உப்பு உருண்டை - Uppu Urundai Recipe- Steamed Rice Balls - Childhood Memories / Friendship 5 series


எங்கள் வீட்டில் அம்மா கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது இந்த உப்பு உருண்டையினை செய்வாங்க...Evening வீட்டிற்கு வந்து சாப்பிடுவோம்...எளிதில் செய்ய கூடிய சத்தான Snack இது...இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  புழுங்கல் அரிசி - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் -  2 மேஜை கரண்டி
  .  கடுகு - 1/4 தே.கரண்டி
  .  கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
  .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  காய்ந்தமிளகாய் - 3 (இரண்டாக உடைத்து கொள்ளவும்)
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக


செய்முறை :
  .  புழுங்கல் அரிசியினை தண்ணீரில் சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  .  அரிசியினை கழுவி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


 .  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இதில் அரைத்த மாவினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொள்ளவும். 


  .  மாவு கெட்டியாக உருண்டையாக உருட்டும் பதம் வரும் வரை கிளறி கொள்ளவும். (சுமார் 3 - 5 நிமிடங்கள் )


  .  மாவு கிளறிய பிறகு அதனை 3 - 5 நிமிடங்கள் ஆறவிடவும்.மாவு ஆறிய பிறகு அதனை Medium Size உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். (கவனிக்க: அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற போல் உருண்டைகளின் அளவினை பார்த்து கொள்ளவும்.)

  .  உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.


 .  சுவையான சத்தான மாலை நேர சிற்றுண்டி ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு :
இதில் விரும்பினால் துறுவிய தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.

நீளமான காய்ந்த மிளகாயினை 2 - 3 துண்டுகளாக கிள்ளி தாளித்து கொள்ளவும்.

பெரும்பாலும் இதில் காய்ந்த மிளகாய் தான் பயன்படுத்துவாங்க...விரும்பினால் பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்.

மாவினை மிகவும் கெட்டியாக அரைக்க தேவையில்லை. தண்ணீர் 1 கப் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக செய்து உள்ளீர்கள்... நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

Veena Theagarajan said...

nice snack .. looks so yum!

nandoos Kitchen said...

looks super yumm..

Menaga sathia said...

சூப்பரா இருக்கு,உருண்டையை அழகா பிடித்து செய்திருக்கீங்க...

Priya Suresh said...

Am ready to finish that whole platter rite now, uppu urundai is just inviting me.

Related Posts Plugin for WordPress, Blogger...