கோவா குலாப் ஜாமூன் - Khoya Gulab Jamun Recipe - Diwali Sweet Recipe


எப்பொழுதும் வெரும் குலாப் ஜாமுன் மிக்ஸ் வைத்து தான் ஜாமுன் செய்வோம். அத்துடன் கோவா சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். 

கோவாவினை அப்படியே குலாப் ஜாமுன் மாதிரி செய்வதினை விட அதனை மிக்ஸுடன் சேர்த்து செய்வது மிகவும் எளிதாகவும் அதே சுவையுடன் இருக்கும்.  என்னுடைய தோழி காயத்ரி இதனை செய்து கொடுத்தாங்க...ரொம்ப சூப்பராக இருந்தது. நான் இப்பொழுது எல்லாம் வீட்டில் அடிக்கடி இந்த முறையில் தான் செய்கிறேன். நன்றாக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

print this page PRINT

ஜாமூன் செய்ய தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  Ready made Gulab Jamun Mix  - 2 கப்
   .  கோவா / khoya - 1 கப்
   .  பால் - 1 - 2 மேஜை கரண்டி
   .  எண்ணெய் - பொரிப்பதற்கு

சக்கரை சிரப் செய்ய :
   .  சக்கரை - 2 கப்
   .  தண்ணீர் - 2 கப்
   .  ஏலக்காய் - 2 பொடித்தது


செய்முறை :
   .  கோவா + குலாப் ஜாமூன் மிக்ஸ் + பால் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (பாலினை சிறிது சிறிதாக சேர்த்து மாவினை பிசைந்து கொள்ளவும். )


  .  பிசைந்து வைத்துள்ள மாவினை விரும்பிய வடிவத்தில் உருட்டி கொள்ளவும். நான் சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து இருக்கின்றேன்.


  .  இப்பொழுது சக்கரை சிரப் தயார் செய்து வைத்து கொள்ளவும் . ஒரு அகலமான பாத்திரத்தில் சக்கரை + தண்ணீர் + பொடித்த ஏலக்காய் சேர்த்து 8 - 10 நிமிடங்கள் சக்கரை கரையும் வரை வைக்கவும். (கவனிக்க : பாகு வரும் வரை கொதிக்கவிட வேண்டாம். )


 .  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்து இருக்கும் உருண்டைகளை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.


   .  உருண்டைகள் அனைத்தும் வறுத்து எடுத்து கொள்ளவும். 


   .  உருண்டைகளை இப்பொழுது மிதமான சூட்டில் இருக்கும் சக்கரை சிரப்பில் போட்டு குறைந்தது 15 - 20 நிமிடங்கள் ஊறவிடவும். (கவனிக்க : சக்கரை சிரப் ரொம்ப சூடாக இருந்தால், ஜாமூன்கள் சீக்கிரமாக உடைந்துவிடும். அதே மாதிரி சக்கரை சிரப் ஆறி இருந்தாலும் ஜாமூன்கள் நன்றாகா ஊறி இருக்காது)

   .  இப்பொழுது சுவையான குலாப் ஜாமுன் ரெடி. Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...12 comments:

Anitha said...

Tempting Jamuns...

Mahi said...

Nice recipe & drool worthy (1st) click(s) Geetha! :)

Lifewithspices said...

sooper yummy jamuns..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

செய்முறை விளக்கத்தையும் படத்தையும் பார்த்த போது பசி தீர்ந்தது பகிர்வுக்கு நனறி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

great-secret-of-life said...

looks so soft and tasty

nandoos kitchen said...

yummy, mouthwatering jamuns

Unknown said...

Gulab jamun romba arumai ..Parthale pasikuthu

Unknown said...

Kushboo idli madhiri , kushboo jamuns. Super Geetha.

Gayathri Gopi said...

Parpatharkae supera irukku...Kalakkiteenga Geetha..

Gayathri Gopi said...

parpatharkae supera irukku.kalaketeenga geetha..!!!

yurekha said...

colorful.. i love the way u clicked..

panantha said...

Where we can get khoya? Is it available in Indian grocery store in freezer section? Planning to do it for Diwali... Kindly help me mam...

Related Posts Plugin for WordPress, Blogger...