மயோனேஸ் - Homemade Mayonnaise Recipe - Mayo using Olive oil


print this page PRINT

Mayonnaise செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் - முட்டையினை மஞ்சள் கரு + ஆலிவ் ஆயில்

2 பெரிய மஞ்சள் கருவிற்கு 1 கப் எண்ணெயினை ஊற்றி செய்தால் தான் சரியாக இருக்கும். நான் இதில் 3 சிறிய அளவு மஞ்சள் கருவினை பயன்படுத்தி இருக்கின்றேன்.

கண்டிப்பாக உப்பு மற்றும் எலுமிச்சை சாறினை கடைசியில் தான் சேர்க்க வேண்டும்.

முட்டையுடன் எண்ணெய் சேர்க்கும் பொழுது, எண்ணெயினை அப்படியே சேர்க்க கூடாது. எண்ணெயினை 1 - 2 தே.கரண்டி என்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி முட்டையுடன் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும்

அப்பொழுது தான் முட்டை எண்ணெயுடன் சேர்த்து emulsify ஆகும். இல்லை என்றால் எண்ணெய் தனியாகவும்  முட்டை தனியாகவும் இருக்கும், 

முட்டையின் மஞ்சள் கருவினை அப்படியே பயன்படுத்தாமல் விரும்பினால் Double Broiler Methodயில் அதனை சிறிது வேவிடலாம் . இல்லை என்றால் Pasteurized Eggsயினை பயன்படுத்தலாம்.

Dijon Mustardயிற்கு பதிலாக நான் பொடித்த கடுகுதூள் சேர்த்து இருக்கின்றேன்.

இதனை Fridgeயில் வைத்து 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிடவும். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

மயோனேஸ் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  முட்டை மஞ்சள் கரு - 3
  .  ஆலிவ் ஆயில் - 1 கப் 
  .  கடுகு தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு (சுமார் 3/4 தே.கரண்டி)
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி


செய்முறை :
  .  முட்டையில் இருந்து வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவினை தனி தனியாக எடுத்து கொள்ளவும். 


  .  மிக்ஸியில் முதலில் மஞ்சள் கருவினை போட்டு 1 நிமிடம் அடித்து கொள்ளவும். இப்பொழுது மஞ்சள் கரு frothyயாக இருக்கும். 


  .  மஞ்சள் கரு நன்றாக அடித்த பிறகு ஆவில் எண்ணெயினை சிறிது சிறிதாக ஊற்றி அடித்து கொள்ளவும். 

(கவனிக்க : எண்ணெயினை அப்படியே சேர்க்க கூடாது. எண்ணெயினை 1 - 2 தே.கரண்டி என்ற அளவில் ஊற்றி முட்டையுடன் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். )

  .  முட்டையுடன் அனைத்து எண்ணெயும் சேர்ந்த பிறகு, அரைத்த கலவை இப்பொழுது Room temperatureயில் வைத்த வெண்ணெய்/ butter மாதிரி இருக்கும். இதுவே சரியான பதம்.


  .  கடைசியில் இத்துடன் கடுகு தூள் + மிளகு தூள் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து மேலும் 1 முறை அடித்து கொள்ளவும். 


  .  சுவையான எளிதில் செய்ய கூடிய அருமையான மயோனேஸ் ரெடி. இதனை சாலட் அல்லது Sandwich / Deviled eggs/ Coleslaw / Sauce போன்றவை செய்யும் பொழுது பயன்படுத்தலாம். 


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


12 comments:

Kurinji said...

very very useful post..

அமுதா கிருஷ்ணா said...

இதை ஒரு நாள் தான் பயன்படுத்த முடியுமா? இல்லை கடையில் வாங்குவது போல சில நாட்கள் பயன்படுத்த முடியுமா கீதா?

Sooriya said...

So yummm...Love these for spreads!! Do visit my page at leisure http://www.delectableflavours.com/

GEETHA ACHAL said...

அனைவருக்கும் நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி அமுதா. இதனை fridgeயில் வைத்து 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிடவும்.

கடையில் வாங்குவதினை விட இதனுடைய shelf time குறைவு தான்.

ஆனால் சுவை சூப்பராக இருக்கும். நான் செய்து இருப்பது basic recipe.

உங்களுடைய காரத்திற்கு ஏற்ப பொருட்கள்களை சேர்த்து கொள்ளவும்.

ஹுஸைனம்மா said...

ரெஸிப்பி ரொம்ப எளிமையா இருக்கு. காலை ஸ்கூலுக்குச் செய்து கொடுக்கக் கூட முடியும்.

ஆலிவ் ஆயில் ஒரு கப் - இது எந்த அளவு கப் கீதா? 200 மிலியா, 250 மிலியா? அவ்வளவு எண்ணெய் சேருமாப்பா? நீர்த்து விடாதா?

ஹுஸைனம்மா said...

முட்டை+எண்ணெயை மிக்ஸியில்தான் அடிக்கணுமா? Egg-beater bowl-ல் அடிக்கலாமா?

Unknown said...

super akka... homemade is the best

Unknown said...

arumaiyana seimurai ... padangalum alagu

Mrs.Mano Saminathan said...

மிக அருமையாக மயோனஸ் செய்யும் முறையை எழுதியிருக்கிறீர்கள் கீதா! விளக்கம் மிக அருமை!

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா.. ஒரு கப் என்பது சுமார் 200 - 250 ml என்ற அளவில் எடுத்து கொள்ளுங்க... முட்டையின் மஞ்சள் கருவின் அளவினையும் பொருத்தது.

கண்டிப்பாக இரண்டினையும் அடிக்கும் பொழுது கலந்துவிடும். ஆனால் எண்ணெயினை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும்.

அதே மாதிரி இதனை மிக்ஸியில் இல்லாமல் egg beaterயிலும் செய்யலாம்.

அப்படி செய்யும் பொழுது மிகவும் அகலமான பாத்திரத்தினை விட் narrow and deep பாத்திரத்தினை (mixie jar மாதிரி) பயன்படுத்தினால் கலக்குவது சுலபம்.

Gita Jaishankar said...

What a useful post...thanks for sharing this dear :)

Related Posts Plugin for WordPress, Blogger...