மிளகு கோழி வறுவல் - Milagu Kozhi Varuval Recipe - Pepper Chicken Fry - Chicken Recipes


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய வறுவல். இதில் கவனிக்க வேண்டிய சில,

கொடுத்துள்ள அளவு தக்காளியினை விட அதிகம் சேர்க்க வேண்டாம். விரும்பினால் தக்காளியினை அரைத்து செய்வதினை விட அப்படியே பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

சிக்கனை அப்படியே வேகவிடுவதினை விட தட்டு போட்டு மூடி வேகவிட்டால் சிக்கன் Moistஆக இருக்கும். இல்லை என்றால் சிறிது  வறண்டு Hardஆன மாதிரி இருக்கும்.

Freshly Ground Pepper Powder சேர்த்தால் நன்றாக இருக்கும். தண்ணீர் ஊற்றி வேகவைக்க தேவையில்லை. விரும்பினால் 2 - 3 மேஜை கரண்டி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் அதிகம் சேர்த்தால் அது Gravy மாதிரி ஆகிவிடும். அதனால் சிக்கனுக்கு எற்ற மாதிரி சேர்த்து கொள்ளவும். அவரவர் காரத்திற்கு ஏற்ப காரத்தினை சேர்த்து கொள்ளவும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சிக்கன் - 1/2 கிலோ
  .  வெங்காயம் - 2
  .  தக்காளி - 1 சிறியது
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  கொத்தமல்லி - கடைசியில் சேர்க்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  கரம் மசாலா - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  பட்டை - 1 துண்டு

கடைசியில் தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
  .  பொடித்த மிளகு - 1 தே.கரண்டி (சுமார் 20 மிளகு பொடித்தது)
  .  கருவேப்பிலை - 10 இலை


செய்முறை :
.  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


.  கடாயினை சூடுபடுத்தி அதில் எண்ணெய் ஊற்றி சோம்பு + பட்டை தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


.  இஞ்சி பூண்டு விழுது சிறிது வதங்கியதும், அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

.  வெங்காயம் வதங்கிய பிறகு, அதில் அரைத்த தக்காளி விழுது +  தூள் வகைகளையினை சேர்த்து கலந்து நன்றாக 4 - 5 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


.  வெங்காயம் வதங்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி தட்டு போட்டு வேகவிடவும்.


.  கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து சிக்கனுடன் சேர்த்து கிளறவும் மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


.  பறிமாறும் பொழுது சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து பறிமாறவும்.


.  சுவையான மிளகு கோழி வறுவல் ரெடி. இதனை சாதம், கலந்த சாதம், சாம்பார், ரசம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று இது போல் செய்வதாக சொன்னார்கள்... நன்றி...

GEETHA ACHAL said...

ரொம்ப சந்தோசம்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...