ரவா கிச்சடி / ரவை கிச்சடி - Rice Cooker Rava Kichadi Recipe - Indian Rice Cooker Recipe / Ravai


print this page PRINT
இந்த மாதம் Friendship 5 Seriesயில் நாம் பார்க்க போவது Rice Cooker Recipes . ரைஸ் குக்கரியினை வைத்து வெரும் சாதம் மட்டும் தான செய்வோம். ஆனால் இதனை வைத்து பல வகையான சமையல் செய்யலாம்.

ரைஸ் குக்கரினை வைத்து கிச்சடி செய்து இருக்கின்றேன். இதே மாதிரி புலாவ் , பிரியாணி , உப்புமா என்று செய்யலாம்.

நீங்கள் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 13 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ரவை - 2 கப்
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு கடைசியில் தூவ
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 2
  .  பச்சை மிளகாய் - 4  - 5
  .  பூண்டு - 10 பல் தோல் நீக்கியது

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  பிரியாணி இலை - 2
  .  சோம்பு - 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறீ வைக்கவும்,

ரைஸ் குக்கரில் Cook Modeயில் வைத்து அந்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வைக்கவும்.

.  பிறகு பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


.  பூண்டு வதங்கியதும் அத்துடன் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் +கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அத்துடன் தக்காளி + பச்சை மிளகாய் + மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் அத்துடன் 4 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரினை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

.  சுமார் 3 - 4 நிமிடங்களில் தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும்.


தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையினை கொட்டி கட்டி இல்லாமல் கிளறிவிடவும்.

.  ரவை நன்றாக கிளறிய பிறகு அதனை ரைஸ் குக்கர் மூடி போட்டு Keep Warm Modeயில் வைத்து 3 - 4 நிமிடங்கள் வைக்கவும்.


இப்பொழுது ரவை நன்றாக வெந்து இருக்கும். இத்துடன் கொத்தமல்லி இலையினை தூவி ஒரு முறை கிளறிவிடவும்.

சுவையான சூடான கிச்சடி ரெடி. இதனை தேங்காய சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


3 comments:

Savitha Ramesh said...

Fantastic post Geetha. Onion and tomatoes has sauteed very well. So innovative.

Kalpana Sareesh said...

kichdi n chutney wow combo.. sooper

sangeethas creations said...

சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...