ஆந்திரா மசாலா சிக்கன் ப்ரை - Andhra Masala Chicken Fry Recipe - Chicken Recipe


print this page PRINT

மிகவும் எளிதில் செய்ய கூடிய சிம்பிளான சிக்கன் ப்ரை இது. மிகவும் குறைந்த அளவு எண்ணெய் சேர்ப்பதால் ஹெல்தியான ப்ரை. இதனை Starterஆகவும் அல்லது சாதம், பிரியாணியுடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.

பொதுவாக இந்த சிக்கன் செய்யும் பொழுது சிக்கனை சுத்தம் செய்த பிறகு அத்துடன் வெரும் மஞ்சள் தூள் + உப்பு மட்டும் தான் சேர்த்து ஊறவைப்பாங்க. சிக்கனை வேகவைக்கும் பொழுது தான் மத்த தூள் வகைகள் சேர்ப்பாங்க. ஆனால் நான் முதலிலேயே அனைத்து தூள் வகைகளும் சேர்த்து ஊறவைத்து இருக்கின்றேன். 

கண்டிப்பாக பச்சை மிளகாயினை சேர்த்து செய்யுங்க...கூடுதல் சுவையுடன் இருக்கும். அதே மாதிரி கருவேப்பிலையும் அவசியம் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி வெங்காயம் அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால் Gravy / தொக்கு மாதிரி ஆகிவிடும்.  அவரவர் காரத்திற்கு எற்றாற் போல் காரம் சேர்த்து கொள்ளவும். 

இதனை என்னுடைய தோழி திருமதி. Sreelakshmi Jujaray, Summer Campயில் Potluckயின் பொழுது செய்து கொண்டு வந்தாங்க...முதலில் இந்த சிக்கன் தான் காலியாகிட்டது. ரொம்ப சூப்பராக இருந்தது. நான் இந்த முறையில் நிறைய தடவை செய்து இருக்கின்றேன். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். 

Sreelakshmi is a wonderful, loving and down to earth person who will get very close to everyone easily by her friendly smile & talk. She gives so much of tips ,  advice  and ready to share her ideas on all things she knows. She is a very good cook and has magic in her hands. She happily invites us and cooks in minutes for us. I still admire her for the hospitality she have. Pic- Sreelakshmi. Thanks.சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிக்கன் - 1/2 கிலோ
  .  வெங்காயம் - 1 
  .  பச்சை மிளகாய் - 3 - 4
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .  தனியா - 1 மேஜை கரண்டி
  .  பட்டை - 1 துண்டு
  .  கிராம்பு - 2
  .  பூண்டு - 4 - 5 பல் பெரியது
  .  இஞ்சி - 1 துண்டு
  .  வெங்காயம் - 1/4 

கடைசியில் சேர்க்க :
  .  மிளகு தூள் - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
  .  சிக்கனை விரும்பிய அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சிக்கனுடன் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + கரம் மசாலா தூள் + உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். 

  .  அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் , முதலில் தனியா + பட்டை + கிராம்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். 


  .  அத்துடன் பூண்டு + இஞ்சி + 1/4 வெங்காயம் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


  .  மீதம் உள்ள 3/4 வெங்காயத்தினை நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.

  .  வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் அரைத்த விழுதினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


 .  அனைத்து பொருட்களும் வதங்கிய பிறகு, அத்துடன் ஊறவைத்துள்ள   சிக்கனை சேர்த்து 5 - 6 நிமிடங்கள் வதக்கவும்.


  .  சிக்கன் நன்றாக வெந்த பிறகு  மிளகு தூள் சேர்த்து கிளறி மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும். 

  .  சுவையான எளிதில் செய்ய கூடிய ப்ரை ரெடி. இதனை Starterஆகவும் அல்லது சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.6 comments:

ரூபன் said...

வணக்கம்
சுவையான உணவு இலகுவான விளக்கம்.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

nandoos Kitchen said...

looks super!

Saraswathi Tharagaram said...

Tasty and flavourful chicken..

Sathya Priya said...

Parkave arumaiya iruku geetha ..Kandipa seithu parthutu solren

sangeethas creations said...

பார்த்தாலே அழகா இருக்கு. கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் . உங்கள் செய்முறையும் அருமை . மேலும் ஒவ்வொரு குறிப்புக்கும் முதலில் அதன் செய்முறையில் சேர்க்க வேண்டிய பொருட்கள் பற்றி சொல்வது மிக அருமை . எளிதில் செய்முறையை நினைவு கூர வசதியா இருக்கு அக்கா .. நன்றி ..

Bala chandran said...

very very tasty......

Related Posts Plugin for WordPress, Blogger...