரிக்காமல், அவனில் 400 Fயில் 12 - 15 நிமிடங்கள் வேகவிட்டேன். இதனை Ketchup, Ranch , Dip, போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

Preparation Time : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
    .  பீன்ஸ் - 1/2 கிலோ
    .  மைதா மாவு - 1/2 கப்
    .   ப்ரெட் க்ரம்ஸ் - 3 கப்
    .  பார்மஜான் சீஸ் - 1/2 கப்
    .  உப்பு - தேவையான அளவு
    .  எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :


.  பீன்ஸை சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

.  தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் இந்த பீன்ஸ் + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

.  பீன்ஸ் வேகும் சமயம்,வேறொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வைத்து கொள்ளவும். அதில் வேகவைத்த பீன்ஸினை தண்ணீர் இல்லாமல்போட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். 


(கவனிக்க : குளிர்ந்த தண்ணீருக்கு Ice Cubes போட்டு கொள்ளவும். ) இப்படி செய்வது Blanching முறை. இதனால் பீன்ஸ் மேலும் வேகாமல் இருக்கும். அதே மாதிரி கலரும் மாறாமல் இருக்கும்.

.  3 - 4 நிமிடங்கள் கழித்து பீன்ஸினை தண்ணீரில் இருந்து வடிக்கட்டி கொள்ளவும். மைதாவினை 1 கப் தண்ணீர் கலந்து கரைத்து கொள்ளவும். இதனை பீன்ஸ் மீது ஊற்றி பிரட்டி விடவும். (விரும்பினால் இதற்கு பதிலாக egg Whitesயினை பயன்படுத்து கொள்ளலாம்.)


.  Bread Crumbs + Parmesan Cheese  இரண்டினையும் கலந்து கொள்ளவும்.  மைதா மாவில் பிரட்டி வைத்துள்ள பீன்ஸினை எடுத்து அதனை இந்த Bread Crumbs பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

.  இதே போல எல்லா பீன்ஸினையும் செய்து அதனை தனிதனியாக தட்டில் அடுக்கி கொள்ளவும்.


.  பிறகு அதனை அப்படியே Freezerயில் எடுத்து குறைந்தது 1 - 2 மணி நேரம் வைத்து கொள்ளவும். (குறிப்பு : இப்படி Freezerயில் வைப்பதால் எண்ணெயில் பொரிக்கும் பொழுது  Bread Crumbs பீன்ஸில் இருந்து உதிராமல் இருக்கும். )

.  அவனை 400Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். அவனில் வைக்கும் தட்டில் Freezerயில் இருந்து எடுத்து உடனே அடுக்கி கொள்ளவும். அதன் மீது சிறிது எண்ணெயினை Spray செய்து கொள்ளவும். (கவனிக்க : விரும்பினால் எண்ணெயினை காய வைத்து பொரித்து கொள்ளவும்.)

.  இதனை அவனில் வைத்து 400Fயில் சுமார் 15 - 20 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


.  சுவையான சத்தான க்ரீன் பீன்ஸ் ப்ரை ரெடி. இதனை சாஸ் அல்லது Cucumber Raita/Sauce வைத்து பறிமாறவும்.

கவனிக்க :
பீன்ஸின் நுனி, கடைசி பகுதியினை நீக்கிவிடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு பீன்ஸினை போட்டு வேகவிடவும்.

Bread Crumbsயிற்கு பதிலாக Italian Breadcrumbsயினை பயன்படுத்தலாம். அல்லது பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளலாம்.

இதனை Freezerயில் 2 - 3 நாட்கள் முன்னதாக செய்து வைத்து கொள்ளலாம். விருந்தினர் அல்லது குழந்தைகள் School முடிந்து வரும் சமயம் இதனை பொரித்து கொடுக்கலாம்.


Low Fat /Low Calorieயிற்காக இதனை எண்ணெயில் பொரிக்காமல் அவனில் Bake செய்து கொள்ளவும்.3 comments:

Sangeetha Nambi said...

Super yummy ! Bookmarking....

Kalpana Sareesh said...

wow not heard abt it.. too good n yumm

Vijiskitchencreations said...

Yummy. I will try oven version. Thanks Geetha.

Related Posts Plugin for WordPress, Blogger...