அவரைக்காய் சாம்பார் - Avaraikkai Sambar Recipe - Sambar for Rice


நிறைய விதமான காய்கள் சேர்த்து விதவிதமாக சாம்பார் செய்வோம். ஆனால் அவரைக்காய் சேர்த்து செய்யும் சாம்பார் வித்தியசமாக சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்யும் பொழுது சிறிய அவரைக்காயினை விட பெரிய பட்டை அவரைக்காய் வைத்து செய்யவும். அது தான் ரொம்ப சுவையாக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·      அவரைக்காய்– 1/4 கிலோ 
·        துவரம் பருப்பு – 1 கப்
·        வெங்காயம் - 1
·        தக்காளி – 1
·        கருவேப்பில்லை - சிறிதளவு
·        கொத்தமல்லி – கடைசியில் சேர்க்க
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

கரைத்து கொள்ள :
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு / புளி பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
·        தண்ணீர் – 1 கப்

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2  தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க


செய்முறை :
·        பிரஸர் குக்கரில் கழுவிய துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். புளியினை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

·    வெங்காயம் +  தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அவரைக்காயின் காம்பினை நீக்கி அதனை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

·    பிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும், குக்கரினை திறந்து பருப்பினை நன்றாக மசித்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் சேர்த்து தாளித்து அத்துடன் முதலில் வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

·        வெங்காயம் சிறிது வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன்  அவரைக்காயினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


·     இப்பொழுது அவரைக்காயுடன் , சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + புளி கரைசல் + வேகவைத்த பருப்பு + மேலும் 1  கப் தண்ணீர் சேர்த்து கலந்து  வேகவிடவும்.

·  சாம்பார் நன்றாக கொதிக்கும் சமயம் பெருங்காயம் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.·        கடைசியில் கொத்தமல்லி தூவும். சுவையான  அவரைக்காய் சாம்பார் ரெடி. இதனை வறுவல், பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.2 comments:

Srinivasan V MEG said...

வணக்கம்,செய்து பார்த்தோம்,உண்மையிலேயே மிகவும் அருமையான ருசியும் மணமும்.ஒரே தடவையில் தீர்ந்து விட்டது...மிக்க நன்றி.....

Niloufer Riyaz said...

Sambhar looks delicious !!

Related Posts Plugin for WordPress, Blogger...