மிளகு கோழி வறுவல் - Milagu Kozhi Varuval Recipe - Pepper Chicken Fry - Chicken Recipes


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய வறுவல். இதில் கவனிக்க வேண்டிய சில,

கொடுத்துள்ள அளவு தக்காளியினை விட அதிகம் சேர்க்க வேண்டாம். விரும்பினால் தக்காளியினை அரைத்து செய்வதினை விட அப்படியே பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

சிக்கனை அப்படியே வேகவிடுவதினை விட தட்டு போட்டு மூடி வேகவிட்டால் சிக்கன் Moistஆக இருக்கும். இல்லை என்றால் சிறிது  வறண்டு Hardஆன மாதிரி இருக்கும்.

Freshly Ground Pepper Powder சேர்த்தால் நன்றாக இருக்கும். தண்ணீர் ஊற்றி வேகவைக்க தேவையில்லை. விரும்பினால் 2 - 3 மேஜை கரண்டி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் அதிகம் சேர்த்தால் அது Gravy மாதிரி ஆகிவிடும். அதனால் சிக்கனுக்கு எற்ற மாதிரி சேர்த்து கொள்ளவும். அவரவர் காரத்திற்கு ஏற்ப காரத்தினை சேர்த்து கொள்ளவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிக்கன் - 1/2 கிலோ
  .  வெங்காயம் - 2
  .  தக்காளி - 1 சிறியது
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  கொத்தமல்லி - கடைசியில் சேர்க்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  கரம் மசாலா - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  பட்டை - 1 துண்டு

கடைசியில் தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
  .  பொடித்த மிளகு - 1 தே.கரண்டி (சுமார் 20 மிளகு பொடித்தது)
  .  கருவேப்பிலை - 10 இலை


செய்முறை :
.  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


.  கடாயினை சூடுபடுத்தி அதில் எண்ணெய் ஊற்றி சோம்பு + பட்டை தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


.  இஞ்சி பூண்டு விழுது சிறிது வதங்கியதும், அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

.  வெங்காயம் வதங்கிய பிறகு, அதில் அரைத்த தக்காளி விழுது +  தூள் வகைகளையினை சேர்த்து கலந்து நன்றாக 4 - 5 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


.  வெங்காயம் வதங்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி தட்டு போட்டு வேகவிடவும்.


.  கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து சிக்கனுடன் சேர்த்து கிளறவும் மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


.  பறிமாறும் பொழுது சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து பறிமாறவும்.


.  சுவையான மிளகு கோழி வறுவல் ரெடி. இதனை சாதம், கலந்த சாதம், சாம்பார், ரசம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.பச்சை மிளகாய் சட்னி - Pacha Milagai Chutney Recipe - Green Chili Chutney - Sidedish for Idli / Dosai


print this page PRINT

என்னுடைய Blog Reader திருமதி. Kasthuri அனுப்பிய ரெஸிபி இது. நன்றி கஸ்தூரி.  அதனை நான் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

எங்க வீட்டில் இதே மாதிரி பச்சை மிளகாயிற்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்து கார சட்னி செய்வோம். ஆனால் பச்சை மிளகாய் சேர்ப்பதால் சுவையே மிகவும் வித்தியசமாக சூப்பராக இருக்கின்றது.

இதில் Correctஆன அளவில் காரம் + புளிப்பு இருந்தால் தான் சட்னி சுவையாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சட்னி செய்ய தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பச்சை மிளகாய் - 10
  .  பூண்டு - 10 பல் தோல் நீக்கியது
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  புளி - நெல்லிக்காய் அளவு / புளி பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு - தாளிக்க
  .  உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
.  வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் + பூண்டு சேர்த்து முதலில் வதக்கவும்.


.  அத்துடன் வெங்காயம் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  கடைசியில் புளி + உப்பு சேர்த்து 2 - 3 நிமிடங்கள் ஆறவிடவும்.


.  வதக்கிய பொருட்கள் சிறிது ஆறிய பிறகு, அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். (விரும்பினால் 1 - 2 மேஜை கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகம் சேர்க்க வேண்டாம். )


.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

.  சுவையான  பச்சைமிளகாய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.


Homemade Condensed Milk recipe - Using Milk Powder


print this page PRINT
எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய Condensed Milk recipe இது. இதில் பாலிற்கு பதிலாக பால் பவுடரினை பயன்படுத்தி செய்வதால் 2 - 3 நிமிடங்களிலேயே Condensed Milkயினை தயார் செய்துவிடலாம்.

கடைகளில் கிடைக்கும் Icing Sugarயில்  Corn Starch சேர்த்து இருப்பாங்க... Corn Starch சேர்ப்பதினால் பொடித்த சக்கரை கட்டியாகமல் இருக்கும்.

நாம் வீட்டிலேயே Icing Sugar செய்ய விரும்பினால் 1 கப் பொடித்த சக்கரைக்கு 1 தே.கரண்டி Corn Starch சேர்த்து கொள்ளவும். 

( Icing Sugar = Mix 1 Cup Powdered Sugar + 1 Tsp Corn Starch )


நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

செய்ய தேவைபப்டும் நேரம் : 2 - 3 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் பவுடர் / Milk Powder - 1 கப்
  .  பொடித்த சக்கரை / Icing Sugar - 1/2 கப்
  .  வெண்ணெய் (Butter Room temperature) - 3 மேஜை கரண்டி
  .  சூடான தண்ணீர் / Hot water - 1/2 கப்

செய்முறை :
  .  முதலில் தண்ணீரினை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

  .  மிக்ஸியில் பால் பவுடர் + பொடித்த சக்கரை + வெண்ணெய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.


 . இத்துடன் சூடான தண்ணீர் சேர்த்து மேலும் அனைத்தும் கலந்து கொள்ளுமாறு அரைக்கவும்.


 .  இப்பொழுது condensed Milk ரெடி. இதனை Sweets செய்யும் பொழுது பயன்படுத்தி கொள்ளவும்.


கவனிக்க :
கண்டிப்பாக நல்ல Brand Milk Powderயினை வாங்கவும். 

இதனை Fridgeயில் வைத்து 1 வாரத்திற்குள் பயன்படுத்திவிடவும்.

Icing Sugarயினை கடைகளில் Baking section தேடினால் கிடைக்கும். விரும்பினால் வீட்டிலேயே செய்து கொள்ளவும்.

Icing Sugarயிற்கு பதிலாக வெரும் பொடித்த சக்கரை கூட பயன்படுத்தலாம்.

மிக்ஸியில் அடித்து கொள்வதற்கு பதிலாக பத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கட்டி இல்லாமல் கரைத்து 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டால் condensed Milk ரெடி.


அவரைக்காய் சாம்பார் - Avaraikkai Sambar Recipe - Sambar for Rice


நிறைய விதமான காய்கள் சேர்த்து விதவிதமாக சாம்பார் செய்வோம். ஆனால் அவரைக்காய் சேர்த்து செய்யும் சாம்பார் வித்தியசமாக சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்யும் பொழுது சிறிய அவரைக்காயினை விட பெரிய பட்டை அவரைக்காய் வைத்து செய்யவும். அது தான் ரொம்ப சுவையாக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·      அவரைக்காய்– 1/4 கிலோ 
·        துவரம் பருப்பு – 1 கப்
·        வெங்காயம் - 1
·        தக்காளி – 1
·        கருவேப்பில்லை - சிறிதளவு
·        கொத்தமல்லி – கடைசியில் சேர்க்க
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

கரைத்து கொள்ள :
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு / புளி பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
·        தண்ணீர் – 1 கப்

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2  தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க


செய்முறை :
·        பிரஸர் குக்கரில் கழுவிய துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். புளியினை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

·    வெங்காயம் +  தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அவரைக்காயின் காம்பினை நீக்கி அதனை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

·    பிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும், குக்கரினை திறந்து பருப்பினை நன்றாக மசித்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் சேர்த்து தாளித்து அத்துடன் முதலில் வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

·        வெங்காயம் சிறிது வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன்  அவரைக்காயினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


·     இப்பொழுது அவரைக்காயுடன் , சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + புளி கரைசல் + வேகவைத்த பருப்பு + மேலும் 1  கப் தண்ணீர் சேர்த்து கலந்து  வேகவிடவும்.

·  சாம்பார் நன்றாக கொதிக்கும் சமயம் பெருங்காயம் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.·        கடைசியில் கொத்தமல்லி தூவும். சுவையான  அவரைக்காய் சாம்பார் ரெடி. இதனை வறுவல், பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.Collection of Pongal Recipes - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...பொங்கலோ பொங்கல்...


Kovil Venpongal Sakkarai Pongal Manja Pongal Paal Pongal
Varagu Pongal Godhumai Rava Pongal Bulgur Pongal Grits Pongal
Barley Sweet Pongal Rava Pongal Venpongal Sambar Tiffin Sambar

பன்னீர் ரைஸ் - Paneer Rice Recipe - Healthy Lunch Box Menu


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான கலந்த சாதம் இது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க..

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டும் தான் சேர்த்து இருக்கின்றேன். அதே மாதிரி இதில் விரும்பினால் சிறிது இஞ்சி சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

பன்னீரை துறுவதற்கு பதிலாக சிறிய துண்டுகளாக கூட வெட்டி சேர்க்கலாம்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வேகவைத்த சாதம் - 2 கப்
   .  பன்னீர் துறுவியது - 1 கப்
   .  வெங்காயம் - 1 சிறியது
   .  பச்சைமிளகாய் - 3
   .  கருவேப்பிலை - 5 இலை
   .  கொத்தமல்லி - கடைசியில் தூவ

   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1/2 தே.கரண்டி
   .  சீரகம் - 1 சிட்டிகை அளவு
   .  பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
. வெங்காயத்தினை நீளமாக வெட்டி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். பன்னீரை துறுவி கொள்ளவும்.  

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு + உளுத்தம்பருப்பு + கடலைப்பருப்பு + சீரகம் + பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.


அத்துடன் வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் துறுவிய பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.


கடைசியில் வேகவைத்த சாதம் + கொத்தமல்லி சேர்த்து கிளறிவிடவும்.


சுவையான சத்தான ரைஸ் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


தக்காளி தொக்கு - Thakkali Thokku Recipe - Side dish for Idli , Dosai - Tomato Thokku recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சுவையான தக்காளி தொக்கு இது. இட்லி , தோசை, சப்பாத்திக்கு இது சூப்பர்ப் காம்பினேஷன்.

இதில் தக்காளியுடன் தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு தான் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இத்துடன் பச்சை மிளகாய் சேர்ப்பது நன்றாக இருக்கும்.

இட்லி / தோசைக்கு செய்யும் பொழுது தண்ணீர் கூடுதலாகவும், அதே மாதிரி சப்பாத்திக்கு செய்யும் பொழுது தண்ணீர் சிறிது குறைவாக சேர்த்து கொள்ளவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வெங்காயம் - 1 பெரியது
   .  தக்காளி - 3
   .  பச்சை மிளகாய் - 3
   .  கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  வெந்தயம் - 4 - 5
   .  உளுத்தம் பருப்பு -1/2 தே.கரண்டி


செய்முறை :
.  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியினை நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.

.  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு + வெந்தயம் + உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


.  வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.


.  வதக்க வதக்க தக்காளியில் இருந்து தண்ணீர் வரும்.  அந்த தண்ணீரிலேயே நன்றாக குழைந்து கரையும் வரை வதக்கவும். 


.  தக்காளி நன்றாக குழைந்த பிறகு அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 3  - 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


.  கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

.  சூடான இட்லி, தோசையுடன் இந்த தக்காளி தொக்குடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...