அவல் உருண்டை - Aval Urundai - Krishna Jayanthi Recipe - Easy Festival Recipeஎளிதில் செய்ய கூடிய சத்தான உருண்டை இது. 

இதனை நான் சிவப்பு அவலின் செய்து இருக்கின்றேன். விரும்பினால் வெள்ளை அவலில் செய்யலாம். 

இதில் சக்கரை சேர்ப்பதற்கு பதில் Brown Sugar / Coconut Sugar  சேர்க்கலாம்.

நெய் அதிகம் சேர்க்காமல் பால் சேர்த்து கொண்டு உருண்டை பிடிக்கலாம். ஆனால் பால் சேர்த்தால் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு விடவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT

உருண்டை செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிவப்பு அவல் - 2 கப்
  .  சக்கரை - 1/2 கப்
  .  ஏலக்காய் - 2
  .  நெய் - 3 - 4 மேஜை கரண்டி
  .  முந்திரி - 10 - 12


செய்முறை :
  .  அவலினை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் சிறிது அவலினை போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

  .  மிக்ஸியில் சக்கரை + ஏலக்காயினை போட்டு பொடித்து கொள்ளவும்.


  .  அத்துடன் வறுத்த அவலினை போட்டு பொடித்து கொள்ளவும்.


  .  கடாயில் 1 மேஜை கரண்டி நெய் + முந்திரி போட்டு வறுத்து கொள்ளவும்.


  .  இதனை பொடித்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்க்கவும்.

  .  இதில் மேலும் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் நெய் அதிகம் சேர்க்காமல் பால் சேர்த்து கொண்டு உருண்டை பிடிக்கவும். ஆனால் பால் சேர்த்தால் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு விடவும்.)


  .  சுவையான சத்தான அவல் உருண்டை ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


3 comments:

Menaga sathia said...

உருண்டை பார்க்கவே ரொம்ப அழகாவும்,சுவையாகவும் இருக்கு.

Veena Theagarajan said...

Looks yum! so healthy and light

Gita Jaishankar said...

Superb ladddos...looks so good :)

Related Posts Plugin for WordPress, Blogger...