கோல்ட் பிஷ் - Homemade Goldfish Crackers Recipe - Baked Cheddar Cheese Crackers


print this page PRINT

மிகவும் எளிதில் செய்ய கூடிய சத்தான recipe இது. கொடுத்துள்ள அளவில் பொருட்களை சரியாக சேர்த்து கொண்டால் அதே சுவையில் இருக்கும்.

இதில் நான் துறுவிய Cheeseயினை பயன்படுத்தி இருக்கின்றேன். கண்டிப்பாக Cheddar Cheese பயன்படுத்தவும். அது தான் அந்த டேஸ்ட் கொடுக்கும்.

Butter -  Room Temperatureயில் இருக்க தேவையில்லை. அதே மாதிரி உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்.

நான் Fish Cookie Cutterயினை செய்தேன். அவரவர் விரும்பிய வடிவத்தில் இந்த crackerயினை செய்து கொள்ளலாம். அக்‌ஷ்தா இதில் Heart shape Crackerயினை செய்தாள்.

குழந்தைகளையே கட் செய்து கொடுக்க சொன்னா அவர்களும் மிகவும் ஆசையாக செய்வாங்க...நமக்கும் வேலை மிச்சம்.

இந்த Crackers வேக அதிக நேரம் எடுக்காது. அவரவர் Ovenயின் திறன் பொருத்து நேரம் எடுக்கும். 

நான் சப்பாத்தி திரட்டும் கல்லியே மாவினை திரட்டினேன். அதனால் முதலில் செய்த Goldfish Crackers எல்லாம் அதே மாதிரி அதனுடைய Original Tasteயிலேயே இருந்தது. 

ஆனால் கடைசியில் போக போக மைதா மாவினை சேர்த்து சாப்பாத்தி மாதிரி தேய்பதால் மைதா மாவு அதிகமாகி விட்டது. அதனால் சுவையில் சிறிது வித்தியசம் இருந்தது.

சப்பாத்தி கல்லில் திறட்டாமல், கலவையினை கொஞ்சம் மைதாமாவினை Dust செய்து அதனை Kitchen Table Counter / பெரிய Cutting Board மீது தேய்தால் அனைத்தும் ஒரே நேரத்தில் தேய்கலாம். அதனால் மைதாவினை Dust செய்வதற்கும் மிகவும் குறைவாகவே பயன்படுத்தலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மைதா மாவு - 1 கப்
   .  Shredded Cheddar Cheese /துறுவிய Cheese - 2 கப் ( 8 Ounces)
   .  வெண்ணெய் / Butter - 4 மேஜை கரண்டி
   .  உப்பு - 1/2 தே.கரண்டி
   .  தண்ணீர் - 2 மேஜை கரண்டி


செய்முறை :
  .  முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். மிக்ஸி / Food Processorயில் மைதா மாவு + வெண்ணெய் + உப்பு + சீஸ் சேர்த்து 3 - 4 முறை Pulse Modeயில் அடித்து கொண்டால் அனைத்தும் ஒன்றாக சேர்த்து இப்படி இருக்கும்.


  .  இத்துடன் மேலும் 1 - 2 மேஜை கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் அனைத்தும் ஒன்றாக கலந்துவிடும். 


  .  இப்பொழுது மாவு ரெடி. இதனை Plastic Wrapயில் சுற்றி Fridgeயில் சுமார் 30 நிமிடங்கள் வைத்துவிடவும்.

  .  அவரவர் விரும்பிய வடிவத்தில் Crackers செய்து கொள்ளவும். மாவு Fridge இருந்த நேரத்தில் நான் Goldfish செய்ய Fish Cookie Cutterயினை செய்தேன். 

  .  அதனை செய்ய தேவையான பொருட்கள் - Scissors , Tape , Ruler மற்றும் முக்கியமாக எதாவது அலுமினியம் Can (நான் Coke Canயினை பயன்படுத்தி இருக்கின்றேன்). 

  .  முதலில் Canயில் மேல் பகுதி + கீழ் பகுதியினை நீக்கி நடுவில் இருக்கும் பகுதியினை மட்டும் எடுத்து கொள்ளவும். (கவனமாக வெட்டவும். )


  .  பிறகு அதில் Scaleயினை வைத்து Straight கோடுகள் போட்டு படத்தில் இருப்பது போல நீளமான துண்டுகளாக வெட்டவும்.

  .  ஒரு நீளமான துண்டுனை எடுத்து கொள்ளவும். அதனுடைய இரண்டு ஒரங்கலையும் ஒன்றாக சேர்த்து அந்த இடத்தில் Tape போட்டு 2 - 3 முறை சுற்றி கொள்ளவும்.  இப்பொழுது ஒரு Round Shape கிடைத்து இருக்கும்.


  .  இதில் படத்தில்  உள்ள Yellow Arrow உள்ள இடத்தில் இரண்டு விரல்கள் ( Thumb & Index Finger) யினை வைத்து சிறிது அழுத்தினால் மீன் வடிவம் கிடைத்துவிடும். அதே மாதிரி Tape செய்த வால் பகுதியினை கொஞ்சம் Flatஆக அழுத்துவிடவும்.  இப்பொழுது Goldfish Cookie Cutter ரெடி.

  .  அவனை 350 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். Fridgeயில் இருக்கும் கலவையினை எடுத்து பெரிய உருண்டை ஒன்றினை எடுத்து சப்பாத்தி உருட்டுவது மாதிரி சிறிது மாவு தொட்டு உருட்டி கொள்ளவும். 

  .  அதில் இந்த Cookie Cutterயினை வைத்து வெட்டி கொள்ளவும்.


  .  Cut செய்த Goldfishயினை அவனில் வைக்கும் ட்ரேயில் அடுக்கி வைக்கவும். 

  .  Goldfishயில் ஒரு குச்சியினை வைத்து வாய் பகுதியிற்கு விரும்பினால் ஒரு கோடு போட்டு வைக்கவும். 


  .  இது அக்‌ஷ்தா செய்த Heart Shaped crackers...


  .  Goldfishயினை மூற்சூடு செய்த அவனில் 350Fயில் 7 - 9 நிமிடங்கள் வேகவிடவும்.


  .  இப்பொழுது Goldfish எல்லாம் நன்றாக வெந்து Crispyயாக இருக்கும். இதனை வெளியில் எடுத்து சிறிது நேரம கண்டிப்பாக ஆறவிடவும்.

  .  சுவையான சத்தான Goldfish Crackers ரெடி. 


9 comments:

Ree Kasirajh said...

So brilliant

Mahi said...

Cute cookies Geetha! :)

Veena Theagarajan said...

kids would love it for sure.. So nicely done

Shanthi said...

Good effort... well explained...

இராஜராஜேஸ்வரி said...

சுவையான சத்தான ,க்ரிஸ்பியான அருமையான பகிர்வுகள்.

Sangeetha Nambi said...

OMG ! What a brilliant work ! No words to express my thought ! Hats off !

GEETHA ACHAL said...

அனைவருக்கும் நன்றி....

Farin Ahmed said...

Super Ji... Love ur idea and hats off to your patience...

Anitha Sundramoorthy said...

Super DIY cookie cutter....

Related Posts Plugin for WordPress, Blogger...