கொண்டைக்கடலை பிரியாணி / சென்னா பிரியாணி - Chana Biryani / Chana Pulao Recipe - Chickpeas Biryani Recipes


print this page PRINT

கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து மற்றும் Protein உள்ளது. இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. Cholesterolயினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.  நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சென்னா / கொண்டைக்கடலை - 1/2 கப்
  .  பாஸ்மதி அரிசி - 2 கப்
  .  தயிர் - 1/2 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது (நீளமாக வெட்டி கொள்ளவும்)
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  பிரியாணி மசாலா - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
  .  பட்டை - 1 , கிராம்பு - 2, பிரியாணி இலை - 1

செய்முறை :
  .  1/2 கப் கொண்டைக்கடலை சுமார் 3 - 4 மணி நேரம் ஊறவைத்து கொண்டு அதனை பிரஸர் குக்கரில் போட்டு 4 - 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். 

. பிரஸர் குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


  .  இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.

  .  பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 1 -2 நிமிடங்கள் வதக்கவும்.


. அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 

.  இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி + 4 கப் தண்ணீர்  சேர்த்து கொதிக்கவிடவும்.


கொதிவந்தவுடன் பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும். 

 .  குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தே.கரண்டி நெய் + எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கிளறிவிடவும்.


 .  சுவையான சத்தான பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதில் நான் தக்காளி சேர்க்கவில்லை. விரும்பினால வெங்காயம் வதங்கிய பிறகு சேர்த்து கொள்ளவும். 

அதே மாதிரி பிரியாணி மசாலாவிற்கு பதிலாக கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.

காரத்திற்கு மிளகாய் தூள் பதில் பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

இதனையும் செய்து பாருங்க...
Labels : ,,,,

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்தான மிகவும் பிடித்த சமையல் குறிப்பிற்கு நன்றி...

nandoos Kitchen said...

nice post. Channa biryani looks super..

Related Posts Plugin for WordPress, Blogger...