சுண்டைக்காய் டிபன் சாம்பார் - Sundakkai Tiffin Sambar Recipe - Sundakkai Recipes - Side Dish for Idli / Dosa


சுண்டைக்காயில் அதிக அளவு கல்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கின்றது.இந்த  காய் சிறிது கசப்பும் துவர்ப்பும் சுவையில் இருக்கும்.

அடிக்கடி சுண்டைக்காயினை சாப்பிடுவதால் ரத்தம் மற்றும் வயிற்றினை சுத்தம் செய்ய உதவுகின்றது.

எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி இருக்கும். அம்மா வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் அல்லது குழம்பு செய்து கொடுப்பாங்க...இதே மாதிரி சுண்டைக்காய் பதில் கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.

எளிதில் செய்ய கூடிய சத்தான டிபன் சாம்பார்... நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சுண்டைக்காய் - 30 - 40
  .  துவரம் பருப்பு - 1 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 1
  .  பச்சைமிளகாய் - 3
  .  புளி Paste - 1/4 தே.கரண்டி
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு , கருவேப்பில்லை, பெருங்காயம் - தாளிக்க


செய்முறை :
  .  வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 .  பிரஸர் குக்கரில் துவரம் கழுவி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

  .  இத்துடன் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 2 - 3 கப்) + மஞ்சள் தூள் + புளி + உப்பு சேர்த்து பிரஸர் குக்கரில் 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


  .  பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து மத்து வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.


.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.

 .  சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...




8 comments:

Veena Theagarajan said...

I like sundaikai.. Lovely side dish for idli / dosa...

nandoos Kitchen said...

nice sambar.

Manickam sattanathan said...

சுண்டைக்காயை அப்படியே பயன்படுத்தவேண்டாம். நீரில் இட்டு சுத்தம் செய்த காய்களை பாதி பாதியாக வெட்டி வைத்துக்கொண்டு, வாணலியில் நல்லண்ணெய் சிறிது விட்டு அது காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கைகளை அதில் இட்டு வாசனை வரும் வரை வதக்கி எடுத்து குழம்பில் இட வேண்டும். அப்போதுதான் வாசம் ஊரையே கூட்டும். எங்கள் வீட்டில் அம்மா இப்படித்தான் செய்வார்கள்.

Kalpana Sareesh said...

i always make vatha kuzhambu.. tis is a must ty with sundakkai.. good one

புவனேஸ்வரி ராமநாதன் said...

சுண்டைக்காயில் ஒரு புதுவிதமான இட்லி சாம்பார். பயனுள்ள பகிர்வு.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதா. வாழ்த்துக்கள்.

Magees kitchen said...

Healthy recipe with spongy idly...looks yummy

ADHI VENKAT said...

எளிதான் டிபன் சாம்பார். பார்க்கவும் அழகாக இருக்கு.

Priya Suresh said...

Superaa irruku intha sambar.

Related Posts Plugin for WordPress, Blogger...