சாக்கலேட் - Homemade Chocolate Recipe using Milk powder - Kids Special


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சாக்கலேட்... என்னுடைய தோழி Srividhya வீட்டில் தான் இதனை முதன்முதலாக சாப்பிட்டேன்..Coffee Bite Tasteயில் இருக்கும். அப்பறம் அம்மா, அவங்க அம்மாவிடன் Recipeயினை கேட்டு செய்தாங்க...சுமார் 20 வருடங்களுக்கும் மேலகாக எங்கள் வீட்டில் செய்யும் ஸ்வீட் இது.... எந்த ஒரு விசேஷம் என்றாலும் அம்மா உடனே செய்யும் recipe .இதனை 10 நிமிடங்களில் செய்துவிடலாம்..

இதில் முக்கியமாக தேவைப்படும் பொருள் பால் பவுடர், Cocoa Powder மற்றும் Butter.

நான் இதில் கொடுத்துள்ள Cocoa Powderயின் அளவில் செய்தால் Normal Chocolate Flavorயில் இருக்கும். Dark chocolate flavorயில் இருக்க விரும்பினால் Cocoa powderயின அளவினை 1 கப் + Milk Powder 1 & 1/2கப் என்று சேர்த்து கொள்ளவும்.

ஒவ்வொரு Brand , Milk powder & Cocoa Powderயினை பொருத்து Chocolateயின் சுவை இருக்கும்.நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் பவுடர் - 2 கப்
  .  Cocoa powder - 1/2 கப்
  .  வெண்ணெய் - 1/2 கப் ( 1 stick of Butter about 4 oz )
  .  சக்கரை - 1 கப்
  .  தண்ணீர் - 3/4 கப்

செய்முறை :
  .  பால் பவுடர் + Cocoa Powder இரண்டியினையும் கலந்து சலித்து கொள்ளவும். (கவனிக்க : இப்படி சலிபப்தால் இரண்டும் நன்றாக கலந்துவிடும்.)


  .  கடாயில் சக்கரை + தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும். (கவனிக்க : கண்டிப்பாக பாகு வரும் வரை கொதிக்கவிடவும். )


  .  பாகு வந்த பிறகு அதில் Room Temperature வெண்ணெயினை போட்டு அதனையும் சேர்த்து நன்றாக 1 - 2 நிமிடம் கலந்துவிடவும்.


  .  வெண்ணெய் நன்றாக உருகியதும், அதில் சலித்த பால்பவுடரினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். (உடனே பால்பவுடரினை சேர்த்து கிளற வேண்டும் என்பதால் photo எடுக்கமுடியவில்லை...)


  .  ஒரு தட்டில் வெண்ணெயினை தடவி கொள்ளவும். அதில் கிளறிய கலவையினை கொட்டி சமபடுத்தவும்.

  .  5 நிமிடங்கள் கழித்து சிறிது ஆறியதும் , விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.


  .  எளிதில் செய்ய கூடிய சாக்கலேட் ரெடி.


6 comments:

Veena Theagarajan said...

looks yum! perfect treat for kids

nandoos Kitchen said...

nice recipe.. Looks yumm..

Kalpana Sareesh said...

yummy one.. perfect for parties

Priya Suresh said...

Homemade chocolate, omg wish i get a box of this addictive chocolateS.

Savitha Rajasekar said...

didnt work out well for me...think i missed the consistency of the sugar syrup...was about to surprise my 5 yr old son for his birthday...ended in a fatal error...

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...குட்டி பையனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

நீங்கள் சொல்வது போல இதில் சக்கரை பதம் மிகவும் முக்கியம். அதே மாதிரி Milk Powder மாவு மாதிரி இருக்க வேண்டும்.

நான் ஒரு முறை வாங்கியது கொரகொரவென இருந்தது..அப்படி இருந்தாலும் இது நன்றாக வராது.

அடுத்த முறை மிகவும் சிறிய அளவில் செய்து பாருங்க...கண்டிப்பாக நன்றாக வரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...