வெண்பொங்கல் டிபன் சாம்பார் - Tiffin Sambar Recipe for Venpongal - Side dish for Pongal


print this page PRINT
இந்த டிபன் சாம்பார் பொங்கலுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.

இதில் நான் பருப்புடன் கத்திரிக்காய் சேர்த்து வேகவைத்து செய்து இருக்கின்றேன். கத்திரிக்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும். விரும்பினால் சேர்க்கவும்.

இதில் நாமே வறுத்து அரைத்த பொடியினை சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த வறுத்த பொடியில் தேங்காயினை மட்டும் சேர்க்காமல் அரைத்து கொண்டு இதே மாதிரி செய்தால் இட்லி / தோசைக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  சின்ன வெங்காயம் - 1 கப்
   .  தக்காளி - 1
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
   .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

பருப்பு வேகவைக்கும் பொழுது :
   .  துவரம் பருப்பு - 1/2 கப்
   .  பாசிப்பருப்பு - 1/2 கப்
   .  கத்திரிக்காய் - 1 பெரியது
   .  பச்சை மிளகாய் - 2
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

வறுத்து அரைத்து கொள்ள :
   .  கடலைப்பருப்பு - 1 மேஜை கரண்டி
   .  தனியா - 1 மேஜை கரண்டி
   .  காய்ந்த மிளகாய் - 4 
   .  தேங்காய் துண்டுகள் - 1 மேஜை கரண்டி

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு , வெந்தயம் - தாளிக்க


செய்முறை :
 .  துவரம் பருப்பு + பாசிப்பருப்பினை கழுவி வைத்து கொள்ளவும். புளியினை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

 .  கத்திரிக்காயினை Medium  துண்டுகளாக வெட்டி வைக்கவும். இத்துடன் மஞ்சள் தூள் + பச்சைமிளகாய் + 3 கப் தண்ணீர் + பருப்பு சேர்த்து பிரஸர் குக்கரில் 4 - 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


 .  வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.


 .  பிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும் அதனை திறந்து நன்றாக மசித்து கொள்ளவும்.


 .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் தாளித்து அத்துடன் சின்ன வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 .  வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


 .  இத்துடன் புளி தண்ணீர் + மசித்த பருப்பு + உப்பு + 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


 .  நன்றாக கொதிக்கும் பொழுது அரைத்த பவுடரில் 2 மேஜை கரண்டி அளவு + பெருங்காயம் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


 .  கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். இந்த சாம்பார் பொங்கலுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பராக இருக்கும்.


6 comments:

Veena Theagarajan said...

perfect combo.. What a way to start the day

இராஜராஜேஸ்வரி said...

அருமையான காம்பினேஷன்...

Niloufer Riyaz said...

yumm.. perfect for any day

Farin Ahmed said...

Super Sambar and Perfect side dish for idli/dosa..love it sis

Gita Jaishankar said...

My mom's preparation is also like this...miss that very much...it looks so good with the pongal :)

'நெல்லைத் தமிழன் said...

நல்லா இருக்கும்மா. வெந்தயம் கொஞ்சம் ஜாஸ்தி வறுபட்டா கசப்பு அதிகமாயிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...