கிராமத்து மீன் குழம்பு - Gramathu Meen Kuzhambu Recipe - Fish Kuzhambu


print this page PRINT
எங்க வீட்டில் அம்மா எப்பொழுதும் செய்யும் மீன் குழம்பு இது. நானும் பல முறை செய்தாலும் எதோ அம்மா செய்யும் அந்த Taste இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றது. 

இதில் எதனையும் அரைத்து சேர்க்கவோ அல்லது தேங்காய் சேர்க்கவோ வேண்டாம்.

இந்த குழம்பு ரொம்ப Thickஆகவோ அல்லது தண்ணீயாகவோ இருக்க கூடாது. சரியான பதத்தில் செய்தால் தான் நன்றாக இருக்கும்.

எங்க வீட்டில் மிளகாயினை தூளினை அரைக்கும் பொழுது அத்துடன் தனியாக தூளினையும் சேர்த்தே அரைத்துவிடுவாங்க. அதனால் தனி மிளகாய் தூள் பயன்படுத்தினால் அத்துடன் தனியா தூளினையும் சேர்த்து கொள்ளவும்.

குழம்பில் புளியின சுவைக்கு ஏற்ப காரம் சேர்த்து கொள்ளவும். சில புளி மிகவும் புளிப்பாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அதனால் அதற்கு தகுந்த மாதிரி காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி புளியினை கரைக்க அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கொடுத்துள்ள அளவே போதுமானது.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மீன் - 1/2 கிலோ
   .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  கொத்தமல்லி - கடைசியில் தூவ

வெட்டி கொள்ள :
   .  வெங்காயம் - 1 பெரியது
   .  தக்காளி - 1
   .  பச்சை மிளகாய் - 4

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1  + 1/2 மேஜை கரண்டி 
   .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க ;
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி

கடுகு + வெந்தயம் தாளிப்பதற்கு பதிலாக வடகம் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

செய்முறை :
   .  வெங்காயம் + தக்காளியினை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.

   .  மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புளியினை 2 + 1/2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.


   .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

   .  வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


   .  தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கரைத்த வைத்துள்ள புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

   .  இதனை தட்டு போட்டு மூடி சுமார் 8 - 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


   .  குழம்பு நன்றாக கொதித்த பிறகு அதில் சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை + கீறிய பச்சை மிளகாயினை சேர்த்து தட்டு போட்டு மூடி மேலும் 4 - 5  நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.


   .  கடைசியில் கொத்தமல்லி + கருவேப்பிலை தூவி விடவும்.

   .  சுவையான மீன் குழம்பு ரெடி. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். மீன் குழம்பினை செய்தவுடன் சாப்பிடுவதினை விட கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

5 comments:

Shanthi said...

love it when you add fish and green chillies together in the end..

Farin Ahmed said...

Amma meenkulambu-in rusiyae thani dhaan... yours look so tempting

Farin Ahmed said...

Amma meenkulambu-in rusiyae thani dhaan... yours look so tempting

Menaga sathia said...

அம்மாவும் இதே போல தான் செய்வாங்க,இன்னிக்கு நாட்டுக்கார்த்திகைக்கு அம்மா செய்வது போல தான் செய்தேன்.கடைசியா கறிவேப்பிலை சேர்ப்பாங்க.

anbu saravanan said...

Nice Blog. IF you want your blog will look like my http://bestsamayalsecret.blogspot.com.
contact me . I am a blog designer

Related Posts Plugin for WordPress, Blogger...