காஞ்சிபூரம் இட்லி - Kanchipuram Idli Recipe using Rice Cooker - Indian Rice Cooker Recipes


print this page PRINT
Rice Cookerயில் இட்லியினை வேகவைக்கலாம். இட்லி வேக வைப்பது மாதிரியே கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு போன்றவையினை இதில் வேகவைக்கலாம்.

காய்களை இதே மாதிரி Steam Cook செய்யலாம். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  இட்லி மாவு - 3 கப்

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி
  .  கடுகு - தாளிக்க
  .  கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு - தலா 1 மேஜை கரண்டி
  .  காய்ந்த மிளகாய் - 3 
  .  சீரகம் - 1/4 தே.கரண்டி
  .  மிளகு - 1/4 தே.கரண்டி பொடித்தது
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டி


செய்முறை :
  .  தாளிக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொடுத்துள்ள அனைத்து பொருட்களும் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

  .  இதனை இட்லி மாவில் சேர்த்து கலந்து வைக்கவும்.


  .  ரைஸ் குக்கரில் Cook Modeயில் ON செய்து இதில் 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

  .  சிறிய கிண்ணம் அல்லது Tumbler / தட்டு போன்றவையில் மாவினை ஊற்றி கொண்டு அதனை ரைஸ் குக்கரில் வைத்து மூடி 8 - 10 நிமிடங்கள் இட்லியினை வேகவிடவும்.


  .  இப்பொழுது இட்லி நன்றாக வெந்து இருக்கும். 

  .  சுவையான எளிதில் செய்ய கூடிய காஞ்சிபூரம் இட்லி ரெடி.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


Related Posts Plugin for WordPress, Blogger...