முருங்கைக்கீரை சாம்பார் - Murungai Keerai Sambar Recipe - Drumstick Leaves


print this page PRINT
முருங்கைக்கீரையில் அதிக அளவு Vitamins , Iron , Calcium மற்றும் Potassium இருக்கின்றது.

முருங்கைக்கீரை சீக்கிரமாக வெந்துவிடும்.  முருங்கைக்கீரையினை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  முருங்கைக்கீரை - 2 - 3 கப் சுத்தம் செய்தது
  .  துவரம் பருப்பு - 1 கப்
  .  வெங்காயம் - 1
  .  தக்காளி - 1
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு , வெந்தயம் - தாளிக்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  தனியா தூள் - 1 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு


செய்முறை :
  .  துவரம் பருப்பினை கழுவி கொள்ளவும். அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 5 - 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்கீரையினை சுத்தம் செய்து வைக்கவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு + வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


  .  வெங்காயம் வதங்கியவுடன் அதில் தக்காளி + கருவேப்பிலை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

  .  குக்கரில் பிரஸர் அடங்கியதும்,  அதனை திறந்து பருப்பினை மசித்து கொள்ளவும். புளியினை 1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். கீரையினை சுத்தம் செய்து கொள்ளவும்.


  .  தக்காளி வதங்கியது அத்துடன் புளி தண்ணீர் + வேகவைத்து மசித்த துவரம் பருப்பு + 2 -3 கப் தண்ணீர் + கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக  8 - 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


  .  கடைசியில் பெருங்காயம் + முருங்கைக்கீரையினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும். (கவனிக்க : முருங்கைக்கீரை சேர்த்த பிறகு அதிக நேரம் வேகவைக்க தேவையில்லை.அதனால் தான் கடைசியில் சேர்க்க வேண்டும்.)


  .  சுவையான சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இத்துடன் ஏதாவது பொரியல்,வறுவல் அல்லது அப்பளம் / சிப்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.4 comments:

priya satheesh said...

One of my most fav sambhar and we used to add raw mango along with this....tempting !

sangeethas creations said...

கலர்புல் சாம்பார் ...கவர்ந்து இழுக்குது ..அருமை ... சாதத்தில் ,சாம்பார் இதய வடிவத்தில் வைத்து , பரிமாறி இருப்பது ரொம்ப அழகு ..

Menaga sathia said...

உருளை வறுவலுடன் சாப்பிட செம ருசி...

Saratha said...

Sambarin manam ingu varai adikkuthu.superb !!

Related Posts Plugin for WordPress, Blogger...