பர்கர் கிங் ஆனியன் ரிங்க்ஸ் - Burger King Onion Rings Recipe - Kids Special - Friendship 5 Series


எப்பொழுதும் வெங்காய பஜ்ஜி என்று செய்யாமல் Onion Rings செய்து பாருங்க... ரொம்ப நன்றாக இருக்கும்... குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க...

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  வெங்காயம் - 2 பெரியது
  .  மைதா மாவு - 1 & 1/2 கப்
  .  பேக்கிங் பவுடர் - 1 தே.கரண்டி
  .  உப்பு - 1 தே.கரண்டி
  .  பால் - 1 கப்
  .  முட்டை - 1 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)
  .  Bread Crumbs - 2 கப்
  .  எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
  .  ஒரு அலகமான பாத்திரத்தில் மைதா மாவு + பேக்கிங் பவுடர் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

 .  வெங்காயத்தினை வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும். மெதுவாக ஒவ்வொன்றாக தனி தனி Ringsயினை எடுத்து கொள்ளவும்.


 .  வெங்காயத்தினை கலந்து வைத்துள்ள மைதா கலவையில் பிரட்டி வைக்கவும்.


  .  முட்டை + பாலினை தனியாக கலக்கவும். அதனை மைதா கலவையில் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

  .  மைதா மாவில் பிரட்டி வைத்துள்ள வெங்காயத்தினை, இந்த கலவையில் தோய்த்து எடுத்து Wire Rackயில் வைக்கவும். (இதனால் அதிகமான கலவை வெங்காயத்தில் ஒட்டாமல் இருக்கும்.)


  .  பிறகு ஒவ்வொன்றாக எடுத்து Bread Crumbsயில் பிரட்டி எடுக்கவும். 


.  எண்ணெயினை காயவைத்து அதில் இந்த வெங்காயத்தினை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.


  .  சுவையான எளிதில் செய்ய கூடிய Onion Rings ரெடி. 


கவனிக்க :
இதற்கு Red Onionயினை விட Yellow/ White Onion பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் அதனை தவிர்த்து கொள்ளலாம்.

மைதா கலவையில் வெங்காயத்தினை பிரட்டி எடுத்த பிறகு Wire Rackயில் வைத்தால் அதிகமான கலவை அதில் இருந்து கீழே விழுந்துவிடும்.

இதனை எண்ணெயில் பொரிக்காமல் Ovenயில் Bake செய்தாலும் நன்றாக இருக்கும்.
Linking this post to "Friendship 5 series" started by me & Savitha...

3 comments:

nandoos Kitchen said...

wow! yumm

Anonymous said...

I love burger king onion ring ngs.. Thanks for the recipe:)

Priya Suresh said...

Addictive onion rings, i can have some anytime.

Related Posts Plugin for WordPress, Blogger...