முருங்கைக்கீரை பொரி அரிசி பொரியல் - கிராமத்து சமையல் - Murungai Keerai Pori Arisi Poriyal - Drumstick Leaves Recipe


print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  முருங்கைக்கீரை - 2 கப் (சுத்தம் செய்தது)
  .  பூண்டு - 2 பல் தோலுடன்
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
  .  காய்ந்த மிளகாய் - 1

பொரி அரிசி செய்ய :
  .  அரிசி - 2 மேஜை கரண்டி அளவு


செய்முறை :
.   முருங்கைக்கீரையினை காம்புகள் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

.   கடாயினை நன்றாக சூடுபடுத்தி கொள்ளவும். அதில் அரிசியினை போட்டு வெறுமனே வறுக்கவும். 1 - 2 நிமிடங்கள் கழித்து அரிசி நன்றாக பொரிந்து இருக்கும்.  இது தான் பொரி அரிசி.

(அதற்கு என்று பொரி மாதிரி பொரியும் என்று நினைக்க வேண்டாம். வறுத்த அரிசி கொஞ்சம் தான் பெரியதாக இருக்கும். இதனை அப்படியே சாப்பிட நன்றாக இருக்கும்.)


.   மிக்ஸியில் பொரி அரிசியினை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடைசியில் 2 பல் பூண்டினை தோலுடன் சேர்த்து Pulse Modeயில் 1 - 2 முறை அடித்து கொள்ளவும்.

.   கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து கொள்ளவும். இத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து வேகவிடவும். 


(விரும்பினால் 1 - 2 தே.கரண்டி அளவு தண்ணீர் தெளிக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். )

.   முருங்கைக்கீரை 3 - 4 நிமிடங்களில் வெந்துவிடும். அத்துடன் பொடித்த பொரி அரிசி + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி மேலும் 1 நிமிடம் வேகவிடவும்.


.   சுவையான சத்தான முருங்கைக்கீரை பொரியல் ரெடி. இதனை அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.
4 comments:

Sangeetha Nambi said...

Super healthy poriyal

Ranjani said...

healthy and different thoran..

இராஜராஜேஸ்வரி said...

ஆரோக்கிய சமையலுக்கு பாராட்டுக்கள்.

sangeethas creations said...

arumaiya iruku akka .. keerai + pori arisi puthu combination ....super

Related Posts Plugin for WordPress, Blogger...