முட்டை வேகவைப்பது & முட்டை ப்ரை - Boiled Eggs & Eggs Fry Recipe- Indian Rice Cooker Recipe


Rice Cookerயில் இது மாதிரி ப்ரை எல்லாம் செய்யலாம். முட்டை ப்ரை, உருளை ப்ரை போன்றவையினை எளிதில் செய்துவிடலாம்...

நீங்களூம் இதே மாதிரி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.....

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  முட்டை

முட்டை ப்ரை செய்ய :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
  .  Rice Cookerயில் Cook Modeயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முட்டை போட்டு 12 - 15 நிமிடங்கள் வேகவிடவும்.

  .  முட்டை இப்பொழுது வெந்து இருக்கும். முட்டையின் மேல் தோலினை நீக்கி வைத்து கொள்ளவும்.


  .  ப்ரை செய்ய தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + சோம்பு தூள் + உப்பு  சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  .  முட்டையினை இரண்டாக வெந்து கொள்ளவும். முட்டையினை கலந்து வைத்துள்ள கலவையினை பிரட்டி வைக்கவும்.


  .  Rice Cookerயில் Cook Modeயில் பாத்திரத்தினை சூடுபடுத்தவும்.  அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையினை போட்டு வேகவிடவும்.

  .  1 - 2 நிமிடங்கள் கழித்து அதனை திருப்பி போட்டு மேலும் வேகவிடவும்.


  .  கடைசியில் இத்துடன் கருவேப்பிலை சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய முட்டை ப்ரை ரெடி.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


2 comments:

sangeethas creations said...

super ...looks yummy

Jaleela Kamal said...

இந்த முட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும், சும்மா மாலை டிபனுக்கு சாப்பிடவும் பிடிக்கும். இப்ப உடனே சாப்பிடனும் போல இருக்கு/

Related Posts Plugin for WordPress, Blogger...