பருப்பு உருண்டை குழம்பு - Paruppu Urundai Kuzhambu Recipe - Traditional South Indian Recipes


print this page PRINT
எங்க வீட்டில் அம்மா கண்டிப்பாக 2 - 3 வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த குழம்பினை செய்வாங்க...ரொம்ப நன்றாக இருக்கும்.

பருப்பு உருண்டையினை பிடித்து அப்படியே குழம்பில் சேர்த்து வேக வைப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஒவ்வொரு உருண்டைகளாக தனி தனியாக போட்டு வேகவிடவும். உருண்டைகள் உடைந்துவிடும் என்ற எண்ணம் இருந்தால், இட்லி வேகவைப்பது மாதிரி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து குழம்பில் சேர்க்கலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வெங்காயம் - 1 பெரியது
   .  தக்காளி - 1
   .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  கொத்தமல்லி - கடைசியில் தூவ (விரும்பினால் )

பருப்பு உருண்டை செய்ய :
   .  கடலைப்பருப்பு - 1 கப்
   .  வெங்காயம் - 1/2
   .  காய்ந்த மிளகாய் - 2
   .  சோம்பு - 1/4 தே.கரண்டி
   .  கருவேப்பிலை - 10 இலை பொடியாக நறுக்கியது
   .  உப்பு - 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1 மேஜை கரண்டி 
   .  உப்பு - தேவையான அளவு

(உப்பு சேர்க்கும் பொழுது சிறிது குறைவாகவே சேர்க்கவும். உருண்டையிலும் உப்பு சேர்ப்பதால் கவனமாக இருக்கும். உப்பு குறைவாக இருந்தால் கடைசியில் உப்பு சேர்த்து கொள்ளலாம். )

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி


செய்முறை :
.  கடலைப்பருப்பினை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். புளியினை 2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

.  வெங்காயம் + தக்காளியினை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். உருண்டைக்கு தேவையான வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

.  வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


.  தக்காளி நன்றாக வதங்கிய பிறகு கரைத்த வைத்துள்ள புளி தண்ணீர் + மேலும் 2 கப் தண்ணீர் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

(கவனிக்க : உருண்டை குழம்பு செய்யும் பொழுது குழம்பு கொஞ்சம் தண்ணீயாக செய்தால் தான் உருண்டைகள் உருட்டி குழம்பில் சேர்த்து அது வெந்த பிறகு குழம்பு கொஞ்சம் Thickஆகிவிடும். அதனால் தான் புளி தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து வேண்டும்.)


.  இதனை தட்டு போட்டு மூடி சுமார் 5 - 6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

.  குழம்பு கொதிப்பதற்குள், கடலைபருப்பினை கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் + சோம்பு சேர்த்து மிக்ஸியில் மசால் வடைக்கு அரைப்பது மாதிரி கொரகொரப்பாக் அரைத்து கொள்ளவும்.

.  அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் + கருவேப்பில்லை + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.


.  இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

.  குழம்பு நன்றாக கொதித்த பிறகு அதில் ஒவ்வொரு உருண்டைகளாக தனிதனியாக ஒவ்வொரு இடத்திலும் சேர்த்து வேகவிடவும். அனைத்து உருண்டைகளையும் குழம்பில் போட்ட பிறகு அதனை தட்டு போட்டு மூடி மேலும் 6 - 8   நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.


.  கடைசியில் கொத்தமல்லி + கருவேப்பிலை தூவி விடவும்.

.  சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி. இதனை சாதம், சப்பாத்தி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


1 comments:

Anonymous said...

Mouthwatering kulambu immediately i try this give the onion and tomotto and tamarind in grams

Related Posts Plugin for WordPress, Blogger...