ஆந்திரா தக்காளி எலுமிச்சை சாதம் - Andhra Tomato Lemon Rice Recipe


print this page PRINT
இந்த சாதத்தில் வெங்காயம் , இஞ்சி, பூண்டு + எந்த மசாலா தூள் போன்றவை எதுவும் சேர்க்க தேவையில்லை.

இதில் காரத்திற்கு கண்டிப்பாக பச்சை மிளகாய் + காய்ந்த மிளகாய் இரண்டும் சேர்க்க வேண்டும். அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாயினை சேர்த்து கொள்ளவும். மிளகாய் தூள் பயன்படுத்த வேண்டாம்.

அவரவர் விருப்பதிற்கு ஏற்ப தாளிக்க பருப்பினை பயன்படுத்தி கொள்ளவும். இதில் வேர்கடலை சேர்ப்பது தனி சுவையினை தரும்.

இந்த சாதத்தில் தக்காளியுடன் கடைசியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பது ஒரு special touch to the recipe.  (அதிகம் சேர்க்க வேண்டாம். )

வித்தியசமான இந்த ரெஸிபினை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி Sreelakshmi .

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வேகவைத்த சாதம் - 3 கப்
   .  தக்காளி - 1 பெரியது
   .  எலுமிச்சை சாறு - 1 தே. கரண்டி
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  கொத்தமல்லி - சிறிதளவு
   .  பச்சை மிளகாய் - 5
   .  காய்ந்த மிளகாய் - 5 

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  பெருங்காயம் - 2 சிட்டிகை அளவு
   .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  சீரகம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக
   .  கடலைப்பருப்பு - 1 மேஜை.கரண்டி
   .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
   .  வேர்க்கடலை - 15 - 20

செய்முறை:
. தக்காளியினை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு + சீரகம்  சேர்த்து தாளித்து அத்துடன் கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு  + வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.

.  பிறகு இத்துடன், கருவேப்பிலை + காய்ந்த மிளகாய் + பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


.  அதன்பின், தக்காளி சேர்த்து கலந்து அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகையினை சேர்த்து 1 - 2 நிமிடஙள் வதக்கவும்.


.  இப்பொழுது தக்காளி நன்றாக வதங்கி இருக்கும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பினை நிறுத்தி விடவும்.

.  அதில் உடனே சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.


.  கடைசியில் கொத்தமல்லி தூவி மேலும் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளவும்.


.  எளிதில் செய்ய கூடிய மிகவும் சுவையான தக்காளி சாதம் இது. இதனை சிப்ஸ், வறுவல் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


1 comments:

Anonymous said...

Tomoto rice ... Cant be a andhra food..

Related Posts Plugin for WordPress, Blogger...