மட்டன் கறி குருமா - Mutton Kurma Recipe for Idli / Dosai - Non-veg Side Dish for Breakfast


எங்க வீட்டில் எப்பொழுதும் தீபாவளியின் பொழுது காலையில் கண்டிப்பாக இட்லி, தோசைக்கு கறி குருமா தான் செய்வாங்க... ரொம்ப சூப்பராக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
    .  மட்டன் / கோழி கறி - 1/2 கிலோ
    .  வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கி வைக்கவும்)
    .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
    .  தேங்காய் - 2 துண்டுகள்

வதக்கி அரைக்க :
    .  வெங்காயம் - 1
    .  தக்காளி - 1
    .  பச்சை மிளகாய் - 5
    .  மிளகு - 10

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
    .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி 
    .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
    .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
    .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
    .  பட்டை - 1 துண்டு   
    .  பிரியாணி இலை - 1

கடைசியில் சேர்க்க :
    .  கருவேப்பிலை - 10 இலை
    .  கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை ;
    .  வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்து இருக்கும் பொருட்கள் + பச்சைமிளகாய் + மிளகு சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


 .  வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


  .  தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து தனியாக மைய அரைத்து வைக்கவும்.

   .  கறியினை சுத்தம செய்து வைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    .  இஞ்சி பூண்டு விழுது சிறிது வதங்கியதும் அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


    .  இத்துடன் அரைத்த வெங்காய விழுது + கறியினை சேர்க்கவும்.

    .  அத்துடன் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


    .  2 - 3 நிமிடங்கள் கழித்து , அதில் மைய அரைத்த தேங்காய விழுது + 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஸ்ர் குக்கரினை மூடி 5 - 6 விசில் வரும் வரை வேகவிடவும்.


    .  குக்கரின் பிரஸர் அடங்கியதும், குக்கரினை திறந்து அதில் கருவேப்பிலை + கொத்தமல்லி சேர்த்து கிளறிவிட்டு 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.

    .  சுவையான குருமா ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.கவனிக்க :
அவரவர் சாப்பிடும் அளவு காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் பயன்படுத்தவும்.

கண்டிப்பாக பச்சை மிளகாய் + மிளகு சேர்க்கவும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

2 comments:

Sathya Priya said...

Super kuruma ..

Savitha Ganesan said...

Enga amma udaya special idhu. Idli and kari kuzhambu. superb combo.

Related Posts Plugin for WordPress, Blogger...