முட்டையில்லாத பனானா கேக் - வாழைப்பழ கேக் - Eggless Banana Cake Recipe - Easy Cake Recipe


print this page PRINT

முட்டை சேர்க்காத கேக் இது.  இதற்கு நன்றாக பழுத்த வாழைப்பத்தினை பயன்படுத்தலாம்.

கொடுத்துள்ள அளவில் சரியாக செய்தால் கேக் நன்றாக வரும். நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

கேக் செய்ய தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மைதா மாவு / All purpose Flour - 3/4 கப்
   .  பேக்கிங் பவுடர் / Baking Powder - 1/2 தே.கரண்டி
   .  பேக்கிங் சோடா / Baking Soda - 1/2 தே.கரண்டி

   .  நன்றாக பழுத்த வாழைப்பழம் - 2
   .  சக்கரை - 1/4 கப்
   .  எண்ணெய் - 1/4 கப்
   .  Vanilla Essence - 1/2 தே.கரண்டி

   .  வால்நட் / Walnut -  2 மேஜை கரண்டி அளவு (மேலே தூவ)செய்முறை :
  .  முதலில் மைதா மாவு + Baking Powder + Baking Sodaவினை 2 - 3 முறை ஒன்றாக சேர்த்து சலித்து கொள்ளவும். (இப்படி சலிப்பதால் எல்லாம் நன்றாக கலந்துவிடும். அதனால் கரண்டியினை வைத்து Mix செய்வததினைவிட இப்படி சலிப்பது நல்லது. )

  .  அவனை 350Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். 


  .  வாழைப்பழத்தினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

  .  அத்துடன் சக்கரை +  எண்ணெய் + Vanilla சேர்த்து கலந்து மேலும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.


  .  இந்த கலவையுடன் மைதா மாவினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  .  சிறிய Baking Panயில் எண்ணெய் தடவி அதில் சிறிது மைதா மாவினை Dust செய்து வைக்கவும். அதில் இந்த கலவையினை போட்டு சமபடுத்தி , 2 - 3 முறை Panயினை தட்டி கொள்ளவும். இப்படி செய்வதால் எந்த Air Bubblesயும் உள்ளே இல்லாமல் நீங்கிவிடும்.


  .  கலவையின் மீது Walnutயினை தூவிவிடவும். (விரும்பினால் சேர்க்கவும். )

  .  Panயினை மூற்சூடு செய்த அவனில் 350 Fயில் 15 - 18 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  கேக்  வெந்து உள்ளதா என்பதினை பார்க்க ஒரு Toothpickயினை கேக் நடுவில் 2 - 3 இடத்தில் உள்ளே விட்டு பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வந்தால் வேக் வெந்து இருக்கும். இல்லை என்றால் மேலும் 2 - 3 நிமிடங்கள் வைக்கவும்.

  .  கேக் வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவைத்த பின் வெட்டி பறிமாறவும். சுவையான சத்தான பனானா கேக் ரெடி.


4 comments:

Sathya Priya said...

Cake arumai geetha.Kuripa unga salithal tips super.

Joe Mom said...

How to preheat the oven?

Anonymous said...

Hi geetha, I have tried this recipe and it was excellent. Thank you for sharing this recipe

Rekha said...

Hi geetha, I tried this recipe and it was excellent. Thank you for sharing. I have tried many of your recipes and just love your site. Keep up good work.

Related Posts Plugin for WordPress, Blogger...