ரசப்பொடி - Homemade Rasam Podi Recipe - Homemade Basics - Friendship 5 Series


print this page PRINT

நான் முதன்முதலாக USA வந்த சமயம் சுமார் 8-9 வருடங்கள் முன்பு, எங்களுடைய பெரியம்மா Texasயில் இருந்து எனக்காக Print எடுத்து சில பொடி Recipesயினை Post அனுப்பி இருந்தாங்க...முதன்முதலாக அதில் பார்த்து தான் ரசப்பொடி, பருப்பு பொடி , கருவேப்பிலை பொடி என்று நிறைய பொடிகள் செய்தேன்...நன்றி பெரியம்மா..

நீங்களும் அந்த பொடியினை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  துவரம் பருப்பு - 1/4 கப்
  .  கடலைப்பருப்பு - 2 மேஜை கரண்டி
  .  மிளகு - 1/4 கப்
  .  சீரகம் - 1/2 கப்
  .  தனியா - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - 15
  .  பூண்டு - 5 பல் தோலுடன் (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)
  .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி
  .  பெருங்காயம் - 1 தே.கரண்டி
  .  மஞ்சள் தூள் - 2 தே.கரண்டி


செய்முறை :
  .  கடாய் சூடானதும் அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா , காய்ந்தமிளகாய், வெந்தயம் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

  .  சூடாக இருக்கும் பொழுது  மிளகினை அத்துடன் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

  .  மிக்ஸியில் வறுத்த பொருட்கள் + பெருங்காயம் + மஞ்சள் தூள் + சீரகம் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும். 

  .  கடைசியில் இத்துடன் பூண்டினை சேர்த்து Pulse Modeயில் 2 -3 முறை அடித்து கொள்ளவும். 


  .  இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் தயாரிக்கும் பொழுது புளி கரைசலுடன் இந்த பொடியினை சிறிது சேர்த்து ரசம் வைத்தால் சூப்பரான சுவையுடன் இருக்கும்.Linking this Post to ”Friendship 5 Series" Started by me & Savitha..


Labels : ,,,

6 comments:

nandoos Kitchen said...

nice useful post dear. Thanks for sharing

Priya Suresh said...

Homemade rasam podi is always the best, Adding garlic sounds new.

Veena Theagarajan said...

homemade is always best.. I am still not getting exact flavour as my mum's one.. yours looks so flavourful!

Snow White said...

vasanai thokkuthu ... ungal veetu rasam arumaiya irukkumnu intha podiyai parththaale theriyuthu

Chitra Ganapathy said...

Super handy podi.Its in my to post list :)

Gita Jaishankar said...

Nice rasam podi recipe...my version is a little bit different from yours..I usually do not add the dhals...will try yours soon and let you know...thanks for sharing dearie :)

Related Posts Plugin for WordPress, Blogger...