பைனாப்பிள் குக்கும்பர் சாலட் - Pineapple Cucumber Salad - Healthy salad Recipes


print this page PRINT
சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பைனாப்பிள் - 4 பெரிய துண்டுகள்
  .  வெள்ளரிக்காய் - 1
  .  கொத்தமல்லி - சிறிதளது
  .  உப்பு - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக

செய்முறை :
  .  பைனாப்பிள் + வெள்ளரிக்காயினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.


  .  பாத்திரத்தில் பைனாப்பிள் + வெள்ளரிக்காய் + கொத்தமல்லி + உப்பு சேர்த்து கலந்து பறிமாறவும்.

  .  எளிதில் செய்ய கூடிய சுவையான சத்தான சாலட் ரெடி.பன்னீர் புலாவ் - Paneer Pulao Recipe for Kids / Rice varieties


எளிதில் செய்ய கூடிய சத்தான புலாவ்... இதே மாதிரி பன்னீருக்கு பதிலாக Tofu சேர்த்து செய்யலாம்.

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்து இருக்கின்றேன். குழந்தைகளுக்காக Mild ஆக செய்தது... அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்து கொள்ளவும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பன்னீர் - 10 - 15 சிறிய துண்டுகள்
  .  பாஸ்மதி அரிசி - 1 கப்
  .  வெங்காயம் - 1
  .  பச்சைமிளகாய் - 2 - 3 (காரத்திற்கு ஏற்ப)
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .  புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
  .  தேங்காய் பால் - 1/2 கப்
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி (முதலில் தாளிக்க)

குறிப்பு : இதில் நான் சோம்பு மட்டும் சேர்த்து தாளித்து இருக்கின்றேன்...அவரவர் விருப்பம் போல பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

செய்முறை :
  .  வெங்காயத்தினை நீளமாக மெல்லியதாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் கழுவி அதனை 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

  .  பிரஸர் குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி சோம்பு தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


  .  வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  .  பிறகு இத்துடன் நறுக்கி வைத்துள்ள புதினா + கொத்தமல்லி + பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

  .  இத்துடன் பன்னீர் துண்டுகள் சேர்க்கவும்.

  .  இதில் ஊறவைத்த அரிசி + 1/2 கப் தேங்காய் பால் + 1 & 1/2 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிரஸர் குக்கரினை மூடி மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேகவிடவும். (கவனிக்க : தேங்காய் பாலினை அதிகம் சேர்க்க தேவையில்லை. )


  .  குக்கரில் பிரஸர்  அடங்கியதும் அதனை திறந்து லேசாக கிளறி விடவும்.


  .  சுவையான சத்தான புலாவ் ரெடி. இதனை எதாவது ராய்தா, ப்ரை அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சுவையான இருக்கும்.அவல் உருண்டை - Aval Urundai - Krishna Jayanthi Recipe - Easy Festival Recipeஎளிதில் செய்ய கூடிய சத்தான உருண்டை இது. 

இதனை நான் சிவப்பு அவலின் செய்து இருக்கின்றேன். விரும்பினால் வெள்ளை அவலில் செய்யலாம். 

இதில் சக்கரை சேர்ப்பதற்கு பதில் Brown Sugar / Coconut Sugar  சேர்க்கலாம்.

நெய் அதிகம் சேர்க்காமல் பால் சேர்த்து கொண்டு உருண்டை பிடிக்கலாம். ஆனால் பால் சேர்த்தால் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு விடவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT

உருண்டை செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிவப்பு அவல் - 2 கப்
  .  சக்கரை - 1/2 கப்
  .  ஏலக்காய் - 2
  .  நெய் - 3 - 4 மேஜை கரண்டி
  .  முந்திரி - 10 - 12


செய்முறை :
  .  அவலினை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் சிறிது அவலினை போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

  .  மிக்ஸியில் சக்கரை + ஏலக்காயினை போட்டு பொடித்து கொள்ளவும்.


  .  அத்துடன் வறுத்த அவலினை போட்டு பொடித்து கொள்ளவும்.


  .  கடாயில் 1 மேஜை கரண்டி நெய் + முந்திரி போட்டு வறுத்து கொள்ளவும்.


  .  இதனை பொடித்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்க்கவும்.

  .  இதில் மேலும் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் நெய் அதிகம் சேர்க்காமல் பால் சேர்த்து கொண்டு உருண்டை பிடிக்கவும். ஆனால் பால் சேர்த்தால் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு விடவும்.)


  .  சுவையான சத்தான அவல் உருண்டை ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


பச்சைபயிறு இனிப்பு சுண்டல் - Green Moong Dal Sweet Sundal - Navaratri Sundal Recipe


print this page PRINT
பச்சை பயிறு ஊறவைக்க : குறைந்தது 5 - 8 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பச்சைபயிறு - 2 கப் ஊறவைத்தது
  .  வெல்லம் - 1/4 கப்
  .  Fresh தேங்காய் துறுவல் - 1/4 கப்
  .  உப்பு - 1/2 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு + உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை

செய்முறை :
  .  பச்சை பயிறினை தண்ணீரில் சுமார் 5 - 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.


  .  பிரஸர் குக்கரில் ஊறவைத்த பருப்பினை போட்டு , அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். 

(கவனிக்க : அதிகம் வேகவைத்தால் குழைந்துவிடும் அல்லது தோல் தனியாக வந்துவிடும். விரும்பினால் குக்கருக்கு பதிலாக பாத்திரத்தில் வேகவைத்து கொள்ளவும். )


  .  கடாயில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தினை போட்டு கொதிக்கவிடவும். (கவனிக்க : வெல்லத்தில் மண் இருந்தால் அதனை Stainer வைத்து வடித்து கொள்ளவும்.)


  .  வெல்லம் கரைந்த பிறகு அத்துடன் வேகவைத்த பச்சைபயிறினை சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.


  .  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.


  .  தாளித்த பொருட்கள் + தேங்காய் துறுவலினை பயறுடன் சேர்த்து கிளறி 1 நிமிடம் வேகவிடவும்.


  .  சுவையான சத்தான இனிப்பு சுண்டல் ரெடி.


கவனிக்க :
இந்த சுண்டலினை நான் தாளித்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் தாளித்து கொள்ளவும்.

அதே மாதிரி ஏலக்காய் விரும்பினால் சேர்க்கவும்.

Fresh  தேங்காய் பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதே மாதிரி அனைத்து பருப்பு / பயறு வகைகளிலும் செய்யலாம்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...பானகம் - Panagam Recipe - Panakam - Sri Rama Navami Recipe


ஸ்ரீ ராம ரவமி மற்றும் பெருமாளுக்கு படைக்கும் பொழுது இதனை கண்டிப்பாக செய்வாங்க...

print this page PRINT
பானகம் செய்ய தேவைப்படும் நேரம்: 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வெல்லம் - 1/4 கப்
   .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
   .  சுக்கு - 1/4 தே.கரண்டி ( விரும்பினால்)
   .  ஏலக்காய் - 2 பொடித்து கொள்ளவும்
   .  துளசி இலை - 4 - 5
   .  உப்பு - 1 -2 சிட்டிகை அளவு
   .  தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :

   .  3 - 4 கப் தண்ணீர் + வெல்லம்  + பொடித்த ஏலக்காய் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.(இப்படி ஊறவைப்பதால் வெல்லம் சீக்கிரமாக கரைந்துவிடும்.)   .  இத்துடன் சுக்கு + துளசி இலை + உப்பு + எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். (கவனிக்க : விரும்பினால் இதனை எல்லாம் சேர்த்த பிறகு வடிகட்டி வைத்து வடித்து கொள்ளவும்.)


   .  சுவையான சத்தான பானகம் ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...
பழனி கோவில் பஞ்சாமிர்தம் - Palani Temple Panchamirtham Recipe - Festival Food Recipeprint this page PRINT
பஞ்சாமிர்தம் , பழனி முருக கடவுளின் Special prasadam.  பழனி கோவில் Websiteயில் இருந்த செய்முறையினை பார்த்து செய்தேன்...மிகவும் அருமையாக அதே மாதிரி இருந்தது. 

அதில் Kandasani சக்கரை பயன்படுத்த சொன்னாங்க...நான் இதில் Brown Sugar பயன்படுத்தி இருக்கின்றேன். விரும்பினால் வெல்லம் / Coconut Sugarகூட பயன்படுத்தலாம்.

இதில் வாழைப்பழதின் கூட வேறு எந்த பழத்தினையும் சேர்க்கவில்லை.

அதே மாதிரி Diamond shape மற்றும் பெரிய கல்கண்டினை   இரண்டினையும் சேர்த்து இருக்கின்றேன்.

கண்டிப்பாக நெய் சேர்க்கவும். அப்பொழுது தான் அந்த சுவை வரும். ஆனால் கொடுத்துள்ள அளவு நெயினை விட அதிகம் சேர்க்க வேண்டாம். 

நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


பஞ்சாமிர்தம் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  நன்றாக பழுத்த சின்ன மஞ்சள் வாழைப்பழம் - 4 - 6
  .  பிரவுன் சுகர் (Brown Sugar) / வெல்லம் - 1/2 கப்
  .  பேரிச்சம் பழம் - 10 - 12
  .  கல்கண்டு - 1/4 கப்
  .  காய்ந்த திரட்சை - 1/4 கப்
  .  நெய் - 1 மேஜை கரண்டி
  .  ஏலக்காய் - 2 பொடித்தது


செய்முறை :
  .  வாழைப்பழத்தினை தோல் நீக்கி, பழத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  (குறிப்பு : பொடியாக நறுக்கி கொள்வதற்கு பதிலாக அதனை கையினை வைத்து மசித்து கொள்ளலாம்.)

  .  அடுத்தது பேரிச்சம் பழத்தினை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும்.


  .  பாத்திரத்தில் நறுக்கி வைத்து இருக்கும் வாழைப்பழம், பேரிச்சம்பழம், + சக்கரை + கல்கண்டு + காய்ந்த திரட்சை + பொடித்த ஏலக்காயினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


  .  இத்துடன் கடைசியில் நெய் சேர்த்து கலக்கவும்.


  .  சுவையான சத்தான பழனி கோவில் பஞ்சாமிர்தம் ரெடி. இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் இதனை 3 - 4 நாட்கள் வரை Fridgeயில் வைத்து சாப்பிடலாம்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


Related Posts Plugin for WordPress, Blogger...