கருவேப்பில்லை துவையல் - Karuveppillai Thuvaiyal Recipe for kanji - Curry Leaves Thuvaiyal


மாதத்திற்கு ஒரு முறையாவது எங்கள் வீட்டில் அம்மா இந்த துவையிலினை செய்து விடுவாங்க.. பெரும்பாலும் Weekendsயில் வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது நொய் கஞ்சி + கருவேப்பிலை துவையல் தான் காலை மெனுவாக இருக்கும்.

இந்த துவையிலினை தாளிக்க தேவையில்லை, அதே மாதிரி எந்த பொருட்களையும் வதக்க தேவையில்லை. எளிதில் செய்துவிடலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


துவையல் செய்ய தேவைப்படும் நேரம் : 2 - 3 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
.  கருவேப்பிலை இலை - 3 கப்
.  காய்ந்த மிளகாய் - 4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
.  புளி - நெல்லிக்காய் அளவு
.  உப்பு - தேவைக்கு


செய்முறை :
.  கருவேப்பிலையினை தண்ணிரீல் அலசி கொள்ளவும்.

.  கருவேப்பிலை + காய்ந்த மிளகாய் + புளி + உப்பு + 1 - 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.


.  சுவையான சத்தான துவையல் ரெடி. இதனை கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அதே மாதிரி தயிர் சாதம், இட்லி, தோசைக்கும் ரொம்ப நன்றாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...3 comments:

nandoos Kitchen said...

nice thogayal

Saratha said...

கரிவேப்பிலை துவையல் பார்க்கவே அட்டகாசமாக இருக்கு.

Priya Suresh said...

Very gorgeous thogayal, this is something extremely irresistible.

Related Posts Plugin for WordPress, Blogger...