மாலாடு - பொட்டுக்கடலை உருண்டை - Maa Laddu - Pottukadalai Urundai - Easy Diwali Recipes


Pratheepa இதனை செய்து கொடுத்த பொழுது எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது ரொம்ப பிடித்து விட்டது.  எளிதில் செய்ய சத்தான உருண்டை இது. கண்டிப்பாக குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.. 

நல்ல Brand  சுத்தமான பொட்டுக்கடலையினை இதற்கு பயன்படுத்தவும். 

சக்கரையின் அளவினை குறைத்து 1 கப் பதிலாக 3/4 கப் என்று எடுத்து கொள்ளலாம்.

நெய் அதிகம் சேர்க்காமல், பால் சேர்த்து மாவினை பிசைந்து உருண்டைகள் செய்யலாம். ஆனால் பால் சேர்க்கும் பொழுது அதனை 1 - 2 நாட்களூள் சாப்பிட வேண்டும்.

ஏலக்காயினை விரும்பினால் தனியாக பொடித்து வைக்கவும். அனைத்து பொருட்களையும்  மாவு மாதிரி நன்றாக பொடித்து கொள்ளவும்.

இதில் எந்த Nutsயும் சேர்க்காமல் சின்ன குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதே மாதிரி நிறைய நெய் சேர்க்க வேண்டாம். 

உருண்டைகள் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  பொடித்த பொட்டுக்கடலை  - 2 கப்
   .  பொடித்த சக்கரை - 1 கப்
   .  ஏலக்காய் - 2 (சிறிது சக்கரையுடன் பொடித்து கொள்ளவும்)
   .  நெய் - 1/2 கப்
   .  முந்திரி - 10 - 12 (சிறியதாக உடைத்து வைக்கவும்)

செய்முறை :
   .  பொட்டுக்கடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். 


   .  அதே மாதிரி ஏலக்காய் + சக்கரையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


   .  ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த பொட்டுக்கடலை + 1 கப் பொடித்த சக்கரையினை கலந்து கொள்ளவும்,


   .  தாளிக்கும் கடாயில் 2 தே.கரண்டி முந்திரியினை போட்டு வறுத்து வைக்கவும்.


   .  இதனை அப்படியே கலந்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கிளறவும்.


   .  இந்த மாவில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து மாவினை கெட்டியான உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

   .  சுவையான சத்தான உருண்டை ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...5 comments:

Priya Suresh said...

Omg, prefectly rolled maaladdoos, damn cute they are..

Anitha Sundramoorthy said...

Perfectly made...i'm plan to post this recipe tomorrow..

ரூபன் said...

வணக்கம்
அருமையான சமையல் குறிப்பு பகிர்வுக்கு நன்றி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Veena Theagarajan said...

Perfectly done.. Difficult to stop at one

Priya Nm said...

Super fine ladoos,you have done it so well.

Related Posts Plugin for WordPress, Blogger...