கேரளா சம்மந்தி பொடி - Chammanthi Podi Recipe - Kerala Podi Recipes - Friendship 5 Series


print this page PRINT

இது கேரளாவின் ஸ்பெஷல் பொடி. இந்த பொடியில் தேங்காயினை நன்றாக வறுத்து அதனுடைய ஈரபத்தினை நீக்கி பொடிப்பதால் இதனுடைய shelf-Life அதிகம்.

இதில் துறுவிய தேங்காயினை மெதுவாக அடிக்கடி கிளறிவிட்டு வறுக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கவனிக்கவில்லை என்றால தேங்காய் கருகிவிடும். அப்பறம் சுவையே மாறிவிடும்.

தேங்காயினை துறுவியவுடன் வறுக்காமல் அதனை சிறிது நேரம் (சுமார் 1 மணி நேரம் )காயவிட்டு பிறகு வறுத்தால் கொஞ்சம் சீக்கிரமாக(சுமார் 30 நிமிடங்களில்) வேலை முடிந்து விடும்.

Original பொடியில் கண்டிப்பாக சின்ன வெங்காயம், இஞ்சியினை சேர்ப்பாங்க.. நானும் அதே மாதிரி சேர்த்து செய்தேன்..மிகவும் சுவையாக இருந்தது..இதில் வெங்காயம் சேர்த்த மாதிரியே தெரியாது.

இதில் புளிப்பு, காரம், வறுத்த தேங்காய் என்று இதனுடைய சுவை சூப்பராக இருக்கும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்..


சமைக்க தேவைப்படும் நேரம்: 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
.  தேங்காய் - 1
 சின்ன வெங்காயம் - 5 - 6
 இஞ்சி - சிறிய துண்டு
 கருவேப்பில்லை - 10 இலை
 காய்ந்த மிளகாய் - 6 - 8(காரத்திற்கு ஏற்ற சேர்த்து கொள்ளவும்.)
 வெந்தயம்- 1/4 தே.கரண்டி
 தனியா - 2 மேஜை கரண்டி 
 மிளகு - 6 (விரும்பினால் சேர்க்கவும்)
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை :
 தேங்காயினை உடைத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதில் உள்ள அடிபாகத்தினை நீக்கி வெள்ளை பகுதியினை மட்டும் தனியாக வைக்கவும்.

 மிக்ஸியில் இந்த துண்டுகளை போட்டு Pulse Modeயில் 2 - 3 முறை அரைத்தால் துறுவிய தேங்காய் மாதிரி கிடைக்கும். (குறிப்பு : விரும்பினால் இதற்கு பதில் நாமே தேங்காயினை துறுவிகொள்ளலாம்.)


 கடாயில் வெந்தயம் + தனியா + மிளகு + காய்ந்த மிளகாயினை ஒன்றாக சேர்த்து வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

 இப்பொழுது Medium Flameயில் துறுவிய தேங்காயினை சேர்த்து வறுக்கவும். (கவனிக்க : தேங்காய் கருகிவிடாமல் அடிக்கடி கிளறிவிட்டு வறுக்கவும்.)


 சுமார் 12 -  15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் தேங்காய் 60 % வறுப்பட்டு இருக்கும்.  அப்பொழுது சின்ன வெங்காயத்தினை அத்துடன் சேர்த்து மேலும் 8 - 10 நிமிடங்கள் Medium Flameயில் வதக்கவும்.


 கடைசியில் அத்துடன் கருவேப்பிலை + வறுத்து தனியாக வைத்துள்ள பொருட்கள் சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.

 மிக்ஸியில் வறுத்த பொருட்கள் + புளி + உப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும்.


 சுவையான சம்மந்தி பொடி ரெடி. இதனை சாதம், தயிர் சாதம், இட்லி, தோசை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.Linking this Post to ”Friendship 5 Series" Started by me & Savitha..


7 comments:

priya satheesh said...

Delicious Chutney powder...

Shama Nagarajan said...

aromatic powder

Savitha Ganesan said...

Chammandhi podi ,romba interesting a irukku Geetha.

Gita Jaishankar said...

Very interesting podi...must have be been flavorful too :)

Ruby said...

My fav all time

Priya Suresh said...

Fantastic and very flavourful spice powder.

Farin Ahmed said...

Sounds intersting dear!!! Looks delicious....

Related Posts Plugin for WordPress, Blogger...