பாஸ்தா சாஸ் - Basic Pasta Sauce - Friendship 5 Series - Sauce Recipe


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சாஸ் இது. இதற்கு வெங்காயம் + தக்காளி+ பூண்டு + ஆலிவ் ஆயில் இருந்தால் ஈஸியாக செய்து விடலாம்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் :
தேவையான பொருட்கள்:
  .  ஆலிவ் ஆயில் - 3 மேஜை கரண்டி
  .  வெங்காயம் - 1
  .  தக்காளி - 2
  .  பூண்டு - 7 - 8 பல்
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
  .  Dried Basil / Oregano - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு


செய்முறை :
  .  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். அதில் தக்காளியினை போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  தக்காளியினை தண்ணீரில் இருந்து வெளியில் எடுத்து அதன் மேல் தோலினை மட்டும் நீக்கிவிடவும்.


  .  வெங்காயம் + தக்காளி + பூண்டு பொடியாக வெட்டி கொள்ளவும்.

  .  கடாயினை சூடுபடுத்தி,  அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்.


  .  அத்துடன் மிளகாய் தூள் + Dried leaves  + உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

  .  அடிக்கடி கிளறி, சுமார் 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  கடைசியில் மிளகு தூள் சேர்த்து கலந்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


  .  எளிதில் செய்ய கூடிய பாஸ்தா சாஸ் ரெடி. இதனை எதாவது வேகவைத்த பாஸ்தாவுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
Dried Basil / Oregano யிற்கு பதில் Methi leaves கூட பயன்படுத்தலாம்.

தக்காளியினை தோலுடனும் செய்யலாம். ஆனால் தோல் நீக்கினால் நன்றாக இருக்கும்.

கண்டிப்பாக ஆலிவ் ஆயிலில் செய்யவும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

3 comments:

Sathya Priya said...

Aumaiya iruku .Ithu than muthal murai ungal blog -il varuvathu .Arumiayana pathivukal .

Join my event http://mykitchenodyssey.blogspot.com/2014/08/first-anniversary-give-away.html

Sathya Priya said...

Aumaiya iruku .Ithu than muthal murai ungal blog -il varuvathu .Arumiayana pathivukal .

Join my event http://mykitchenodyssey.blogspot.com/2014/08/first-anniversary-give-away.html

Kalpana Sareesh said...

soooper .. it helps in case of emergencies..

Related Posts Plugin for WordPress, Blogger...