மூஸ்லிம் ஸ்டைல் பிரியாணி கத்திரிக்காய் - Biryani Kathirikai - Side Dish for Biryani - Brinjal Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய அசத்தலான ரெஸிபி இது. இதனை செய்வதற்கும் மிகவும் குறைந்த பொருட்களே தேவைப்படும்.

இதில் கண்டிப்பாக வெங்காயம் + தக்காளி சேர்க்க தேவையில்லை.

இதனுடைய Specialயே இதில் சேர்க்கும் பொடி.. வேர்க்கடலை + எள் + வெந்தயத்தினை வறுத்து பொடித்து சேர்ப்பது தான்.

கடைசியில் சிறிய துண்டு வெல்லம் சேர்ப்பது கூடுதல் சுவையினை தரும்.

இதனை எந்த வித கத்திரிக்காய் வைத்தும் செய்யலாம். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்... நன்றி சவிதா...


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  கத்திரிக்காய் - 10
  .  புளி - நெல்லிக்காய் அளவு (அ) புளி பேஸ்ட் - 1 தே.கரண்டி
  .  வெல்லம் - சிறிய துண்டு (கடைசியில் சேர்க்க)

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 2 - 3 மேஜை கரண்டி
  .  மிளகு - 10
  .  கருவேப்பிலை - 10 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் / சாம்பார் பொடி - 1 மேஜை கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடித்து கொள்ள :
  .  வேர்க்கடலை - 3 மேஜை கரண்டி
  .  எள் - 2 மேஜை கரண்டி
  .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி


செய்முறை :
  .  வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அதனை மைய பொடித்து கொள்ளவும்.

 (கவனிக்க : வேர்க்கடலை + வெந்தயத்தினை முதலில் வறுத்த பிறகு எள் சேர்த்து வறுக்கவும்.எள் சீக்கிரமாக வறுப்பட்டுவிடும்.  நான் வேர்க்கடலையினை தோலுடனே அரைத்து கொண்டேன். விரும்பினால் தோல் நீக்கி கொள்ளவும்.)

  .  கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கத்திரிக்காய் காம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர் பக்கம் வெட்டவும். இப்படி வெட்டினால் கத்திரிக்காய் உடையாமல் இருக்கும்.


  .  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு + கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  .  இத்துடன் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


.  பிறகு அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள்யினை சேர்த்து கிளறிவிடவும். .  புளியினை  1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். இப்பொழுது கத்திரிக்காயில் கரைத்து வைத்து இருக்கும் புளியினை ஊற்றி 3 - 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 


 .  இப்பொழுது பொடித்த பொடியினை கத்திரிக்காயில் சேர்த்து கலந்து விடவும்.


 .  அனைத்தும் சேரும் மாறு நன்றாக கிளறிய பிறகு,அதனை கண்டிப்பாக தட்டு போட்டு மூடி சிறிய தீயில் சுமார் 6 - 8 நிமிடங்கள் வைக்கவும். இப்பொழுது எண்ணெய் தனியாக பிரிந்து வரும்.  அதுவே சரியான பதம். அப்பொழுது சிறிய வெல்லம்துண்டினை சேர்த்து கிள்றிவிடவும்,

(கண்டிப்பாக தட்டு போட்டு மூடி வேகவிடவும் அப்படி செய்தால் தான் எண்ணெய் தனியாக வரும். இல்லை என்றால் thick ஆக நிறைய நேரம் எடுத்து சுவையில் வித்தியசம் இருக்கும். )

 .  சுவையான பிரியாணி கத்திரிக்காய் ரெடி.இதனை பிரியாணியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். விரும்பினால் சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.2 comments:

Sangeetha Nambi said...

This is sooooo inviting !

Kurinji said...

super..........

Related Posts Plugin for WordPress, Blogger...