பன்னீர் பாயசம் - Paneer Payasam Recipe - Navaratri Special - Guest Post by Pratheepa


print this page PRINT

இதில் Calcium, Protein மற்றும் Vitamins & தேவையான அளவு Fat இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கவலை தேவையில்லை. இது ஒரு Guilt-Free பாயசம்.

இந்த பன்னீர் பாயசத்தினை கொடுத்துள்ள முறைப்படி செய்தால் கண்டிப்பாக கூடுதல் சுவையுடன் திகட்டாமல் இருக்கும்..இந்த பாயசம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில,

பாலினை அடிகணமான / Non-Stick பாத்திரத்தில் செய்தால் அதிகம் கிளற தேவையில்லை. Ordinary Stainless Steel பாத்திரம் என்றால் முதலில் அந்த பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி சூடான பிறகு பாலினை சேர்த்தால் பால் அடிபிடித்து கொள்ளாது.

இதில் பால் நன்றாக கொதிக்கும் பொழுது Condensed Milk சேர்ப்பதால் அதனை உடனே கரண்டி / Beaterயினை வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும். இல்லை என்றால் பால் அடிபிடித்து கொள்ளும்.

Condensed Milkயில் அதிகமான Density இருப்பதால் அதனை பாலில் ஊற்றும் பொழுது எளிதாக அடியில் Settle ஆகிவிடும். அதனால் கண்டிப்பாக Whisker / கரண்டியினை வைத்து நன்றாக சிறிது நேரம் கிளறி கொண்டே இருக்கவும்.

இதில் முந்திரியினை அப்படியே சேர்க்காமல் அதனை ஒன்றும் பாதியுமாக நசுக்கி கொண்டு சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

எப்பொழுதும் இந்த மாதிரி ஸ்வீட் செய்யும் பொழுது முந்திரியினை நெயில் வறுக்காமல் Butter / வெண்ணெயில் வறுத்து சேர்த்தால் கூடுதல் சுவையுடன் திகட்டாமல் இருக்கும்.

பன்னீரினை பெரிய துறுவலில் துறுவி கொண்டால் சாப்பிடும் பொழுது பன்னீர் நன்றாக தெரியும். இல்லை என்றால் பாலில் கரைந்துவிடும்.

அதே மாதிரி பன்னீர் சேர்த்த பிறகு அதிகம் வேகவைக்க கூடாது. கடைசியில் சக்கரையினை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைத்தால் போதும்.

இதனை அப்படியே freezerயில் வைத்து சாப்பிடால் ரொம்ப அருமையாக இருக்கும்.

இந்த குறிப்பினை திருமதி. Pratheepa Raghuraman செய்தது...நன்றி Pratheepa. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்... (Photo - Pratheepa and Harshita Sweetie)சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் - 1 லிட்டர் (about 4 - 5 Cups)
  .  Condensed Milk - 1 Cup
  .  துறுவிய பன்னீர் - 2 கப்
  .  சக்கரை - 1/2 கப்
  .  பட்டர் - 2 மேஜைகரண்டி அளவு
  .  முந்திரி - 10 - 15
  .  ஏலக்காய் - 4

செய்முறை :
.  பாலினை ஒரு அடிகணமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.

.  பன்னீரை பெரிய Graterயில் துறுவி கொள்ளவும்.


. பால் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் Condensed Milkயினை சேர்த்து உடனே கைவிடாமல் நன்றாக கலக்கிவிடவும். (கவனிக்க : Condensed Milkயின் Density அதிகம் என்பதால் கண்டிப்பாக நன்றாக கலந்துவிடவும். இல்லை என்றால் அடிபிடித்து கொள்ளும்.)


.  இதனை அப்படியே அடிக்கடி கிளறி பாலினை மேலும் 3 - 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

.  முந்திரியினை சிறிது நசுக்கி கொள்ளவும். பட்டரினை ஒரு கடாயில் போட்டு அத்துடன் முந்திரியினையும் சேர்த்து வறுத்து கொள்ளவும்.


.  வறுத்த முந்திரியினை பட்டருடன் சேர்த்து அப்படியே பாலில் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும். ஏலக்காயினை தட்டி கொண்டு அதனையும் பாலில் சேர்க்கவும்.


.  அதன் பிறகு அதில் துறுவிய பன்னீரினை சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிட்டு வேகவிடவும்..  பிறகு அதில் சக்கரை சேர்த்து நன்றாக கலந்து மேலும் 3 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிட்டு , பாத்திரத்தினை அடுப்பில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.


.  இதனை அப்படியே சுமார் 20 - 30 நிமிடங்கள் வைத்துவிடவும். பிறகு தட்டினை திறந்து அதில் இருக்கும் ஏலக்காயினை வெளியே எடுத்துவிடவும். (கவனிக்க : ஏலக்காயினை எடுத்துவிடுவதால் அதனுடைய Flavors Mildஆக இருக்கும். அதனால் தான் அதனை பொடித்து போடுவதற்கு பதிலாக தட்டி போட்டு இருக்காங்க...)


.  இதனை சூடகவோ அல்லது Fridgeயில் வைத்து Coolஆகவோ பறிமாறலாம். இது மிகவும் சுவையான சத்தான பாயசம்.  

ஆந்திரா மசாலா சிக்கன் ப்ரை - Andhra Masala Chicken Fry Recipe - Chicken Recipe


print this page PRINT

மிகவும் எளிதில் செய்ய கூடிய சிம்பிளான சிக்கன் ப்ரை இது. மிகவும் குறைந்த அளவு எண்ணெய் சேர்ப்பதால் ஹெல்தியான ப்ரை. இதனை Starterஆகவும் அல்லது சாதம், பிரியாணியுடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.

பொதுவாக இந்த சிக்கன் செய்யும் பொழுது சிக்கனை சுத்தம் செய்த பிறகு அத்துடன் வெரும் மஞ்சள் தூள் + உப்பு மட்டும் தான் சேர்த்து ஊறவைப்பாங்க. சிக்கனை வேகவைக்கும் பொழுது தான் மத்த தூள் வகைகள் சேர்ப்பாங்க. ஆனால் நான் முதலிலேயே அனைத்து தூள் வகைகளும் சேர்த்து ஊறவைத்து இருக்கின்றேன். 

கண்டிப்பாக பச்சை மிளகாயினை சேர்த்து செய்யுங்க...கூடுதல் சுவையுடன் இருக்கும். அதே மாதிரி கருவேப்பிலையும் அவசியம் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி வெங்காயம் அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால் Gravy / தொக்கு மாதிரி ஆகிவிடும்.  அவரவர் காரத்திற்கு எற்றாற் போல் காரம் சேர்த்து கொள்ளவும். 

இதனை என்னுடைய தோழி திருமதி. Sreelakshmi Jujaray, Summer Campயில் Potluckயின் பொழுது செய்து கொண்டு வந்தாங்க...முதலில் இந்த சிக்கன் தான் காலியாகிட்டது. ரொம்ப சூப்பராக இருந்தது. நான் இந்த முறையில் நிறைய தடவை செய்து இருக்கின்றேன். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். 

Sreelakshmi is a wonderful, loving and down to earth person who will get very close to everyone easily by her friendly smile & talk. She gives so much of tips ,  advice  and ready to share her ideas on all things she knows. She is a very good cook and has magic in her hands. She happily invites us and cooks in minutes for us. I still admire her for the hospitality she have. Pic- Sreelakshmi. Thanks.சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிக்கன் - 1/2 கிலோ
  .  வெங்காயம் - 1 
  .  பச்சை மிளகாய் - 3 - 4
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .  தனியா - 1 மேஜை கரண்டி
  .  பட்டை - 1 துண்டு
  .  கிராம்பு - 2
  .  பூண்டு - 4 - 5 பல் பெரியது
  .  இஞ்சி - 1 துண்டு
  .  வெங்காயம் - 1/4 

கடைசியில் சேர்க்க :
  .  மிளகு தூள் - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
  .  சிக்கனை விரும்பிய அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சிக்கனுடன் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + கரம் மசாலா தூள் + உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். 

  .  அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் , முதலில் தனியா + பட்டை + கிராம்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். 


  .  அத்துடன் பூண்டு + இஞ்சி + 1/4 வெங்காயம் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


  .  மீதம் உள்ள 3/4 வெங்காயத்தினை நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.

  .  வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் அரைத்த விழுதினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


 .  அனைத்து பொருட்களும் வதங்கிய பிறகு, அத்துடன் ஊறவைத்துள்ள   சிக்கனை சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வதக்கவும்.


  .  சிக்கன் நன்றாக வெந்த பிறகு  மிளகு தூள் சேர்த்து கிளறி மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும். 

  .  சுவையான எளிதில் செய்ய கூடிய ப்ரை ரெடி. இதனை Starterஆகவும் அல்லது சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.பீச் சுண்டல் - Beach Sundal Recipe - Healthy Sundal Navaratri Recipe


print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  வெள்ளை பட்டாணி - 1  கப் (அல்லது) வேகவைத்த பட்டாணி - 2 - 3 கப்
  .  துறுவிய மாங்காய் - 1/4 கப்
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .  தேங்காய் - 2 பெரிய துண்டுகள்
  .  பச்சை மிளகாய் - 1
  .  இஞ்சி - 1 சிறிய துண்டு

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு - தாளிக்க
  .  உடைத்த உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை -10 இலை


செய்முறை :
  .  வெள்ளை பட்டாணியினை 1 கப் எடுத்து தண்ணீரில் சுமார் 6 - 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  .  பட்டாணி நன்றாக ஊறிய பிறகு அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் கொள்ளவும்.  
(கவனிக்க : கண்டிப்பாக இதனை Pressure Cookerயில் வேக வைக்க வேண்டாம். சிலசமயம் அப்படி வேகவைக்கும் பொழுது தோல் தனியாக பட்டாணியில் இருந்து வந்துவிடும். )


  .  அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


  .  மாங்காயினை துறுவி வைத்து கொள்ளவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.அத்துடன் வேகவைத்து இருக்கும் பட்டாணியினை , தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும்.


  .  இத்துடன் அரைத்த கலவையினை சேர்த்து  கிளறவும்.

 .  பிறகு இதில் மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து 1- 2 நிமிடங்கள் வேகவிடவும்.


 .  கடைசியில் இதில் துறுவிய மாங்காய் சேர்த்து கிளறி மேலும் 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  சுவையான சத்தான பீச் சுண்டல் ரெடி.


குறிப்பு :
இதே மாதிரி வெள்ளை பட்டாணியிற்கு பதிலாக பச்சை பட்டாணியிலும் செய்யலாம்.

தேங்காயினை அரைக்காமல் அப்படியே சேர்க்கலாம்.

Pressure Cookerயில் வேகவைக்க விரும்பினால் 1 - 2 விசில் வரும் வரை வேகவைத்தால் போதும்.அதிகம் வேக வைக்க வேண்டாம்.

மாங்காய் சேர்ப்பதற்கு பதிலாக Amchur Powderகூட பயன்படுத்தலாம்.

கோவில் பொங்கல் - வரகு அரிசி பொங்கல் - Varagu Arisi Pongal - Millet Pongal - Indian Millet Recipe


print this page PRINT

வரகு அரிசியில் அதிக அளவு புரதம், நார்சத்து, Iron மற்றும் Calcium இருக்கின்றது.

உடலில் சக்கரை அதிகம் இருப்பவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இந்த பொங்கல் எளிதில் செய்ய கூடியது. நான் இதில் அரிசிக்கு பதிலாக வரகு அரிசி பயன்படுத்தி இருக்கின்றேன் . 

பொதுவாக 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற் ratioவில் சமைப்போம். ஆனால் எந்த வகை சிறு தானியமாக இருந்தாலும் அதற்கு 1 கப் தானியத்திற்கு 3 கப் தண்ணீர் வைக்க வேண்டும்.

இந்த பொங்கலின் ஸ்பெஷலே இதனை முதலில் தாளிப்பது தான்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
  .  வரகு அரிசி - 1 கப்
  .  பாசிப்பருப்பு- 1/2 கப்
  .  தண்ணீர் - 5 - 6 கப்
  .  மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி
  .  உப்பு - 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சீரகம் - 1 தே.கரண்டி
  .  மிளகு - 10 - 12
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  பச்சைமிளகாய் - 2 
  .  இஞ்சி - சிறிய துண்டு
  .  முந்திரி - 10 (விரும்பினால்)

 செய்முறை :
 .  வரகு அரிசி + பாசிப்பருப்பினை கழுவி கொள்ளவும். இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

  .  பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் + மிளகு + கருவேப்பிலை + பச்சை மிளகாய் + இஞ்சி சேர்த்து தாளித்து கொள்ளவும்.


 .  இத்துடன் கழுவிய பாசிப்பருப்பினை சேர்க்கவும்.  அத்துடன் வரகு அரிசியினையும் சேர்த்து கொள்ளவும்.


 .  பிறகு தேவையான அளவு தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து விடவும். (கவனிக்க : தண்ணீர் ஊற்றிய பிறகு கண்டிப்பாக ஒரு முறை கிளறி விடவும். )

 .  பிரஸர் குக்கரினை மூடி 3 - 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

 .  குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து கிளறி விட்டு பரிமாறவும்.


 .  கடைசியில் பொங்கலினை கிளறும்பொழுது விரும்பினால் , சிறிது நெய் சேர்த்து கொள்ளவும். சுவையான சத்தான பொங்கல் ரெடி. இதனை அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும். இதற்கு சட்னி,சாம்பார் சேர்த்து சாப்பிடால் ரொம்ப சூப்பராக இருக்கும்.


ரோமானா பீன்ஸ் சுண்டல் - Romana Beans Sundal Recipe - Navaratri Recipes


print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Fresh ரோமா பீன்ஸ் - 2 - 3 கப்
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு + கடலைப்பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  காய்ந்த மிளகாய் - 1

செய்முறை :
  .  இது Fresh என்பதால் ஊறவைக்க தேவையில்லை. நேரமும் மிச்சம்.

  .  ரோமா பீன்ஸினை தோல் நீக்கி அதில் உள்ளே இருக்கும் பட்டாணியினை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.


  .  பட்டாணியினை எடுத்து அதனை கழுவி கொள்ளவும். அத்துடன் உப்பு + தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனை சுமார் 15 - 20 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.
(Pressure Cookerயில் என்றால் 1 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். அதிகம்  வேகவைக்க தேவையில்லை.)


  .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பினை போட்டு தாளித்து அத்துடன் காய்ந்த மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.

  .  இத்துடன் வேகவைத்த பருப்பினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் கிளறி விடவும். (இத்துடன் தேங்காய் துறுவல் / பொடி வகைகள் சேர்க்க தேவையில்லை, சாப்பிட வேர்க்கடலை சுண்டல் மாதிரி தான் இருக்கும். )


சுவையான சத்தான் சுண்டல் ரெடி.


நெத்திலி மீன் வறுவல் - Nethili Fish Fry Recipe - Simple Fry


print this page PRINT
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  நெத்திலி மீன் - 1/4 கிலோ
  .  எண்ணெய் - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
  .  சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகு தூள் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  .  நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

  .  மீனுடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து ஊறவைத்து கொள்ளவும்.


  .  கடாயினை காயவைத்து அதில் 1 - 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி 10 - 12 மீன்களை போட்டு பொரிக்கவும்.

  .  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை பக்குவமாக திருப்பி போட்டு வேகவிடவும்.


  .  அருமையான நெத்திலி மீன் வறுவல் ரெடி. இதனை சாம்பார், ரசம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
அவரவர் விருப்பதிற்கு ஏற்ப காரத்தினை சேர்த்து கொள்ளவும்.

மயோனேஸ் - Homemade Mayonnaise Recipe - Mayo using Olive oil


print this page PRINT

Mayonnaise செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் - முட்டையினை மஞ்சள் கரு + ஆலிவ் ஆயில்

2 பெரிய மஞ்சள் கருவிற்கு 1 கப் எண்ணெயினை ஊற்றி செய்தால் தான் சரியாக இருக்கும். நான் இதில் 3 சிறிய அளவு மஞ்சள் கருவினை பயன்படுத்தி இருக்கின்றேன்.

கண்டிப்பாக உப்பு மற்றும் எலுமிச்சை சாறினை கடைசியில் தான் சேர்க்க வேண்டும்.

முட்டையுடன் எண்ணெய் சேர்க்கும் பொழுது, எண்ணெயினை அப்படியே சேர்க்க கூடாது. எண்ணெயினை 1 - 2 தே.கரண்டி என்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி முட்டையுடன் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும்

அப்பொழுது தான் முட்டை எண்ணெயுடன் சேர்த்து emulsify ஆகும். இல்லை என்றால் எண்ணெய் தனியாகவும்  முட்டை தனியாகவும் இருக்கும், 

முட்டையின் மஞ்சள் கருவினை அப்படியே பயன்படுத்தாமல் விரும்பினால் Double Broiler Methodயில் அதனை சிறிது வேவிடலாம் . இல்லை என்றால் Pasteurized Eggsயினை பயன்படுத்தலாம்.

Dijon Mustardயிற்கு பதிலாக நான் பொடித்த கடுகுதூள் சேர்த்து இருக்கின்றேன்.

இதனை Fridgeயில் வைத்து 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிடவும். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

மயோனேஸ் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  முட்டை மஞ்சள் கரு - 3
  .  ஆலிவ் ஆயில் - 1 கப் 
  .  கடுகு தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு (சுமார் 3/4 தே.கரண்டி)
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி


செய்முறை :
  .  முட்டையில் இருந்து வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவினை தனி தனியாக எடுத்து கொள்ளவும். 


  .  மிக்ஸியில் முதலில் மஞ்சள் கருவினை போட்டு 1 நிமிடம் அடித்து கொள்ளவும். இப்பொழுது மஞ்சள் கரு frothyயாக இருக்கும். 


  .  மஞ்சள் கரு நன்றாக அடித்த பிறகு ஆவில் எண்ணெயினை சிறிது சிறிதாக ஊற்றி அடித்து கொள்ளவும். 

(கவனிக்க : எண்ணெயினை அப்படியே சேர்க்க கூடாது. எண்ணெயினை 1 - 2 தே.கரண்டி என்ற அளவில் ஊற்றி முட்டையுடன் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். )

  .  முட்டையுடன் அனைத்து எண்ணெயும் சேர்ந்த பிறகு, அரைத்த கலவை இப்பொழுது Room temperatureயில் வைத்த வெண்ணெய்/ butter மாதிரி இருக்கும். இதுவே சரியான பதம்.


  .  கடைசியில் இத்துடன் கடுகு தூள் + மிளகு தூள் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து மேலும் 1 முறை அடித்து கொள்ளவும். 


  .  சுவையான எளிதில் செய்ய கூடிய அருமையான மயோனேஸ் ரெடி. இதனை சாலட் அல்லது Sandwich / Deviled eggs/ Coleslaw / Sauce போன்றவை செய்யும் பொழுது பயன்படுத்தலாம். 


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


Related Posts Plugin for WordPress, Blogger...