கல்மி கபாப் - Kalmi Kebab / Kabab Recipe/ Chicken Tandoori Recipes



print this page PRINT
இந்த முறையில் செய்யும் பொழுது முதலில் சிக்கனை மிளகாய் தூள் + உப்பு + எலுமிச்சை சாறு சேர்த்து தடவி 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு தான் அடுத்த(இரண்டாவதாக கொடுத்துள்ள) பொருட்களை சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

சிக்கனை அனைத்து மசாலாவும் தடவி அதனை குறைந்தது 3 மணி நேரம் முதல் 1 நாள் வரை Fridgeயில் வைத்து  ஊறவைக்கலாம். அவனில் Grill செய்யும் பொழுது எப்பொழுதும் சிக்கனை fridgeயில் இருந்து எடுத்து Room Temperatureயிற்கு வந்த பிறகு செய்தால் தான் நன்றாக இருக்கும்.

இதில் கடுகு எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். கடுகு எண்ணெய் இல்லையெனில் கடுகினை சிறிது வறுத்து பொடித்து சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி இதில் பொடியாக நறுக்கிய புதினா + கொத்தமல்லி சேர்ப்பதால் ரொம்ப சுவையாக இருக்கும்.

இதில் வெரும் மிளகாய் தூளிற்கு பதில் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலராக இருக்கும்.

அவரவர் விருப்பதிற்கு ஏற்ப விரும்பினால ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம். நான் இதில் சேர்க்கவில்லை.

சிக்கனை க்ரில் செய்த பிறகு அதன் மீது Butterயினை தடவினால் நன்றாக இருக்கும். Butter விரும்பாதவர்கள் அதனை தவிர்த்துவிடலாம்.

நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...நன்றி ப்ரியா...


சிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம் - 1 நாள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிக்கன் Legs - 5
  .  எண்ணெய் - சிறிதளவு மேலே தடவ

சிக்கனுடன் முதலில் ஊறவைக்க :
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  உப்பு - 1 தே.கரண்டி

சிக்கனுடன் இரண்டாவதாக ஊறவைக்க :
  .  தயிர் - 1/4 கப் (கெட்டியான )
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  புதினா + கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  சீரக தூள் - 1/2 தே.கரண்டி
  .  கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - சிறிதளவு
  .  கடுகு எண்ணெய் - 1 மேஜை கரண்டி

செய்முறை :
  .  சிக்கனை தோல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். அதன் மீது 2 - 3 இடத்தில் கீறி கொள்ளவும். சிக்கன் Paper towel வைத்து ஈரம் அதிகம் இல்லாமல் தடவி கொள்ளவும்.

  .  எலுமிச்சை சாறு + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து  சிக்கனுடன் சேர்த்து கலந்து சுமார் 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


  .  இரண்டாவதாக சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தனியாக கலந்து வைக்கவும்.

  .  சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதில் பிரட்டி எடுத்து ஊறவைக்கவும். (குறிப்பு : சிக்கனை குறைந்தது 3 மணி நேரமாவது ஊறவைத்தல் தான் மசாலா எல்லாம் ஊறி சிக்கனை க்ரில் செய்யும் பொழுது சுவையாக இருக்கும்.)


  .  அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். ஊறவைத்த சிக்கனை Fridgeயில் இருந்து எடுத்து Room Temperature வர 5 நிமிடங்கள் வெளியில் வைக்கவும்.

  .  அவனில் வைக்கும் ட்ரேயில் சிக்கனை வைத்து அதன் மீது எண்ணெய் சிறிது தடவி கொள்ளவும். சிக்கனை அவனில் 400 Fயில் சுமார் 15 - 20 நிமிடங்கள் வைக்கவும்.


  .  ஒரு பக்கம நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பிவிட்டு மேலும் 5 - 8 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  திரும்பவும் சிக்கன் திருப்பி விட்டு Broil Modeயில் 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  சுவையான கல்மி கபாப் ரெடி. இதனை சாலட் அல்லது எதாவது ரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.










4 comments:

Ree Kasirajh said...

Looks sooo yummm!!! love these kebabs!!!

Priyas Feast said...

Kebab super ah vanthurukku..ramzan valthukkal

Gita Jaishankar said...

Interesting kebeb recipe dear...looks very tasty and tempting.

Magees kitchen said...

Looks so delicious...Yummy thanks for sharing

Related Posts Plugin for WordPress, Blogger...