சிமிலி உருண்டை - கிரமாத்து உணவு - Simili Recipe - Ragi Peanut Laddu - Gramathu Recipes


print this page PRINT
மிகவும் சத்தான உருண்டை...எங்க வீட்டில் அம்மா இதனை அடிக்கடி எங்க தாத்தா வீட்டில் செய்வாங்க என்று சொல்லுவாங்க....

இந்த உருண்டை மிகவும் சுவையாக இருக்கும். இதில் வேகவைத்த ராகி அடை + வேர்க்கடலை + எள் + வெல்லம் சேர்ப்பதால் அதிக சத்துகள் கொண்ட உருண்டை.

இதில் ராகியினை தண்ணீர் சேர்த்து பிசைந்து அடைகளாக தட்டி வேகவிட வேண்டும். மிகவும் மொருவலாக வேகவிட தேவையில்லை. ஆனால் கண்டிப்பாக நன்றாக வெந்து இருக்க வேண்டும்.

அதே மாதிரி வேர்க்கடலை + எளினை தனி தனியாக வறுத்து வைக்கவும்.

1 சிறிய துண்டு வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து பாருங்க...வெல்லத்தில் மண் இருந்தால் வேறு வெல்லத்தினை பயன்படுத்தவும்.

அப்படி இல்லை என்றால் வெல்லத்திற்கு பதிலாக Brown Sugar / Coconut sugar பயன்படுத்தலாம்.

கொடுத்துள்ள அளவு வெல்லமே போதுமானது...முதலில் சாப்பிடும் பொழுது இனிப்பு குறைவாக தெரியும். ஆனால் 1 - 2 நாட்கள் கழித்து சாப்பிட்டு பார்த்தால் இனிப்பு  Correctஆக இருப்பது மாதிரி இருக்கும். அவரவர் விருப்பதிறகு ஏற்ப இனிப்பு சேர்த்து கொள்ளவும்.

இந்த உருண்டைகளை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இதனை அப்படியே வெளியில் Room Temperatureயிலேயே வைத்தால் போதும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி சவிதா...உருண்டைகள் செய்ய தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  ராகி மாவு - 2 கப்
   .  வெல்லம் - 3/4 கப் (விரும்பினால் அதிகம் சேர்த்து கொள்ளவும்.)
   .  வறுத்த வேர்க்கடலை - 1 கப்
   .  எள் - 2 மேஜை கரண்டி
   .  உப்பு - 1/4 தே.கரண்டி
   .  நெய் - சிறிதளவு

செய்முறை :
.  முதலில் ராகி மாவுடன் உப்பு சேர்த்து  சலித்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கும் சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும். 


.  தோசை கல்லினை சூடுபடுத்தி கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

.  ஒரு சுத்தமான துணியில் ஒரு உருண்டையினை வைத்து அடையினை தட்டி கொள்ளவும். 


.  தோசை கல்லில் 1 தே.கரண்டி அளவு நெய் ஊற்றி தட்டி வைத்துள்ள அடையினை போட்டு வேகவிடவும்.

.  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.

( கவனிக்க : திருப்பும் பொழுது அடை உடைந்து விட்டாலோ அல்லது வேகும் பொழுதே உடைவது மாதிரி இருந்தாலோ பயம் வேண்டாம். இந்த Recipeயிற்கு அடை உடைந்தால் நல்லது தான். நாம் கடைசியில் அடையினை பிச்சுபோட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். )


.  இது மாதிரி அனைத்து உருண்டைகளையும் அடைகளாக தட்டி கொள்ளவும். அடையினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அதனை சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.

.  வெள்ளை எளினை வறுத்து கொள்ளவும்(Dry Roast).


.  மிக்ஸியில் ராகி துண்டுகள் பாதியினை போட்டு நன்றாக பொடித்து தனியாக வைக்கவும்.


.  திரும்பவும் அதே மிக்ஸியில் மீதி துண்டுகள் + வறுத்த வேர்க்கடலை சேர்த்து அதே மாதிரி நன்றாக பொடித்து கொள்ளவும். 


.  வெல்லத்தினையும் பொடித்து வைக்கவும். ( விரும்பினால் வெல்லத்தினை துறுவி கொள்ளலாம். அதே மாதிரி வெல்லத்திற்கு பதிலாக Brown Sugar / Coconut Sugar  என்று பயன்படுத்தலாம். ஆனால் Original சுவை இருக்காது. )


.  இப்பொழுது பாத்திரத்தில் பொடித்த ராகி + வேர்க்கடலை + வெல்லம் + வறுத்த எள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


.  1 மேஜை கரண்டி அளவு நெய் ஊற்றி உருண்டைகளை பிடித்து வைக்கவும். (அதிகம் நெய் சேர்க்க வேண்டாம். கொடுதுள்ள அளவே போதுமானது, )


.  சுவையான சத்தான சிமிலி ரெடி. இதனை 1 வாரம் வரை கெடாமல் வைத்து இருந்து தினம் 1 - 2 உருண்டைகள் சாப்பிடலாம்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

4 comments:

Veena Theagarajan said...

very healthy laddoo .. Ragi is my most fav grain.. tempting too much

Ranjani said...

Looks healthy and delish..

புதுகைத் தென்றல் said...

சிமிலி உருண்டை நவராத்திர்யின் போது கட்டாயம் செய்யப்படும் நைவேத்தியம். பெண் பெரிய மனுஷியானாள் கண்டிப்பாய் இதை செய்வார்கள். பெண்களுக்கு அருமருந்து இது. பகிர்வுக்கு நன்றி

Farin Ahmed said...

Such a healthy ladoo..love it

Related Posts Plugin for WordPress, Blogger...